meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2013-10-06 | computer from village computer from village: 2013-10-06 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, அக்டோபர் 12, 2013




கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சல்; ஒவ்வாமை; மறதி; கண் நோய்கள் இன்னும் பிற  - 

 ஒரு நன்பரின் அனுபவங்களும் யோசனைகளும் 

நன்றி:- வழிகாட்டி


நாம கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கிறதுனால இதப் பத்தி கொஞ்சம் சொல்ல வேண்டியாதாப் போச்சு.  ஏன் கடமையும் கூடன்னு சொல்லலாம்.  நான் ஏற்கனவே கண்ணாடியை தூக்கி முகத்துல மாட்டிக்கிட்டு அலையுறேன்.  டாக்டர் கூட என்ன சொன்னார்னா குளிக்கும்போதும் சரி. தூங்கும்போது சரி.  மத்த நேரத்துல கண்ணாடியை கழட்டவே கூடாதுன்னு சொல்லிட்டாரு.  அப்பத்தான் பவர் கூடாதுன்னாரு.

அவர் சொல்றத வேத வாக்காக எடுத்துக்கிட்டு நான் குளிக்கும்போது கூட கண்ணாடியை கழட்டுறது இல்ல இந்த நாள் வரைக்கும். 

சிலபேர் கண்ணாடி அணிவதற்கு ஆசைப்படுவார்கள்.  ஆனால் அது எவ்வளவு தொல்லை என்பது அவர்களுக்கு அப்போது தெரியாது.  ஏதோ சின்ன பாய்ண்ட் அளவு வித்தியாசம் இருக்கும்.  ஏதேனும் நல்லா சாப்பிட்டு கண்ணுக்கு ரெஸ்ட் எடுத்து அதை சரிபண்றதை விட்டுட்டு கண்ணாடி அணிவதற்கு ஆசைப்பட்டோ, இல்ல விதிவசத்தால கண் டெஸ்ட் பண்ண போனா அவ்வளவுதான்.  முகத்துல கண்ணாடி மாட்டிக்கிட்டு வந்துர வேண்டியதுதான்.  அப்புறம் பவர் கூடுமே தவிர குறைய எள்ளளவும் சான்ஸ் இல்ல. 

எனக்கு காண்ட்டாக்ட் லென்ஸ் மாட்டுன அனுவம் எல்லாம் இருக்கு.  அது என்னன்னா? கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி அதாவது என்னோட கல்யாணத்து முன்னாடின்னு நினைக்கிறேன்.  பிகருங்க ஒன்னும் நம்மள கண்டுக்கல.  சரி நாம பொட்டைக்கண்ணாடி போட்டிருக்கிறதால பிகருங்க பார்க்கவில்லைனு நெனைச்சிக்கிட்டு  காண்டாக்ட் லென்ஸ் மாட்ட டாக்டரிடம் போனேன்.  அங்குள்ள கொஞ்ச வயசு நர்ஸ் என்னைப் பார்த்து சாப்டா ஹார்டானு கேட்டுச்சு.  உங்களுக்கே தெரியும் நம்மள பத்தி நாம ரொம்ப சாப்டுன்னு.  நானும் சாப்ட்னு சொல்லித் தொலைச்சேன்.  கண் டெஸ்ட் எல்லாம் பண்ணி  ஒருவாரம் கழிச்சு லென்ஸ் வாங்க வரச்சொன்னாங்க.  அன்னைக்கு தேதிக்கு 1500 செலவாகிவிட்டது.

நானும் அந்த ஒருவாரத்தை கழிக்க பட்ட பாடு இருக்கே. அடடா?  எப்படா இந்த சோடாப்புட்டியை கழட்டி தூக்கி எறிவது என்று நினைத்தேன்.  அப்புறம் ஒரு வாரம் கழிச்சு ஆஸ்பத்திரிக்கு போய் அந்த நர்ஸை பார்த்து இரண்டு பிளாஸ்டிக் குடுவையும் ஒரு சின்ன டப்பியில் எனது உயிரான காண்ட்டாக்ட் லென்ஸையும் கொடுத்து எது வலது இடதுன்னு சொல்லி எப்படி கண்ணுல மாட்டிக்கிறதுன்னு சொல்லியது.  அப்புறம் கண்ணாடியை பார்த்து லென்ஸை மாட்டிக்கிட்டு கண்ணாடியை ஒரு ஓரமா வச்சிட்டு பார்த்தால் தெள்ளத் தெளிவா தெரிஞ்சது.  ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.  பிகருங்க எல்லாம் அவனா இவன்னு மூக்குல விரல வைக்கும்னு  நினைச்சேன்.  ஆனா அந்த சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கல.

 நேரம் ஆக ஆக கண் எரிய ஆரம்பித்தது.  அடுத்த நாள் அதே டாக்டர் அதே நர்ஸ்.  விசயத்தை சொன்னதும் வழக்கம் போல சாப்டா ஹார்டான்னு கேட்டுச்சு.  நானும் சாப்ட்டுன்னு சொன்னேன்.  நீங்க ஹார்டுன்னு சொல்லியிருக்கனும்.  கொடைக்கானல் ஊட்டி இப்படி குளிர் பிரதேசத்துல இருக்குறவங்க தான் சாப்டு போடுவாங்க.  நீங்க ஹார்டு லென்ஸ்தான் போடனும்.  டாக்டரை பாருங்கன்னா.  

