meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2013-03-31 | computer from village computer from village: 2013-03-31 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

உலகின் தலை சிறந்த மியூசியம் உங்கள் கனினியில்



             உலகின் மிகப்பெரிய மியூசியத்தை


              முப்பரிமாணமாக 


   ஆன்லைனில் பார்க்கலாம்





உள்நாட்டில் இருக்கும் மீயூசியத்திற்கு செல்லக்கூட நேரம்

இல்லை அப்படியே நேரம் கிடைத்தாலும் அங்கு சென்று
கூட்டத்துடன் அதன் அழகை ரசிக்க முடியவில்லை என்ற
வருத்தம் அனைவரிடமும் இருக்கும் இந்த வருத்தத்தை
போக்குவதற்காக கூகிள் முக்கிய மீயூசியத்தை ஆன்லைன் மூலம்
முப்பரிமானத்தில் ( 3D ) சுற்றிகாட்டினால் எப்படி இருக்கும்
என்ற புதிய முயற்சியாக  ஒரு இணையதளத்தை
ஆரம்பித்துள்ளது, இதில் தற்போது உலகின் பிரம்மாண்டமான
மீயூசியத்தை பார்க்க நம்மை இப்போதே அழைத்து செல்கிறது,

இணையதள முகவரி : 

http://www.googleartproject.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் சுற்றி பார்க்க விரும்பும்

மீயூசியத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும்
திரையில் முப்பரிமானத்தில் மீயூசியத்தை காட்டுவதோடு
மட்டுமல்லாமல் எங்கு செல்லவேண்டும் எந்த படத்தை,
அரிய பொருளை பார்க்க வேண்டும் என்பதை சொடுக்கினால்
போதும் அதன் முகப்பு தோற்றம் முதல் Side view வரை
அனைத்தையும் முப்பரிமானத்திலே நாம் சென்று பார்ப்பது
போல் காட்டுகின்றனர்.வியப்பை மட்டுமல்ல விந்தையையும்
காட்டி மறுபடியும் எந்த்துறையில் தான் கால் பதித்தாலும்
அந்தத்துறையில் தான் வல்லவன் என்பதை நிரூபித்து
இருக்கிறது கூகிள், உள்நாட்டு நம் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும், மீயூசியம் பார்க்க விரும்பும் அனைவரும்
இனி பைசா செலவில்லாமல் உலகில் முக்கிய மீயூசியத்தை
முப்பரிமானத்தில் பார்வை இடலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்



ஆபிஸ் டாக்குமெண்ட் Template பிரிண்ட் எடுக்க வேண்டும் 

கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்


எளிதாக பிரிண்ட் செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.


புதிதாக பிரிண்டர் வாங்கி இருப்பவர்களுக்கும் ஏற்கனவே பிரிண்டர்
வைத்திருப்பவர்களுக்கும் உதவுவதற்காக அனைத்துவிதமான இலவச
பிரிண்டபிள் பேப்பர் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆபிஸ் டாக்குமெண்ட் Template பிரிண்ட் எடுக்க வேண்டும் எங்கு
தரவிரக்கலாம் என்று ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம்,
கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்
எளிதாக பிரிண்ட் செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.printablepaper.net
கிரிக்கெட் ஸ்கோர் முதல் மாத பட்ஜெட் வரை அனைத்திற்கும்
உள்ள Template இந்ததளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது
இதை தரவிரக்கி பிரிண்ட் செய்து உடனடியாக பயன்படுத்தலாம்.
பெயிண்ட் அல்லது போட்டோஷாப்-ல் சென்று ஒவ்வொரு
கோடாக போட்டு அதை நம் பிரிண்டருக்கு தகுந்தாற் போல்
சோதனை செய்வதற்குள் நமக்கு பிரிண்ட் செய்யும் ஆசையே
வெறுத்துவிடும் இதற்காகத்தான் இந்ததளம் நமக்கு அனைத்து
துறைகள் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் Template -ஐ இலவசமாக
கொடுக்கிறது. கண்டிப்பாக பிரிண்டர் வைத்திருக்கும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Device அனைத்துக்கும் Driver ஒரே இடத்தில் தரவிரக்கம் செய்ய



