meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2012-05-20 | computer from village computer from village: 2012-05-20 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

திங்கள், மே 21, 2012

குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை எளிமையாக கற்றுக் கொடுக்க


குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.


நம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்.ஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.readingbear.org
போட்டி என்றாலே குழந்தைகள் மகிழ்ச்சியாகிவிடுகின்றனர் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளமும் ஒவ்வொரு பாடத்திற்கும் குவிஸ் போட்டி நடத்தி தன்னுடைய ஆங்கில அறிவில் நிலை என்ன என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.இத்தளத்திற்கு Getting Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் எப்படி குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்கலாம் என்ற வழிமுறையை தெரிவித்தும் இவர்கள் சொல்லி கொடுப்பதை எப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றியும் விவரிக்கின்றனர்.வலது பக்கத்தின் மேல் இருக்கும் Register என்ற பொத்தானை சொடுக்கி புதிய கணக்கு ஒன்று இலவசமாக உருவாக்கி கொள்ளலாம். 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சொல்லி கொடுக்கின்றனர், ஒவ்வொரு பாடமும் நாம் கற்ற பின் உடனடியாக அதன் அருகில் இருக்கும் Take a Quiz என்ற பொத்தானை சொடுக்கி கற்று கொண்டதை சோதித்து கொள்ளலாம். குழந்தைகள் மட்டும் தான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை நாமும் ஒரு முறை இதைப்பார்த்தால் நம் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.

ஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்.
இணையதள முகவரி : http://www.readingbear.org
போட்டி என்றாலே குழந்தைகள் மகிழ்ச்சியாகிவிடுகின்றனர் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளமும் ஒவ்வொரு பாடத்திற்கும் குவிஸ் போட்டி நடத்தி தன்னுடைய ஆங்கில அறிவில் நிலை என்ன என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.இத்தளத்திற்கு Getting Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் எப்படி குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்கலாம் என்ற வழிமுறையை தெரிவித்தும் இவர்கள் சொல்லி கொடுப்பதை எப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றியும் விவரிக்கின்றனர்.வலது பக்கத்தின் மேல் இருக்கும் Register என்ற பொத்தானை சொடுக்கி புதிய கணக்கு ஒன்று இலவசமாக உருவாக்கி கொள்ளலாம். 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சொல்லி கொடுக்கின்றனர், ஒவ்வொரு பாடமும் நாம் கற்ற பின் உடனடியாக அதன் அருகில் இருக்கும் Take a Quiz என்ற பொத்தானை சொடுக்கி கற்று கொண்டதை சோதித்து கொள்ளலாம். குழந்தைகள் மட்டும் தான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை நாமும் ஒரு முறை இதைப்பார்த்தால் நம் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் பாடம் நடத்த நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30 க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள்


விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம்  என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி :http://www.nobelprize.org/educational/all_productions.html
நோபல் பரிசு என்ற இத்தளத்திற்கு சென்று பல வகையான அறிவை வளர்க்கும்  விளையாட்டுகளில் ஒவ்வொன்றாக விளையாட ஆரம்பிக்கலாம் மன்னிகவும் அறிவை வளர்க்க ஆரம்பிக்கலாம், ஒவ்வொரு விளையாட்டுக்கு முன்னும் அந்த விளையாட்டு பற்றி விதிமுறைகளுடன் கூடுதலாக விபரங்களையும் அளிக்கின்றனர். உதாரணமாக எந்த ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் இருந்து அதிகப்படியான தகவல்களையும் புதுமையான பல விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே சிறப்பாக இருக்கிறது, விளையாட்டின் விதிமுறை தெரிந்து கொண்டு நாம் விளையாடும் விளையாட்டுகள் நம் அறிவை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் இந்த நோபல் பரிசு தளம் பயனுள்ளதாக இருக்கும்.

பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.


கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.good-tutorials.com
CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும்  திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.


ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம் சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
விளம்பரத்தை சொடுக்கினால் போதும் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் பல கும்பல்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். கணினியில் புரோகிராம் எழுத்தெரியுமா ? உங்கள் புரோகிராம்கள் விலை போகாமல் இருக்கிறதா ? இனி எந்த கவலையும் வேண்டாம் உங்கள் புரோகிராம்களை எளிதாக ஆன்லைன் மூலம் விற்று பணம் சம்பாதிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.binpress.com
ஆன்லைன் மூலம் கணினித்துறையில் இருக்கும் பல நண்பர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று  இமெயில் மூலம் நம்மிடம் கேட்கும் கேள்விக்கு பதிலாக இந்தப்பதிவு இருக்கும். கணினி மொழிகளில் உங்களுக்கு எந்த மொழி தெரிந்தாலும் அந்த மொழியில் நீங்கள் எழுதும் புரோகிராம் Code -ஐ வாங்க  பல பேர் காத்திருக்கின்றனர். C முதல் VB வரை , ஜாவா முதல் ஆண்டிராய்டு வரை , C# முதல் PHp  வரை உங்கள் புரோகிராமை ஆன்லைன் மூலம் இத்தளத்தில் விற்பனைக்கு வைக்கலாம்.  விலையையும் நாமே நிர்ணயம் செய்து கொள்ளலாம். நாம் உருவாக்கிய புரோகிராம் தேவைப்படும்  நபர்கள் ஆன்லைன் மூலம் தேடி நம் புரோகிராம் அவர்களுக்கு பிடித்திருந்தால் நாம் தெரிவித்துள்ள பணத்தை செலுத்தி நம் புரோகிராமை வாங்கிக்கொள்கின்றனர். இப்போது அதிகமாக ஆண்டிராய்டு அப்ளிகேசன் தொடர்பான புரோகிராம்களை பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இத்தளத்தில் சென்று தேடி பலரது புரோகிராம்களை வாங்குகின்றனர் என்பதும் கூடுதல் செய்தி. இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் புரோகிராமையும் விற்பனை செய்யலாம்.  ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.


சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி  செய்தும்  Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு  சென்று சரிசெய்து
வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல்
Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்
Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு
கண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற
கட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code
மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்
ஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி
நம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,
இந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து
விட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு
மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://wickings.dk/WorldUnlock_v44_Setup.zip
இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். அடுத்து இந்த மென்பொருளை இயக்கி
நமக்கு எந்த மொபைல் Unlcok செய்ய வேண்டுமோ அதன்
நிறுவனத்தையும் மாடல்-ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்,
அடுத்து IMEI எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று
நம் மொபைலில்  *#06#  என்று கொடுத்ததும் நம் IMEI
எண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI
என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate
என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை
Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்
இதன்படி எளிதாக நம் மொபைலை Unlock செய்யலாம்.
மொபைல் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டிய மென்பொருள். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது புதிதாக
வந்திருக்கும் மொபைல் போனுக்கான Unlock code இந்த
மென்பொருளில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வீட்டில் இருந்தபடியே உங்கள் திறமையை கொண்டு எந்த முதலீடும் செய்யாமல் ஆன் லைனில் பாடம் நடத்தி வருமானம் பெற அரிய வாய்ப்பு


என்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்று பலர் இமெயில் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
படம் 1
வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.wiziq.com/teaching-online/
ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி நமக்கென்று திறமையான மொழி அல்லது நம் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தே மாதம் ஒரு பெரியத் தொகை சம்பளமாக பெறலாம். பாடம் நடத்துவதற்கு நமக்கு உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது, அடிப்படை கணினி அறிவு இருந்தால் மட்டும் போதும், இங்கு மேலே குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Start your 30 day free trial  என்ற பொத்தனை சொடுக்கி நம் தகவல்களை கொடுத்து உள்நுழையலாம் 1 மாதம் இலவசமாக தங்களின் சேவையை கொடுக்கின்றனர், விர்ச்சுவல் கிளாஸ் ரூம் மூலம் வெப் கேமிரா மூலம் ஆசிரியர் நேரடியாக தங்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம், மாணவர் தங்கள் கேள்விகளை மைக் மூலமாக பேசியும் அல்லது வார்த்தையாக தட்டச்சு செய்து ஆசிரியரிடம் கேட்கலாம் , ஒரே வரைபலகையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தனை அத்தனை மாணவர்களுக்கும் தங்கள் கணினித்திரையில் நேரடியாக பார்க்கலாம், பொறியியல் மாணவர்கள் தங்கள் கேள்விகளுக்கு , பிராஜெக்ட்களுக்கு இன்றும் விளக்கம் தேடி ஒவ்வொரு இடமாக செல்கின்றனர் ஆன்லைன் மூலம் பிராஜெக்ட்களுக்கு முழுமையான விளக்கம் அளித்து நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம், நமக்கு தமிழ் மட்டும் நன்றாக தெரியும் என்றால் அதை வைத்து ஆன்லைன் மூலம் தமிழ் சொல்லி கொடுக்க ரெடி என்று ஒரு வகுப்பை தொடங்கி பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும் , எந்த பணமும் செலுத்தமாலே நம் திறமையை வைத்து ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்ற இந்தப்பதிவு நம் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.