சரி இந்த விசயம் இப்படியே நிக்கட்டும்.  இதுக்கு முன்னாடி அதாவது இந்த கான்டாக்ட் விசயத்துக்கு ஒரு ரெண்டு வருடம் முன்பு ஒரு மரத்தடி ஜோசியனை பார்த்தேன்.  அவன் கை ரேகை பார்க்கிறவன்.  அந்தாளு இப்ப இல்லன்னு நினைக்கிறேன். 

நான் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்துவிட்டு இவ்வளவு சின்ன வயசிலேயே கண்ணாடி போட்டிருக்கியேப்பா.  நீ மனசு வச்சா இத கழட்டி தூர எறிந்திரலாமேன்னாரு.  நானும் அப்படியா சாமி.  அதுக்கு என்ன செய்யனும்.  எனக்கு ஆசைதான் கண்ணாடி ஒரு சமயம் மூக்குல அழுத்தி புண்ணாயிருது.  அந்த பெயிண்ட் இருக்கிறவரை ஒன்னுமில்லை.  மூக்குல உட்கார எடத்துல பெயிண்ட் போன அந்த இடம் புண்ணாயிருதுன்னேன்.  உடனே ஒரு 250 ரூபாய் செலவாகும் தம்பி.  உனக்காக வேண்டி தொண்ணூறு ரூபாய் கொடு போதும்,  மூனு நாளைக்கு 9 குளிகை தருவேன்.  உடனே பலன் இருக்காது. படிப்படியா சரியாயிடும்.  90 நாளாகும்னாரு.  நானும் அங்கே இங்கேன்னு அலைந்து வீட்டுக்கு தெரியாம ரூபாயை கொடுத்து அந்த கருப்பு கலர்ல மிளகு சைஸ்ல எலிப்புழுக்கை வடிவத்துல இருந்த குளிகையை இரவு படுக்கும் முன் 3 குளிகை வீதம் 3 நாளைக்குன்னு பேப்பர்ல மடித்து  வாங்கினேன்.

நான் பேசமா டைட்டிலை 3 வேளைக்கு 3 குளிகைன்னு வச்சிருக்கலோமோ என்னவோ?  டாபிக் வேற வேற ரூட்ல போகுது.  இருந்தாலும் பரவாயில்லை.  நமக்கு நடந்த சங்கதியை நாம நாலு பேருக்கு சொல்லி அவங்கள உஷார்படுத்தனும்ல.

அன்னைக்கு நைட்டு ரசம் சாப்பாட்டை முடித்ததும் மூனு எலிப்புழுக்கை குளிகையை வாயில் போட்டு தண்ணீரை ஊற்றினேன்.  அப்புறம் என்ன ஆச்சு கண்ணு நல்லா தெரிஞ்சதான்னு நீங்களும் ஆவலா கேட்கலாம்.  அத சொல்லும்போதே எனக்கு சிரிப்புத்தான் வருது.

நடுச் சாமத்துல வயிறை கலக்கிருச்சு.  ஒரு வயித்தாலதான் போங்க.  ஒரு நாலு ஐந்து வாட்டி இருக்கும்னு நினைக்கிறேன்.  வீட்ல என் அம்மாவிடம் விசயத்தை சொன்னதும்  அடப்பாவி மகனே அந்த மருந்தைக் காண்பிடா என்றார்கள்.

பேப்பரில் மடித்திருந்த அடுத்த நாள் மருந்தை எடுத்து காண்பித்ததும் எனது அம்மா டேய் இது கரேல்னு எலிப்புளுக்கை சைஸ்ல இருக்கும்.  இது எலிப்புழுக்கையோ என்னமோ?  தலையை சுற்றி தூர எறின்னு சொல்லிவிட்டார்கள்.  

நான் மருந்தை எறிய மனமில்லாமல் சோசியக்காரனிடம் தூக்கிக் கொண்டு ஓடினேன். மருந்தை சாப்பிட்டதும் வயிற்றை கலக்கி  வயிறு சரியில்லாமல் ஆகிவிட்டது.  மருந்தை மாற்றி கொடுத்துவிட்டீர்களா என கேட்டதற்கு, மருந்து எல்லா சரிதானப்பா.  அது அப்படித்தாம்பா இருக்கும்.  உனக்கு சூட்டு உடம்பு.  அதுனால நீ என்ன செய்யுறேன்னா மருந்தை விடாம தொடர்ந்து சாப்பிடு.  சோற்றுக்கற்றாழையை பனியில் நனைய வைத்து குளுகை சாப்பிட்ட பின் சாப்பிட்டுவிடு.

  அது எப்படின்னா எங்கனாலும் சோற்றுக்கற்றாழையை எடுத்து அதோட தோலை சீவி உள்ளே பனிபோல் இருக்கும் சோற்றை துண்டு துண்டாக நறுக்கி தட்டில் பரப்பி பனியில் காய வைத்து இரண்டு நாளைக்கு சாப்பிடு.  சரியாக போய்விடும்.  90 நாள் ஆகியும் கண் நல்லாத் தெரியலைன்னா என்ன வந்து கேளு.  நான் 30 வருடமா இங்க தான் இருக்கேன் என்றார்.