மொபைல்,மோடம், பிரிண்டர் 


 Device  அனைத்துக்கும்


Driver ஒரே இடத்தில் 


தரவிரக்கம் செய்ய


நம் கணினியில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, கிராபிக்ஸ், மவுஸ்,
போன்ற அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware)
டிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வன்பொருட்களுக்கான டிரைவர் மென்பொருள் பல தளங்களில்
சென்று தேடி சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும் இப்படி
ஒவ்வொரு தளமாக சென்று வன்பொருள் தேடுவதை விட ஒரே
தளத்தில் இருந்து BIOS , Bluetooth , Camcorder , Card Reader-Writer
Digital Cameras, Laptop , Modems , Monitor , Motherboard,
TV Tuner / Card , UPS , USB , Printer போன்ற அனைத்து
வன்பொருட்களுக்கும் அனைத்து வகையான நிறுவனத்தின்
டிரைவர் மென்பொருட்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.nodevice.com
இந்ததளத்திற்கு சென்று நாம் Search என்ற கட்டத்திற்குள் எந்த
வன்பொருட்களுக்கான டிரைவர் வேண்டுமோ அதை கொடுத்து
Find என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்
திரையில் நாம் Driver Software எளிதாக தரவிரக்கி நம் கணினியில்
இண்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.இதைத்தவிர Windows-ல்
தேவைப்படும் DLL கோப்பை கூட தரவிரக்கலாம். பல நிறுவனங்களின்
டிரைவர் மென்பொருளை தரவிரக்க உதவும் இந்தத்தளம் அனைத்து
மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கென்று இணையத்தில் இலவசமாக கடை உருவாக்கலாம்.



 உங்களுக்கென்று இணையத்தில்

இலவசமாக கடை உருவாக்கலாம்.


ஆன்லைன் மூலம் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய
நமக்கென்று ஒரு கடை இலவசமாக உருவாக்கலாம் எப்படி
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நம்மிடம் இருக்கும் எந்த பொருட்களை வேண்டுமானாலும் உலகறியச்
செய்ய ஒரு முயற்சியாக ஒரு இனையதளம் உள்ளது. இந்தத்தளத்தில்
நம்மூர் மளிகை கடைகாரர் முதல் துனிக்கடை காரர் வரை அனைவரும்
தங்களுக்கென்று இலவசமாக ஆன்லைன் கடை ஒன்றை உருவாக்கி
தங்கள் பொருட்களின் மதிப்பை அனைவரும் அறியச்செய்யலாம்.
இணையதள முகவரி : http://www.bigcartel.com
யார் வேண்டுமானாலும் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இல்லாதவர்கள்
கூட எளிதாக தங்களுக்கென்று எளிதாக இந்தத்தளம் மூலம் கடை
உருவாக்கிக் கொள்ளலாம். பேபால் மூலம் பணம் பெற்றுக்கொண்டு
பொருட்களை அனுப்பலாம். எந்த கமிஷனும் எடுக்காமல் நேரடியாக
நமக்கும் பொருள் வாங்குபவருக்கும் பாலமாக இருக்கின்றனர்.
முதல் 5 பொருட்களை மட்டும் நாம் இலவசமாக பயன்படுத்திப்பார்த்து
பயனாளர்கள் கிடைத்தால் மேலும் அனைத்து பொருட்களையும்
கொண்டு ஆன்லைன் -ல் கடை வைக்கலாம் இதற்காக மாதம்
$10 டாலர் கட்டணம் வசூலிக்கின்றனர். எல்லா வகையான
பொருட்களையும் நாம் இந்தக்கடை மூலம் உலக மக்களுக்கு காட்டலாம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

C , C++ , PHP புரோகிராம் – களை ஆன்லைன் மூலம் இயக்கலாம்.



C , C++ , PHP புரோகிராம் – களை 


 ஆன்லைன் மூலம் இயக்கலாம்.


