meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2012-01-08 | computer from village computer from village: 2012-01-08 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், ஜனவரி 10, 2012

இசையும் படமும்


அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் அதே போல் தான் சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.ambient-mixer.com
இயற்கையில் இருந்து வரும் மெல்லிய இசை நம் மனதிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில்
இந்ததளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்கு தகுந்தபடி மாற்றி அமைக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதிற்கு ஒய்வளிக்கும். இந்தத்தளம் கண்டிப்பாக இயற்கையை நேசிக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும்.

சிறு தொழிலதிபர்களுக்கு உதவும் இலவச பயனுள்ள ஆன்லைன் அக்கவுண்டிங் மென்பொருள்.

புதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து அக்கவுண்டிங் மென்பொருள் உருவாக்க வேண்டும்  என்ற அவசியம் இல்லாமல் ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் இணையதளம் ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரிபார்த்துக்கொள்வதற்கும் நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஆன்லைன் மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவத்ற்கு வசதியாக அக்கவுண்டிங் மென்பொருள் தளம் ஒன்று உள்ளது.
இணையதள முகவரி : http://numia.biz
இத்தளத்திற்கு சென்று Register Now For Free என்ற பொத்தானை சொடுக்கி தேவையான தகவல்களை கொடுத்து ஒரு இலவச கணக்கை திறந்து கொள்ளவும்.அதன் பின் எளிதாக நம் நிறுவனத்தின் அக்கவுண்டிங் தகவல்களை கொடுக்க வேண்டியது தான். இணைய இணைப்பு மட்டும் தான் தேவை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுகுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.பல பயனார்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும்  ஒரு அக்கவுண்ட் உருவாக்கி கொடுத்து அவர்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யலாம்.தேவைப்படும் தகவல்களை Report எடுத்து பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதிதாக ஒரு மென்பொருள் வாங்கி அதை நம் கணினியில் நிறுவி , குறிப்பிட்ட தகவல் தேவைப்படும் நேரத்தில் அங்கு சென்று தேடுவதற்கு பதில் ஆன்லைன் மூலம் நம் அக்கவுண்டிங் தகவல்களை பாதுகாப்பாக சேமித்து மொபைல் போனில் உள்ள இணையம் வழியாகவும் நம் தகவல்களை அப்டேட் செய்யலாம். இதை எல்லாம் விட  இத்தளத்தில் கூடுதல் சிறப்பு ஒன்றும் உள்ளது அதாவது இத்தளத்தில் இருக்கும் Video Tutorials என்பதை சொடுக்கி ஆரம்பம் முதல் இந்த அக்கவுண்டிங் மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று Screen video உடன் சொல்லி கொடுக்கின்றனர். கண்டிப்பாக இந்தப்பதிவு சிறிய நிறுவனம் நடத்துபவர்களுக்கும், ஆன்லைன் இலவச அக்க்கவுண்டிங் மென்பொருள் தேடுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலதிகாரிகளை ஈர்க்கும்படி பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட்டா  உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட்டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர் ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பலமணி நேரம் செலவு செய்தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.resumesimo.com
இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை  சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர் , முகவரி ,  கல்வித்தகுதி , இதரதகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.பல்வேறு வகையான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள்ள்லாம். எதையெல்லாம் மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது. எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனைவரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும்போது
பிரிண்ட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்கி நம் வாழ்க்கையில் புது திருப்பத்தை உருவாக்கும் இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 

அழகான தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி வைக்க உதவும் பயனுள்ள தளம்.

அழகான இனிமையான தமிழ் பெயர்களை நம் குழந்தைகளுக்கு சுட்டுவதற்கு உதவியாக ஆயிரக்கணக்கான தமிழ் பெயர்களை கொண்டு ஒரு தளம்  நட்சத்திரப்படி பெயர் வைக்க உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தமிழ் பெயர்கள்
இணைய உலகில் தமிழ் பெயர்களை தேட வேண்டும் என்றால் அதற்காக பல மணி நேரம் செலவு செய்தும் சரியான பெயரை தேர்வு செய்ய முடியாமல் இருக்கும் நமக்கு உதவ ஒரு தளம் ஆயிரக்கணக்கான அழகான தமிழ்பெயர்களை கொண்டுள்ளது.
இணையதள முகவரி : http://www.peyar.in
பெயர் என்று இருக்கும் இந்ததளத்தில் அழகான தமிழ்பெயர்கள் அகர வரிசைப்படி கொடுத்துள்ளனர், எளிதாக பெயர் வைக்க உதவியாக எந்த எழுத்தில் நம் குழந்தையின் பெயர் இருக்க வேண்டும் என்று பார்த்து அந்த வரிசையில் சென்று எளிதாக தேடலாம், இத்துடன் நட்சத்திரப்படி நம் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பக்கத்திலும் 100 பெயர்கள் விதம் காட்டுகின்றனர். இப்படி நாம் பார்க்கும்  பெயர்களை எல்லாம் ” கோப்பு வடிவில் பெறுக “ என்பதை சொடுக்கி கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம். கண்டிப்பாக தமிழில் அழகான இனிமையான பெயர் தேடும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.