சோத்துக் கத்தாழையை ஒரு பேஸ்கட்பால் கோச்சர் வீட்டில் பறிக்கப்போய் பிரச்சனையானது ஒரு கிளைக்கதை.  அது இங்கே வேணாம்.
கடைசியில இப்ப 90 நாள் என்ன 900  நாளுக்கு மேலேயே ஆகியிருக்கும் போல. ஆனாலும் அந்த ஆள் என்ன குளிகையை கொடுத்தானோ?  ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

முதல்ல ஒரு கதை சொன்னேனே?  காண்டாக்ட் லென்ஸை பத்தி.... போய் டாக்டரைப் பார்த்தால் சொட்டு மருந்து எழுதிக்கொடுத்தார்.  அது தீர்ந்தும் என் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.  ஒரு ரெண்டு மணிநேரத்துல கண் உறுத்த ஆரம்பித்துவிடும்.  அப்ப நான் காலேஜ் சேர்ந்த புதிது என்று நினைக்கிறேன்.  அப்புறம் திரும்ப அதே நர்ஸ் டாக்டர் வேற சொட்டுமருந்து.  அப்புறமும் ... ம்கூம். தீர்ந்தபாடில்லை.  கடைசியில வெறுப்பு வந்து காண்டாக்ட் லென்ஸை எங்கவீட்டு பால்கனி வழியா தூக்கி எறிந்தேன்.  அப்போது என்னோட மனநிலை எப்படியிருந்தது தெரியுமா?  அடாடா......  சொல்ல முடியாத வேதனையாக இருந்தது.  

இது நடந்து கொஞ்ச வருஷங்களுக்கு பின் என்னோட வீட்டுக்காரி என்னை கண்ணாடி அணியாமல் எப்பொழுதும் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்தாள். அதன்விளைவாக நான் லேசர் சிகிச்சையை விசாரிக்க துவங்கினேன்.  அதற்கு ஏற்றாற்போல் என்னோட ஆபீசில் புதியதாக என்னைப்போல் டிசைனராக வேலைக்கு சேர்ந்த ஒருத்தனிடம் தற்செயலாக அதைப்பற்றி விசாரித்தேன்.

அவன் ஒரு வருடங்களுக்கு முன் லேசர் சிகிச்சை செய்து கொண்டதாகவும் முதலில் ஒரு கண்ணுக்கு செய்தார்கள்.  பின் அடுத்த கண்ணுக்கு கண் கருவிழியில் ஒரு பிளேடு போட்டு பின் லேசரை செலுத்தியதாக சொன்னான் என்று நினைக்கிறேன்.  நானாவது பரவாயில்லை அந்த கூறு கெட்டவன் 15000 செலவழித்திருக்கிறான்.  என்னோட பெரிய மரமண்டையாக இருந்திருப்பான் போல.  6 மாதம்கூட ஆகவில்லை படிப்படியாக கண்பார்வை குறைந்து பழைய நிலைக்கு ஆகிவிட்டது.  டாக்டரிடம் போய் கேட்டால் அதற்கு கேரண்டியில்லை என்று சொல்லிவிட்டாராம். இதுல நான் கொஞ்சம் சுதாரித்து கொண்டேன்.  இல்லையென்றால் என்னோட போனஸ் பணம் சேமிப்பு எல்லாம் பாழாகி இருக்கும்னு நினைக்கிறேன்.

இப்பவும் எனக்கு கண்ணுல பிரச்சனை இருக்கத்தான் செய்யுது.  கண் அடிக்கடி எரிச்சலா இருக்கும். கண்ணாடியில கண்ணின் கீழ்பகுதியில் பார்த்தால் எப்போதும் வெள்ளையாக நாக்குல புண்ணு வருமே வெள்ளையா அதுபோல சின்னதாக இருக்கிறது.  அடிக்கடி வந்து போகிறது.  ஆனாலும் நான் ஒரு எட்டு மணிநேரமாக கம்ப்யூட்டரை பார்க்கிறேன்.  அப்புறம் வீட்டிற்கும் போய் ஒரு ரெண்டு மூணு மணி நேரம்.  எப்போதும் கண் எரிச்சல்தான்.  அதோட தான் நான் எப்போதும் வேலை செய்யுறேன். இப்ப வெயில் காலம் வேற.  கைவசம் சொட்டு மருந்து எப்போதும் வைத்திருக்கும்படியாகிவிட்டது.  இதை நான் எப்படி சமாளிக்கிறேன்னு என்னோட அனுபவத்தை உங்களுக்கு சொல்லியாகவேண்டும்.

கம்ப்யூட்டரை அடிக்கடி பார்க்காமல் வேறு பக்கம் திருப்பி கொஞ்சம் சமாளிக்கலாம்தான்.  ஆனா என்னால அது முடியல.  வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில கூட வேலை வந்தால் அப்படியே உட்கார வைத்துவிடுவார் ஓனர்.  அப்ப எனக்கு கண் எரிச்சல் கூட அவ்வளவாக தெரியாது.  உடம்பே பற்றி எரியும்போது கண் எரிச்சல் எங்கே தெரியப்போகிறது,  நெட் வேற ஒரு பக்கம் என்னை இழுக்குது.  வேலை வேற அதிகம்.  வேலை இல்லாத நேரத்துல நெட்டுல எதேனும் தெரிந்துகொள்ளலாம் என்கிற ஆவல்ல சிக்கி கண்ணை புண்ணாக்கிவிடுகிறேன். 

நான் கண்ணை மூடி அப்பப்ப சாமாளித்து இந்த கண் எரிச்சலை சமாளிக்கலாம்னா அதுலேயும் ஒரு பிரச்சனையிருக்கு.
நான் கண்ணை மூடி சில நிமிடம் இருந்தால் அந்த நேரத்துல ஓனரோ. இல்ல மேனேஜரோ இல்ல கூட வேலை செய்யுற எவனாவது பார்த்தால்.? தூங்குறான்னு  நினைப்பானுங்க.  நம்ம கஷ்டம் அவனுக்கு எங்கே புரியப்போகுது.  ஏசியில வேலை பார்த்தால் ஒருவேளை கண் பாதிக்காதோ என்னவோ தெரியல?

இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா?  நம்மளே நாமே காப்பாத்திக்கனும்னு இப்ப இப்ப எவனாவது பிரிண்டிங் அடிக்க வந்த பார்ட்டிக்காரன் ஏதாவது டவுட் கேட்டால் உடனே சுதாரித்துவிடுவேன்.  அது பெரிய டவுட் போலவும் அதற்கு நான் யோசித்து தீர்த்து சொல்வதுபோல அது வந்து சார் ஏதோ அப்படின்னு சொல்லி கண்ணை மூடிக்கொள்வேன்.  பிறகு சில மணித்துளிகள் திறந்து ஏதேனும் நமக்கு தெரிஞ்சதை சொல்லி சாமாளிக்கிறேன்.

கிடைக்கும் நேரத்துல வேற எங்கனாலும் பார்த்து கண்ணை மெதுவாக மூடி பிறகு ஒரு கண்ணை மட்டும் திறந்து எவனாவது பார்க்கிறானா என்று லேசாக பார்ப்பேன்.  எவனும் பார்க்கவில்லை என்றால் ரெண்டு கண்ணையும் சில நொடிகள் மூடி அப்படியே சமாளிக்கிறேன்.

இத்தனைக்கும் நான் வேலை பார்க்கிற இடத்திலேயும் சரி வீட்டிலேயும் சரி எல்இடி 23இஞ்ச் மொக்கை மானிட்டர்தான். 
டைப்புரோன்னு ஒரு ஆன்லைன் ஜாப் இருக்கு.  டைப் குண்டக்க மண்டக்க தெரியும் அதை பார்த்து உடனே டைப் அடிக்கனும்.  ஒரு நாள் தான் வேலை செய்தேன். அடுத்து அந்த வேலையை நினைச்சாலே....... ரெண்டு மூனு எழுத்து நெளிந்து வளைந்து ஒட்டிக்கொண்டிருக்கும்.  அது என்ன  எழுத்துன்னு ரொம்ப உன்னிப்பா கவனிக்க வேண்டியிருக்கும்.  பார்வையை முழுவதும் அது ரொம்ப கூர்மையா நம்மள அறியாமலே இழுத்துவிடும்.  பதினைந்து செகண்டுக்குள்ள டைப் வேற பண்ணியாகனும்னு கூர்மையாக பார்த்து ஒருவழியா டக்கென்று டைப் அடித்து என்டர் அடித்தால் அடுத்த எழுத்து உனக்கு நான் சளைச்சவன் இல்லன்னு இன்னும் கொஞ்சம் நெளிஞ்சு ரொம்ப பேஜார் பண்ணும்.  கண் பார்வை சுத்தமா போகனும்னா அந்த ஆன்லைன் ஜாப் 100க்கு 100 கேரண்டி.  பணம் தர்றானோ இல்லையோ பார்வையை சுத்தமா புடுங்கிவிடுவாங்க போல.  எவனாவது கண்ணு இல்லாத கபோதிப்பய தான் இந்த மாதிரி ஜாப்பை ரெடி பண்ணி நாமளும் அவனப்போல மாறனும்னு நெட்டுல விட்டிருப்பாங்க போல.   வெயில் காலங்களில் கண் எரிச்சலை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்தான். 

 இருநதாலும் நான் எப்படி சமாளிக்கிறேன்னு உங்களுக்கு சொல்லனும்னு நினைக்கிறேன்.காலையில நல்லெண்ணையை ஒரு ஸ்பூன் எடுத்து உச்சந்தலையில் தினமும் தேய்த்துக் கொள்ளவேண்டும்.

உங்க ஊர் நாட்டு மருந்து கடையில கிடைக்கும் பொடியை முக்கியமா கருகவேப்பிலை, பொன்னாங்கன்னி, கடுக்காய் இப்படி ஒரு மூனு நாலு அயிட்டத்த வாங்கி ஒரு டப்பாவுல போட்டு ஒரு நாளைக்கு இரண்டு மூனு தடவை மறக்காம ஒரு சிட்டிகை வாயில்போட்டு தண்ணீர் குடிக்கனும். ஏவிஜி ரெட்டி தயாரித்த பொடி கலப்படமில்லாம இருக்குதுன்னு நினைக்கிறேன்.  

மூனு வாட்டி குளிக்கனும். அது கொஞ்சம் கஷ்டமா இருந்தால் காலையிலும் நைட்டு படுக்க போகும்போதும் கண்டிப்பாக ஜில்லுன்னு குளித்துவிடனும்.
மூனு வேளையா என்று வாயைத் தொறப்பவர்கள் அடிக்கடி பாதங்களையும், முகத்தையும் அலம்பி இதைச் சரிசெய்து கொள்ளவேண்டும்.

ரெண்டாவது அப்ப அப்ப ஆபீஸ்லையும் சரி வீட்லையும் சரி தண்ணீரை கொஞ்சமாவது குடிக்கனும். தண்ணீர் குடிக்கிற சாக்கில் கம்ப்யூட்டரை விட்டு எழுந்திருச்சு போயிரலாம்.  இது டூ இன் ஒன் போல. மனசுக்கும் ரிலாக்ஸா இருக்கும்.