புரோகிராம் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கலாம்
ஆனால் அதற்குரிய மென்பொருள் நாம் செல்லும் இடம் எல்லாம்
இன்ஸ்டால் செய்ய வேண்டுமே என்று பலர் இன்னும் இந்ததுறையை
இன்னும் தொடமல் இருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு நற்செய்தி
இனி C , C++ , PHP புரோகிராம் – களை ஆன்லைன் மூலம்
இயக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
எந்த மென்பொருளும் நம் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல்
சி, சி++  போன்ற மொழி புரோகிராம்களை நாம் ஆன்லைன் மூலம்
எளிதாக இயக்கிப் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://codepad.org
இந்த இணையதளத்திற்கு சென்றுஎந்த மொழி என்பதையும் அதற்கான புரோகிராமையும்
தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை அழுத்தவும்.
(உதாரணமாக நாம் ஒரு C புரோகிராமை கொடுத்திருக்கிறோம்)
அடுத்து . இதில்நம் புரோகிராமை இயக்கி வரும் Output ம் சேர்த்தே கொடுக்கிறது
இதன் பின் நாம் புரோகிராமை எடிட் செய்ய வேண்டுமானாலும்
செய்து மறுபடியும் இயக்கிப் பார்க்கலாம். இன்று முன்னனியில்
இருக்கும் C, PHP, Ruby, Python, C++ போன்ற மொழிகளை
நாம் ஆன்லைன் மூலம் இயக்கலாம் எந்த மென்பொருளும்
தேவையில்லை கண்டிப்பாக இந்த செய்தி புரோகிராமருக்கும்,
கணினி மொழி படிக்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.

விரிவான ஆங்கிலக் கட்டுரை வேண்டுமா?




விரிவான ஆங்கிலக் கட்டுரையை

 கொடுக்கும் 

பயனுள்ள தளம்.


ஆங்கிலத்தில் விரிவாக உள்ள கட்டுரையைத் தேடி இனி
ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில்
இருந்து கொண்டு எத்தனை வார்த்தைகளுக்கு மேல் உள்ள கட்டுரை
வேண்டும் என்பதில் இருந்து படிக்க எவ்வளவு நேரம் ஆகும்
வரை உள்ள அனைத்துவகையான ஆங்கிலக்கட்டுரையையும்
எளிதாக படிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆங்கிலக்கட்டுரைளில் தரமான கட்டுரைகளையும் பிழை
இல்லாத பொருள் பொதிந்த கட்டுரைகளையும் எளிதாக நமக்கு
கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://longreads.com
இந்தத்தளத்திற்கு சென்று Search our Archiveஎன்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எதைப்பற்றிய விரிவானகட்டுரை வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுக்க வேண்டும்
அடுத்து All Article Lengths என்பதில் இந்தக்கட்டுரையை படிக்க
எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் எவ்வளவு வார்த்தைகளுக்கு
மேல் இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு
Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்
திரையில் நமக்கு நாம் கொடுத்த வார்த்தைக்கு பொருத்தமாக
உள்ளபடி பலவிதமான கட்டுரைகள் நமக்கு கிடைக்கும். ஆங்கிலத்தில்
கட்டுரை எழுதுபவர்களுக்கும் படிப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நீங்களும் மேஜிக் நிபுனர் ஆகலாம்



நீங்களும் மேஜிக் நிபுனர் ஆகலாம்

 ( Magic Tricks ) 

வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.


சில நிகழ்ச்சிகள் நடக்கும் போது இடையிடையே நடக்கும் மேஜிக்
ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது
எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி
இது போல் மேஜிக் ட்ரிக்ஸ்  செய்கின்றனர் என்பதை வீடியோவுடன்
சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில்
பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப்
பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில்
ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர்
என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://easybartricks.com
இந்தத்தளத்திற்கு சென்று பலவகையான மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி
செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கின்றனர்
இதில் எந்த வகையான ட்ரிக்ஸ் நமக்கு தெரிய வேண்டுமோ
அதற்கான வீடியோவை சொடுக்கி நாம் தெரிந்து கொள்ளலாம்.
Magic Tricks, Bottle Tricks , Coin Tricks ,Bill Tricks,Lighter Tricks
Cigarette Tricks, Easy Magic Tricks, All Bar Tricks போன்ற அனைத்தும்
தனித்தனி வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேஜிக் ட்ரிக்ஸ்
பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.

