பான் கார்டு பெற எளிய வழிகள்
நிரந்தரக் கணக்கு எண் என்ற பத்து இலக்க எண்தான் PAN-
(Permanent Account Number). இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வோர் இந் தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ- எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அவசியம்.

இந்த பான் கார்டை பெற தரகர்கள் மூலம் வாங்கினால், 200 முதல் 300 ரூபாய் வரை செலவு ஆகும். ஆனால், நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை நடுவங்களில் ஏதாவது ஒன்றில் நீங்களே விண் ணப்பித்தால், கட்டணம் 94 ரூபாய் மட்டுமே. இதுதவிர ஆன்லைன் மூலமும் (http://www.utiisl.co.in/) விண்ணப்பிக்கலாம்!
இதற்கு, உங்கள் புகைப்படத் துடன் கூடிய அடையாள ஆவ ணம் ஒன்றின் நகல் அதாவது, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை போன்றவற்றில் ஒன்று. அடுத்து, முகவரிக்கான ஆதாரமாக மின் கட்டண ரசீது, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் ஒன்றும், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஒன்றையும் இணைத்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்து விடும்.!
விண்ணப்பப் படிவத்தில் ஃபர்ஸ்ட் நேம் , மிடில் நேம், சர் நேம் என் கிற பகுதி இருக்கும். இதில் ஃபர்ஸ்ட் நேம் என்கிற இடத்தில் உங்கள் பெயரையும், சர் நேம் என்கிற இடத்தில் உங்கள் தந்தை யின் பெயரையும் எழுதவும். பொதுவா க தமிழர்கள் ‘மிடில் நேம்’ வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை என்பதா ல், அந்தக் கட்டத் தைக் காலியாக விட்டுவிடலாம்.
திருமணமான பெண்கள் விண் ணப்பத்தில் தந்தை பெயரை மட்டும் தான் குறிப்பிட வே ண்டும். ஏற்கெனவே பான் கார் டு வாங்கிய பெண்கள் திரும ணத்துக்குப் பிறகு முகவரியை மாற்றிக்கொள்வது அவசியம்.