கம்ப்யூட்டரில் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தால் ஏதாவது யோசிப்பது போல் பாவ்லா செய்து தலையை திருப்பி அண்ணாந்து பார்க்கனும். கண்ணையும் சிறிது மூடனும். அண்ணாந்து பார்த்து கண்ணை மூடினால் யாரும் தூங்குவதாக நினைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தினமும் கருகவேப்பிலை துவையல் சாப்பிடனும் அல்லது வாரத்துக்கு ஒரு மூனு வாட்டினாலும். மத்தவங்க வைக்கிற கருகவேப்பிலை துவையல் கசப்பா வாய்க்கு வௌங்காம இருக்கும்.  என் தர்ம பத்தினி வைக்கிற துவையலோ சாப்பாட்டிற்கு பதில் துவையலேயே சாப்பிட்டு விடலாம்.  

 கருகவேப்பிலை துவையல் செய்யிறது எப்படின்னு ஒரு பதிவு போடலாமுன்னு இருக்கேன்.  அதைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க. நீங்க உட்கார்ந்திருக்கிற கம்ப்யூட்டருக்கு முன்னால அல்லது அதற்கு கொஞ்சம் நேர்மேலே எதுவும் லைட் எரிஞ்சா அது உங்க கண்ணை பாதிக்கும்.  அப்படி இல்லாம பார்த்துக்கங்க.  அப்படி எதுவும் இருந்தால் ஒரு பத்திரிக்கைiயோ வேறு அட்டையையோ வைத்து கூடிய விரைவில் அந்த வெளிச்சத்தை மறைத்து விடுங்கள்.  

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் எப்படியும் ஒரு 7 மணிநேரம் உட்கார்ந்து அந்த வெளிச்சத்தையே பார்க்க வேண்டி வரும்.  நம்மோட கஷ்டம் வேலை வாங்கும் முதலாளிகளுக்கு தெரியாது. கம்ப்யூட்டர் வேலை மைண்டுக்கு வேலை கொடுக்கிறது.  மூளை சோர்வடைந்துவிடும். ஏதாவது தண்டாங்கட்டி வேலையை கூட பார்த்துவிடும். ஆபீசில் வேலை அதிகமாகும் போது இது பேனுக்கு அடியில உட்கார்ந்து பார்க்குற வேலைதானே கூட கொஞ்சநேரம் பார்க்க வேண்டியதானே என்று முதலாளி நினைப்பார்கள்.  ஆனால் வேலை பார்க்கிறவர்களுக்குத்தான் அந்த கஷ்டம் தெரியுமுன்னு நினைக்கிறேன்.  அவர்கள் அவர்கள் பார்க்கும் வேலைக்கு ஏத்த மாதிரி கஷ்டம் கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. 

 பக்கத்துல ஏதாவது டேபிள் பேன் முகத்துக்கு நேர சைடு வாக்கில் இருந்தால் அதே உடனே ஆப் பண்ணி விடுங்கள்.  இருக்கிறது எல்லாவற்றிலுமே மோசமானது இந்த டேபிள் பேன். அதுக்கு ஒரு உதாரணம்கூட சொல்றேன். எங்க ஆபிசில் மிசின்மேன் ஒரு பிளாஸ்டிக் விசிறியை வைத்து பிரிண்டிங் சரியாக வரவில்லை என மை ரோலரில் வீசிக் கொண்டிருப்பான்.  அது எதுக்கு என்று கேட்டால் ரோலரில் தண்ணீர் ஏறுகிறது என்றதால்  நானும் அது என்னெவென்று பார்க்கும்போது துளியளவு நீர்த்துளிகள் மை ரோலரில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. இவன் விசிறியை வைத்து வீசும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது. விசிறியை வைத்து வீசும்போது இந்த பிரச்சனை சரியாகும்போது நம் கண்களுக்கு நேரே அல்லது பக்கவாட்டில் பேன் ஓடினால் எப்படி இருக்கும்.  கூலாக இருக்குமா?  முதலில் அப்படித்தான் தெரியும். நாம் ஏற்கனவே கம்ப்யூட்டரை பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பதுபோல் பார்ப்போம்.  இதில் கண் இமைக்க அடிக்கடி இயல்பாகவே மறந்துவிடுவோம்.   

இதனால் நம் கண்ணீரிலுள்ள நீரை ஈரப்பசையை அந்த பேன் முற்றிலும் எடுத்துவிடுகிறது.  கண் நம்மையும் அறியாமல் உலர்ந்து விடுகிறது.  நமக்கு அந்த காத்தாடியினால் வரும் தொல்லை தெரியாமல் கண் எரிகிறது எரிகிறது என்று கண்ணைக் கசக்கிக்கொண்டே வேலை பார்ப்போம். 

வீட்டிலோ ஆபிசிலோ பத்திக்குச்சி கொழுத்தும்போது அல்லது அடுப்பு பக்கத்தில் புகைக்கு அருகில் போனாலே கண் எரிந்தால் கண் புண்ணாக இருக்கிறது என அர்த்தம். புகை உடலுக்கு பகை என்பது போல கண்ணுக்கும் அதிக பகைததான்.  இதை முதலில் கவனிக்க வேண்டும்.  பத்திக்குச்சி பக்கத்திலே கூடாது.  கண்களுக்கும் மூளை நரம்புகளுக்கும் ரொம்ப சம்மந்தம் உண்டு.  கண் பாதித்தால் மூளை பாதிக்கத்தான் செய்யும்.  

இதனால் ஞாபக மறதி. மனச்சோர்வு. நம்மையுமறியாமல் லேசான தள்ளாட்டம் ஐ பிரசர் (வெள்ளை  ஸ்டார் போன்று நிறைய அங்கங்கே தோன்றி மறைதல்) முதலியவை ஏற்படும்.  இவற்றையெல்லாம் மனதில் வைத்து கண்ணை கம்ப்யூட்டர் பாதிக்காதவாறு சரி செய்து கொள்ள வேண்டும்.