உலகமுழுவதும் உள்ள அனைத்து வகையான சட்டப்பிரச்சினைகளுக்கும் விடைசொல்லும் பயனுள்ள தளம்.



உலகமுழுவதும் உள்ள

 அனைத்து வகையான 

சட்டப்பிரச்சினைகளுக்கும் 

தீர்வு சொல்லும் 

பயனுள்ள தளம்.


குற்றம் என்றால் என்ன , எவையெல்லாம் குற்றம் இதற்கான தண்டனை
என்ன ? செய்யாத குற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி ? உள்ளூரில்
என்றால் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளாம் ஆனால் உலக
அளவில் எவையெல்லாம் சட்டப்படி குற்றம் அதற்கான தண்டனை
உள்ளிட்ட அனைத்து வகையான சட்டப்பபிரச்சினைகளுக்கும் உதவி
செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வெளிநாட்டில் எதெல்லாம் குற்றம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும்
நம் அனைவருக்கும் ஒவ்வொரு குற்றத்தைப் பற்றிய அனைத்து
விபரங்களையும் இதற்கு உண்டான தண்டனை என்பதைப்பற்றிய
அனைத்து தகவல்களையும் நமக்கு கூற ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://topics.law.cornell.edu/wex
இத்தளத்திற்கு சென்று சட்டத்தைப்பற்றி ஒரு விரிவான தகவல்களை
ஒரு டிக்ஸ்னரியில் படிப்பது போல் அனைத்து தகவல்களையும்
தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றிற்கும் விரிவான விளக்கங்களை
அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இத்தளம்
உருவாக்கப்பட்டுள்ளது. நாம் தேடும் குற்றத்திற்கான பதிலை பிரபலமான
வக்கீல்களிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக சட்டத்
துறையில் இருப்பவர்களுக்கும் சட்டம் படிக்க விரும்புபவர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் மிகவும் பயனுள்ளதளம்.



விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் 

அறிவை வளர்க்க 

உதவும் மிகவும் 

பயனுள்ளதளம்.


விடுமுறை தொடங்கிவிட்டது இனி குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு
விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் விளையாட ஒவ்வொரு
தளமாக சென்று தேட வேண்டாம் , விளையாட்டு மட்டும் இல்லாமல்
குழந்தைகளுக்குத் தேவையான அவர்களின் அறிவை வளர்க்கக்கூடிய
அத்தனை செய்திகள் , விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களை
கொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் வரைவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்க்கும்,
விளையாட்டு விளையாட்டுவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம்
இருக்கும்,புதிதாக அறிவியல் ரீதியில் ஏதாவது செய்ய வேண்டும்
என்று சில குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும் இப்படி அனைத்து
தரப்பு குழந்தைகளையும் ஒரே இடத்தில் தங்களின் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ள ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.kidopo.com
இத்தளத்திற்கு சென்று நாம் coloring page என்பதில் தொடங்கி
Games, printables,crafts,videos எனப் பல பகுதிகளை கொண்டுள்ளது.
Coloring page என்பதை சொடுக்கி படத்திற்கு வண்ணம் தீட்டலாம்.
Games என்பதை சொடுக்கி எளிமையான குழந்தைகளின் அறிவை
வளர்க்கக்கூடிய விளையாட்டை விளையாடலாம், Printables
என்பதை சொடுக்கி விரும்பிய படங்களை பிரிண்ட் செய்லாம்.
Crafts என்பதை சொடுக்கி பலதரப்பட்ட கலைகளையும் எளிய
தொழில் நுட்ப விபரங்களையும், அறிவியல் ரீதியான பல அறிய
தகவல்களையும், பொம்மைகள் பேப்பரில் உருவாக்கக்கூடிய
அழகான டிசைன்கள் என அனைத்தும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து இருக்கும் Videos என்பதை சொடுக்கி குழந்தைகள்
அதிகமாக விரும்பும் அனிமேசன் வீடியோக்களை பார்க்கலாம்
கண்டிப்பாக இந்தப்பதிவு குழந்தைகள் மட்டுமின்றி நம்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம்