கோரல்டிரா கற்றுக் கொள்வது எப்படி?



கோரல்டிராவை பத்தி நமக்கு தெரிஞ்சது.

  நீங்க பயிற்சி செய்து பார்க்கனும்னா நான் 14 ரெக்கமெண்ட் பண்றேன்.  

1. கோரல்டிராவை பயன்படுத்தி ஒரு மேட்டர் டைப் அடித்து பிரிண்ட் அவுட் எடுக்கலாம். மனு மாதிரி அல்லது ஒரு லவ் லெட்டர் அல்லது ஒரு மொட்டை பெட்டிசன்னு வச்சுக்கங்க. இது போல ஏதேனும் ஒன்னு.  

2. அப்புறம் இன்னும் கொஞ்சம் அட்வான்சா  அதுல படம் போடுறது அதாவது எழுத்தும் + படமும் சேர்ந்து டிசைன் செய்யலாம்.  படம் வரையலாம்.  போட்டோசாப் கேள்விபட்டிருப்பீங்க.  அதுல ஏதேனும் டிசைன் செய்ததை இங்க கொண்டுவந்து பெரியதாவோ. சிரியதாவோ நம்ம மேட்டரோட சேர்த்து  வச்சுக்கலாம். பேஜ் மேக்கர் கேள்விபட்டிருப்பீங்க.  அதுல புக் ஒர்க் செய்யலாம்.  அதுபோல இதிலேயும் ஒரு புத்தகம் வடிவமைக்கலாம்.  


பாடம் 1 


முதல்ல டூல்ஸ்ஐ பார்க்கலாம்.  இதுல என்னன்னா  டூல்ஸ் லிஸ்டில் 17 டூல் இருக்கிறது.  இப்பதான் எண்ணினேன்.  அதிலேயும் ஒரு சில உட்பிரிவு இருக்குது.  நாம எல்லாவற்றையும் படிக்கப் போறது இல்ல. ஒரு 7 அல்லது 8.  இன்னும் கூட குறைச்சு ஒரு 6 இல்லன்னா 5 மட்டும் பார்ப்போம்.  எல்லா டூலையும் நாம கற்றுக்கொள்ள கூடாது.   கோரல்டிராவை பற்றி ஒன்னுமே தெரியாவதங்க மற்றும் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சவங்க நான் சொல்லிக்குடுக்கிறத பாலோ பண்ணிங்கன்னா ஈசியா கத்துக்கலாம்.   எல்லா டூலையும் படிக்க தேவையில்லை.

  நான் ஏற்கனவே சொன்னேன்.  எனக்கு  எல்லா டூலையும் தெரிஞ்சும் வருடக்கணக்கா நான் பயன்படுத்தியது இல்ல.  அதனால சொல்றேன்.  முதல்லையே நிறையா விசயங்களை மனசுல ஏத்தி குழப்பிக்க வேணாம்னு நினைக்கிறேன்.  இதுவரை நான் மேலே சொன்னதை கூட நீங்க மறந்து விடலாம்.  பாடம் 1 இனிமே தான் ஆரம்பிக்க போகுது.

 பிக் டூல்


கோரல்டிராவுல நுழைஞ்சதும் முதல்ல டூல்ஸ் பாக்சில் தெரியறது பிக் டூல்.  இந்த டூல்  ரொம்பவே பயன்படுகிறது.  இன்னும் சொல்லப்போனா இது இல்லேன்னா கோரல்டிராவே இல்லைன்னு சொல்லலாம்.  

இந்த டூலைத்தான் நாம அடிக்கடி பயன்படுத்த வேண்டிவரும். 
 இது ஒரு எழுத்தை படத்தை (ஆப்ஜெக்டை) பிக் செய்ய அதாவது செலக்ட் செய்ய பயன்படுகிறது. 

அதாவது ஒரு அரசியல்வாதிக்கு வலது கை மாதிரி அந்தாளுன்னு ஒருத்தரை குறிப்பிட்டு சொல்வது போல  கோரல்டிராவுக்கு வலது கை இந்த பிக் டூல்தான்.   காதலியை பிக் அப் பண்ணுகிற மாதிரின்னு கூட சொல்லலாம். அப்படி  இந்த டூல் வேலை செய்யும்.  

 இந்த டூல், ஆப்ஜெக்ட். டெக்ஸ்டு. லைன். பாக்ஸ். சர்க்கிள் எல்லாத்தையும்  இதுதான் பிக் அப் பண்ணும்.  அதுமட்டுமில்லாம  இந்த டூல் என்ன என்ன வேலையெல்லாம் செய்யுதுன்னு கீழே வரைபடமா என்னால முடிஞ்ச வரைக்கும் செஞ்சு காமிச்சுருக்கேன்.  பார்த்துக்கோங்க.  

கண்ட்ரோல் டூலையும் ஸ்பேஸ் பாரையும் அழுத்தினால் பிக் டூல் வரும். இன்னொரு தடவை அழுத்தினால் இதற்கு முன்னால் நாம் உபயோகப்படுத்திய டூல் வரும்.  நாம டூல் பாக்ஸ் போய் முதலில் காண்கிற பிக் டூலை (அம்புக்குறி  வடிவம்) எடுக்க வேண்டியதில்லை.  

எப்போது நமக்கு வேணுமோ அப்போது கண்ட்ரோல் கீ + ஸ்பேஸ் பாரை அழுத்தி வரவழைத்துக் கொள்ளலாம்.  நாம ஒருதடவை கூட மவுசைக் கொண்டு போய் பிக் டூலை கிளிக் செய்ய கூடாது.  அப்படி செய்தால் நாம இன்னும் சரியா கத்துக்கிடலைன்னு அர்த்தம்.  ஏனென்றால் விவரம் தெரிஞ்சவங்க அதாவது கோரல் டிரா நல்லா முழுசா பயன்படுத்துவோர் அடிக்கடி மௌஸையோ அல்லது டூல்ஸ் பாக்ஸையோ மெனுவையோ உபயோகப்படுத்த மாட்டார்கள்.  அதனால நீங்களும் அப்படியே பாலோ செய்யனும்னு கேட்டுக்கறேன்.  

சரி புதியதாக பழகுவோர் முதல்ல ஒவ்வொரு டூல்சா கிளிக் செய்து அது எப்படி வேலை செய்யுதுன்னு பார்க்கலாம்தானே என்று நீங்கள் நினைக்கலாம்.  அதுதான் கூடாது.  ஏனென்றால் நாம மவுசை டூல்ஸ் மெனுவுக்கு கொண்டு போய் கிளிக் செய்யப்போறதே இல்லை.  நான் முன்னேமே சொன்னது போல ஈசியா பழகனும்னா நான் சொல்றபடி கேளுங்க.  வரைபடம் கூட வேண்டாம்னு நினைத்தேன்.  ஆனாலும் உங்களுக்கு புரியனுமேன்னு....

படத்தை பெரியதாக்கி பார்க்க படத்தை ரைட் கிளிக் செய்து ஒப்பன் லிங்க் ன் நியூ டேப்பில் வைத்து படித்துக் கொள்க.

கோரல்டிரா பயன்படுத்தி பாக்கெட் சைஸ் புத்தகம் எடிட் செய்வது எப்படி



ஒரு சின்ன பாக்கெட் சைஸ் புத்தகம் போட வேண்டும் என்றால் கோரல் டிராவைப் பயன்படுத்தி எப்படி Page Imposition (பேஜ் லேயவுட்) செய்வது.
A6 அளவு (டெம்மி சைசில் போடுகிறீர்கள் என்றால் 4.25 x 5.5 Inches)என்பது A4ல் (டெம்மி என்றால் 8.5 x 11ல்) 4 துண்டு வரும்.
A4ஐ இரண்டு மடிப்பு மடித்தால் A6 புக்லெட் 8 பக்கங்கள் வரும். ஆகையால் கோரல் டிராவில் A6 சைசுக்கு 8 தனித்தனி பக்கங்களைத் தொடர்ச்சியாக அமைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி எட்டு பக்கங்கள் படங்களுடனும் எழுத்துக்களுடனும் நிறைத்துக் கொள்ளுங்கள்.
இனி எப்படி லேயவுட் செய்வது?
Print Preview செல்லுங்கள்.
மேல் இடது மூலையில் பாயின்டருக்குக் கீழ் Imposition Layout tool என்று சிவப்பாக + குறியுடன் இருக்கும். அதைக் கிளிக் செய்யுங்கள்.
இப்போது, புத்தகத்தின் உள்ளிருக்கும் மேட்டர் தெரியாது. ஆகையால், மேலிருக்கும் சுட்டிகளில் Edit Basic Settingsஎன்பதற்குப் பக்கத்தில் Template/Document Preview என்று ஒரு சுட்டி இருக்கும். அதைக் கிளிக் செய்யுங்கள். இப்போது உள்ளிருக்கும் மேட்டர் தெரியும்.
அப்படியே மேலேயே பாருங்கள். As in Document என்று இருக்கும். அதன் டிராப் டவுனை இறக்குங்கள். பல சுட்டிகள் இருக்கும். உங்கள் புக் லெடிற்கு சைட் பைண்டிங் என்றால்Side Fold card என்றத் தேர்வைத் தேர்வு செய்யுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் புக்லெட் தானாக இம்போஸ் ஆகிவிட்டது.
பார்த்தீர்களா? கோரல் டிரா நம் வேலையை எவ்வளவு சுலபமாகச் செய்கிறது என்று?
சில புக்லெட்டுகள் Top Bindingஆக வரும். அப்படி வரும் புக்லெட்டுகளுக்கு மேற்கண்டது போலவே பக்கங்களை ரெடி செய்து கொண்டு. Imposition layout toolல் Top Fold cardதேர்ந்தெடுங்கள்.
அவ்வளவே… தேவையான தேர்வைச் செய்து கொண்டு Print this sheet தனித்தனி சிக்னேச்சர்களுக்கு தனித்தனியாகக் கொடுங்கள்.
உங்கள் புக்லெட் தயார்.

கோரல் டிராவில் போட்டோஷாப்பைப் பயன்படுத்துவது எப்படி


கோரல் டிராவில் பேஜ் லேயவுட் செய்து கொண்டிருக்கும்போது, சில இடங்களில் படங்களைப் (இமேஜூகளைப்) பயன்படுத்த வேண்டிவரும். அப்படி இடையில் செருகும் படங்கள் தெளிவற்றதாக இருந்தால், Edit bitmap-ல் சென்று கோரல்டிராவுடனேயே வரும் கோரல் போட்டோ பெயின்ட்டைப் பயன்படுத்தித் தான் அதைச் சீராக்க முடியும். அது சற்று சிரமமாக இருக்கும். நாம் நினைத்தது போல் editing செய்ய முடியாது (போட்டோஷாப் சூழலிலேயே நாம் வளர்ந்ததால்). கோரல் போட்டோ பெயின்டிற்கு பதில் போட்டோஷாப்பைக் கோரல் டிரா பிட்மேப் எடிட்டராகப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? இது போன்ற ஒரு எளிமையான வழி இருக்காதா?
உங்களைப் போல நானும் பல வருடங்களாக இது போன்ற ஒரு ஒருங்கிணைப்புக்கு ஏங்கியிருக்கிறேன். கடைசியாக ஒரு வழி கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இந்தப் பதிவுடன் வரும் பதிவிறக்கச் சுட்டியை அழுத்தி தேவையான கோப்புகளைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள். பிறகு கீழுள்ள வழிமுறைகளில் கோரல்டிராவையும் போட்டோஷாப்பையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
  • ஜிப் கோப்பில் இருக்கும் கோப்புகளை தேவையான இடத்தில் Extract செய்து கொள்ளுங்கள்.
  • C:\Program Files\Corel\CorelDRAW Graphics Suite 13\Draw\GMS சென்று Photoshop.gms என்று பதிவிறக்கக் கோப்பில் இருக்கும் கோப்பை மட்டும் Copy Paste செய்யுங்கள்.
  • கோரல் டிராவை ஓப்பன் செய்யுங்கள். மேலே Tools>> Visual Basic>> VBA Editor தேர்வு செய்யுங்கள். (Alt + F11).
  • GlobalMacros (Photoshop.gms) என்ற பதத்தைத் தேடுங்கள். 

  • அதில் Right Click செய்து Import File ஆப்சனைத் தேர்ந்தெடுங்கள்.

ஜிப் கோப்பில் இருந்து Extractசெய்த Folderல் ExImPhotoshop என்ற Folderல் இருக்கும் ExImPhotoshop.bas மற்றும் ctc_boost.bas என்ற கோப்புகளைத் தனித்தனியே இம்போர்ட் செய்யுங்கள்.


  •  அந்த GlobalMacros (Photoshop.gms) Highlight ஆகியிருக்கும்போதே Tools Menu சென்று References என்ற தேர்வை செய்யுங்கள்.

  • அதைத் தொடர்ந்து வரும் பெட்டியில் Adobe Photoshop (your version) Object Library என்ற தேர்வை டிக் செய்யுங்கள்

  • OK கொடுங்கள்.
  • Save கொடுங்கள்.
  • Alt + Q கொடுங்கள்.
  •  
இப்போது கோரல் டிராவுக்குள் Tools>> Options>> customization>> Commands செல்லுங்கள். வலது புறத்தில் Files என்று காட்டும் சுட்டியைக் கீழிறக்கி Macros தேர்ந்தெடுங்கள்.
டிராப்டவுனில் ExImPhotoshop.editinphotoshop மற்றும் ExImPhotoshop.updateaftereditinphotoshop என்ற இரு தேர்வுகள் இருக்கும்.
ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து Appearance சென்று ஜிப் கோப்பில் இருக்கும் Iconகளை import செய்து கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக இழுத்து வெளியே போடுங்கள்.
இனி நீங்கள் கோரல்டிராவில் பிட்மேப் எடிட்டராக போட்டோஷாப்பைப் பயன்படுத்தலாம்.
கடைசியாக எனது ஸ்கிரீனில் இப்படி இருந்தது.

கட்சி கலர் கொடுப்பது எப்படி? | கோரல்டிரா

எல்லா பேஜ் லேயவுட் (Page Layout) வேலைகளுக்கும் பயன்படுவது கோரல் டிரா (Coreldraw). அப்படி கோரலில் அடிக்கடி செய்ய வேண்டிவரும் வேலைதான் கட்சித் துண்டறிக்கைகள் (Bit Notices).
கட்சித் துண்டறிக்கைகளைத் தட்டெழுதி வடிவமைக்கும்போது. அதில் வரும் ஆட்களின் பெயர்களுக்கும், கட்சிப் பெயர்களுக்கும் அவர்களது கட்சிக் கொடியின் வண்ணத்திலேயே பெயரிட வேண்டிவரும்.அதை எப்படிச் செய்வது என்பதை நிறுவுவது இந்தப் பதிவின் நோக்கம்.
  1. தேவையான பெயர்களை முதலில் தட்டெழுதிக்கொள்ளுங்கள் (Type your needed Texts).
  2. F11 அழுத்தி பவுண்டெயின் பில் பேலட்டை (Fountain fill Pallete) ஓப்பன் செய்யுங்கள்.
  3. டைப்பில் லீனியர் (Linear) தேர்ந்தெடுத்து கலர் பிளண்டில் (Colour Blend) கஸ்டம் (Custom) தேர்ந்தெடுத்து தேவையான வண்ணங்களைச் சேர்க்கவும்.
  4. வண்ணங்களைச் சேர்த்து திருப்தியாக முடித்தவுடன். பிரீசெட்டில் நீங்கள் தயார் செய்த கட்சி வண்ண செட்டிங்கை சேமித்துக் கொள்ளுங்கள்.
  5. இப்படி சேமித்துக் கொண்டால் அடுத்தடுத்து வரும் பெயர்களுக்கு மீண்டும் நீங்கள் வண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பெயரைத் தேர்ந்தெடுத்து, F11 தேர்ந்தெடுத்து, பிரீசெட்டில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் போதும்.

கோரல்ட்ரா பயன்படுத்துவது எப்படி