உங்கள் குழந்தைகளுக்கு

ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் 

எளிதாக கற்றுதரும் பயனுள்ள இணயதளம்


படம் 1ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவராமால் பலர்
இருக்கின்றனர் இவர்களுக்கு ஆங்கில மொழியை அசத்தலாக
தினமும் வீடியோவுடன் சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பள்ளி, கல்லூரி விடுமுறை காலம் தொடங்கிவிட்டது நம் குழந்தைகளும்
வெளிநாட்டினர் போல் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணம்
அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கும், இவர்கள் மட்டுமல்லாது
தனியார் அலுவலகங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தொடர்ச்சியாக
ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அவர்களுக்கு
தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது  இப்படி ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை
அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://funeasyenglish.com
ஆங்கிலத்தை சொல்லி கொடுக்க பல இணையதளங்கள் இருக்கிறதே
இத்தளத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும்
அனைவருக்கும் பதிலாக இத்தளம் ஆங்கிலத்தை வேடிக்கையாக
தினமும் வீடியோவுடன் சொல்லி நம்மை அசத்துகிறது. இந்த
வீடியோக்களை தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தாலே
போதும் சில வாரங்களில் நாமும் ஆங்கிலத்தை எந்தப்பிழையும்
எந்ததடையும் இல்லாமல் தொடர்ச்சியாக பேசலாம். ஒவ்வொரு
ஆங்கில வார்த்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில்
தொடங்கி ஒவ்வொருத் துறை சம்பந்தப்பட்ட வீடியோகோப்புகளை
காட்டி நம் ஆங்கில அறிவை வளர்க்கிறது. ஆங்கிலம் கற்றுகொள்ள
விரும்பும் நபர்கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச விரும்பும்
அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உலகின் அனைத்து முக்கிய நகரங்களின்


காலநிலையையும் 

துல்லியமாக அறியலாம்.


காலநிலை மாற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும்நாம் வசிக்கும் இடத்தில் இருந்து தெரிந்து கொள்ள நினைக்கும்
ஒவ்வொரு இடத்தின் காலநிலையையும் எளிதாக துல்லியமாக
அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
வசிக்கும் இடத்தின் தட்பவெப்ப நிலை முதல் நாம் செல்ல
விருக்கும் இடத்தின் தட்பவெப்ப நிலை வரை அனைத்தையும்
எளிதாக அறிந்து கொள்ள நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://wthr.in
இத்தளத்தில் உலகின் அனைத்து முக்கியமான நகரங்களின்
தட்பவெப்ப நிலையையும் இனி அடுத்து வரவிருக்கும் மூன்று
நாட்களுக்கான கால நிலையையும் நமக்கு துல்லியமாக
காட்டுகிறது.உலகின் முக்கிய நகரங்களின் காலநிலையை
அறிந்து கொள்ள விரும்பும் அனைத்து நபர்களுக்கும் இத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.

விரும்பிய இசையை நாமே உருவாக்கலாம்

விரும்பிய இசையை நாமே உருவாக்கலாம்



சிறிய ஒலியை கூட இசையாக மாற்றும் திறமை நம்மிடம் இருக்கலாம் ஆனால் இசையமைக்கத் தேவையான எந்த இசைக்கருவி (instrument )-ம் இல்லாமல் எப்படி இசையமைக்க முடியும் என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கும் இதற்கு பதிலாக ஒரு இணையதளம் நாம் பாடும் பாடலுக்கான இசையை நாமே உருவாக்கும் வண்ணம் ஒரு தளத்தை வடிவமைத்துள்ளது.
இணையதள முகவரி : http://www.ujam.com
இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். நாம்  பாடினால் மட்டும் போதும் அதற்கான இசையை நம் விருப்பம் போல் தேர்ந்தெடுக்கலாம். எல்லா வகையான instrument  -ம் நம் பாடலில் பயன்படுத்தலாம். ஒரு பாடலுக்கு என்னவெல்லம் தேவையோ அத்தனை வசதிகளையும் இத்தளம் நமக்கு செய்கிறது. ஒவ்வொரு இசையுடனும் உங்கள் பாடல் சேர்ந்து எப்படி இருக்கிறது என்பதை உடனுக்குடன் சோதித்துப்பார்த்துக்கொள்ளலாம். முழுமையாக இசையை உருவாக்கிய பின் அதை Mp3 கோப்பாகவும் சேமித்துக் கொள்லலாம். இசைப்பிரியர்களுக்கும் புதிய இசையை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.


வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் 

 இலவசமாக அனுப்பலாம்.


வீடியோ இமெயில் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சில நேரங்களில் நாம் என்ன தான் இமெயில் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கேமிரா  மூலம் பேசி வீடியோ மெயிலாக உடனடியாக அனுப்பலாம்.
இணையதள முகவரி: http://mailvu.com
இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கேமிரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை  சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை  பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில்  யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் இமெயில் முகவரி மற்றும் நம் இமெயில் முகவரி, பெயர் , வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text  என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம், இங்கு கொடுத்திருக்கும் Notify me when this message read என்ற செக் பாக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு இமெயில் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு  எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மீச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மெயிலாக தமிழ் மொழியிலே பேசி அனுப்புவோம்.
 ஆசியாவின் 


மிகப்பெரிய டிஜிட்டல் 

தமிழ் மொழி அகராதி


ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பு கொடுக்க பல தளங்கள் உள்ள நிலையில் தமிழ் வார்த்தைக்கு விரிவான விளக்கம் கொடுக்க தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அழகு கொஞ்சும் தமிழில் உள்ள வார்த்தைகளை பல நேரங்களில் நமக்கு விளக்கம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்போம். இணையதளங்களில் தேடினாலும் இதற்கான விளக்கம் பல நேரங்களில் தெரிவதில்லை ஆனால் இனி தமிழ் வார்தைக்கு உண்டான விளக்கத்தை எளிதாக புரியும் படி அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை அனைவரும் நொடியில் அறிந்து கொள்ளும் பொருட்டு  தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் டிக்ஸ்னரியில் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய  தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம் கூடவே நாம் கொடுக்கும் வார்த்தைக்கு இணையான
வார்த்தையையும் காட்டுகிறது. திருக்குறளில் கூட பல வார்த்தைகளுக்கு விளக்கதை தேடும் நமக்கு இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம் தான். தமிழ் பேராசியர்கள் மற்றும் தமிழ் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் இத்தளம் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும்.கதிர்வேலு என்பவரின் சீரான முயற்சியில் நாம் இதை பயன்படுத்துகிறோம் அவருக்கும் நம் வின்மணியின் நண்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் ”



உலக அளவில் இணையம் மூலம் தமிழ் 

வளர்க்கும் ” தமிழ் பாடநூல் ” பயனுள்ள தளம்.


யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ? எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறிய பாரதியின் கனவுப்படி தமிழ் மொழியை வளர்க்க உலகமெங்கும் பலர் இன்றும் தங்களால் இயன்ற பணியினை செய்து வருகின்றனர், அந்த வகையில் தமிழ் மொழியை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கு வசதியாக தமிழ் பாடநூல் என்று ஒரு தளம் இயங்குகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தமிழ் மொழியைப்பற்றிய அறிமுகத்தில் இருந்து , தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள்,  அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும், காலம் மற்றும் வண்ணங்களை எப்படி உச்சரிக்க  வேண்டும் தமிழை உலக மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ளும் பொருட்டு ஆங்கிலம்  வழியாகவே முயற்சித்து இருப்பது மகிழ்சியான ஒன்று தான் இனி இத்தளம் செய்து வரும் சேவையைப்பற்றி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.unc.edu/~echeran/paadanool/unicode/
தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமா மூன்று பாடம் இலவசம் அப்புறம் காசு கொடுத்து படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் தளங்களுக்கு மத்தியில் தமிழை இலவசமாக வீட்டில் இருந்தபடியே முழுமையாக படிக்கலாம் என்று சொல்லி இத்தளம்  அனைவரையும் அழைக்கிறது. தமிழின் அடிப்படையான இலக்கணம் முதல் தமிழின் வார்த்தைகள் எங்கெல்லாம் எப்படி  பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு பாடமாக கொடுத்து நம் தமிழ் புலமையை வளர்க்கிறது. தமிழ் மொழியைப்பற்றிய முழுமையான ஆய்வு செய்து ஓவ்வொரு பகுதியாக  உருவாக்கியுள்ளனர். மற்ற மொழியினரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்  அழகான ஆங்கிலத்தில் விளக்கம் கூறி இருப்பது மேலும் சிறப்பு. இளங்கோ சேரன் என்பவர் 2004 -ம் ஆண்டு உருவாக்கிய இத்தளம் இன்றும் தமிழின் சுவையை அள்ளிக்கொடுத்து கொண்டிருப்பது தான் இத்தளத்தின் சிறப்பு. தமிழ் மேல் காதல் கொண்ட அனைவருக்கும்  தமிழ் வளர்க்க நினைப்பவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.


அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை 

நொடியில் 

உருவாக்கலாம்.


வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான  வடிவில் இருந்து எளிதாக  உருவாக்கி அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதள முகவரி : http://www.easyhi.com
இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு  Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிகலாம். வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள் , அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது, விரும்பிய படங்களையும்  அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.அனிமேசனுடன் வாழ்த்து சொல்ல விரும்பும் நபர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.இத்தளத்தைப்பற்றிய  ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
 கவிதை எழுதி 


 ஆடியோவுடன் 

கவிதையை கேட்கலாம்.


கவிதை எழுதுவது ஒரு தனி கலை தான் என்றாலும் இதற்காக சில மணி நேரங்களாவது செலவு செய்ய வேண்டும், தனிமையில் அமர வேண்டும் காதலித்திருக்க வேண்டும் அப்படி இப்படி என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் நம் தளத்திற்கு நொடியில் கவிதை  எழுதி கொடுக்க ஒரு தளம் உள்ளது.நம் இணையதளத்திற்கு என்று பிரத்யேகமாக கவிதை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தளமாக தேடிச்சென்று நாம் கவிதை எழுத வேண்டாம் நம் தளத்திற்கு கவிதை எழுதிக்கொடுக்கவும் அதை ஆடியோ கோப்புடன் கொடுக்கவும் ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://webermartin.net/poem.php
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டிபடி இருக்கும் கட்டத்திற்குள் நம் தளத்தின் முகவரியை கொடுத்து செய்யுள் வடிவில் எப்படி கவிதை வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து Poemize this webpage என்ற பொத்தானை  சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நம் தளத்திற்கு என்று பிரத்யேகமாக ஒரு கவிதை   உருவாக்கப்பட்டிருக்கும்.இத்துடன் ஒரு ஆடியோ கோப்பும் சேமிக்க கேட்கும் அதையும் சேமித்து நம் தளத்திற்காக உருவாக்கப்பட்ட கவிதையை ஆடியோ கோப்புடனும் கேட்டு ரசிக்கலாம். புதுமை விரும்பிகளுக்கும் கவிதை  பிரியர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.


கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 

அனைத்து புத்தகங்களையும் தேடி எடுக்க


புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கூகிள் தேடிக்கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகிளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தறவிரக்க முடியும் ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு  தேடுபொறி உள்ளது.
இணையதள முகவரி : http://www.saveitt.com
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான் வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும். சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக  புத்தகத்தை தறவிரக்கலாம். Doc, Pdf, PPT,  XLS போன்ற கோப்புகளையும் தேர்ந்தெடுத்து தேடும் வசதியும் உள்ளது. இணையத்தில் நமக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக தறவிரக்க உதவும் இந்தத்தளம் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எத்தனை கி.மீ தூரம் எளிதாக



ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு 

எத்தனை கி.மீ தூரம் எளிதாக 

கண்டுபிடிக்கலாம்.


வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.distancefromto.net
இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும்



மல்டிமீடியா உதவியுடன் 

அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும்

பயனுள்ள தளம்.


நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள்  துணையும் இன்றி , எந்த ஒரு அனிமேசன் பயிற்சியும் இன்றி  எளிதாக  நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து  நம் ஐடியாவை  மல்டிமீடியா உதவியுடன் ஆன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.creazaeducation.com
இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு  உருவாக்கி உள்நுழையலாம். ஐடியாக்களை Map ஆக உருவாக்குவதில் தொடங்கி கார்டூன் உருவாக்குவது, ஆடியோ எடிட் செய்வது மற்றும் வீடியோ எடிட் செய்வது என அத்தனையையும் நாம் ஆன்லைன் மூலம் செய்யலாம். எப்படி பயன்படுத்துவது என்பதை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர்.  வீடியோ அல்லது ஆடியோ எடிட் செய்வதில் எவ்வளவு புதுமையான டூல்கள்  உள்ளது என்பதையும், அழகான கார்டூன் ஒரு  திறமையான கார்டூன் வடிவமைப்பாளர் உருவாக்குவது போல் எப்படி உருவாக்கலாம் என்பதையும் அழகுடன் காட்டுகின்றனர். புதுமை விரும்பிகளுக்கும்,  பொழுது போக்கிறாக நேரத்தை வீணடிக்காமல் இது போன்ற பயனுள்ள சேவைகளை ஆன்லைன் மூலம் எங்கிருந்தும் கற்க  விரும்புபவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
ASCII ஆர்ட் வரைய பயனுள்ள 


இணையதளம்.


ASCII பயன்படுத்தி வரையப்படும் படங்களில் பலவித நன்மைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது எங்கு வேண்டுமானாலும் நாம் இந்த ASCII ஆர்ட் பயன்படுத்தலாம், Size மிகவும் குறைவாக இருக்கும்.ASCII ஆர்ட் வரைய நமக்கு உதவுகிறது ஒரு தளம்.ASCII ( American Standard Code for Information Interchange ) ஒவ்வொரு விசைக்கும் இணையான ஒவ்வொரு Character-ஐ வைத்து எளிதாக சில நிமிடங்களில் (Ascii art) படம் வரையலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.asciiflow.com
இத்தளத்திற்கு சென்று  இடது பக்கம் இருக்கும் வடிவங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து  வரையத்தொடங்கலாம், ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து பலகையில் வரையும் அந்த டூல் பற்றி அறிந்து கொள்ளலாம். எல்லாம் எழுத்துக்களை கூட நாம் சேர்க்க விரும்பும் கோனத்தில் உருவாக்கலாம். எல்லாம்  வரைந்து முடித்த பின் Export என்பதை சொடுக்கி எளிதாக காப்பி செய்யலாம், Html கோப்பாக மாற்ற விருப்பம் உள்ளவர்கள் Export Html என்பதை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம். ASCII ஆர்ட் வரைய விரும்பும் அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.


 எலக்ட்ரிக்கல் சர்க்யூட்

 எளிதாக துல்லியமாக தெளிவாக வரையலாம்.


எலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றி ஆர்வம் உள்ள அனைவருக்கும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்குவதற்காக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தினமும் ஒரு சாதனை எலக்ட்ரிக்கல் துறையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் எலக்ட்ரிக்கல் துறையில் பல புதிய சாதனைகள் ஊக்குவிப்பதற்கு வசதியாக எலக்ட்ரிக்கல் சர்க்யூர் போர்டு ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.dz863.com
இத்தளத்திற்கு சென்று Try it Free No Registration Required என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் New datasheets என்பதில் ஏற்கனவே இருக்கும் மாடலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உள்நுழையலாம் அல்லது http://www.dz863.com/index.phpஇந்த பக்கத்தை சொடுக்கி நேரடியாக புதிதாக நாமாக ஒரு சர்க்யூட் உருவாக்கலாம். எலக்ட்ரிக்கல்  சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படும் அனைத்துவகையான கருவிகளும் இங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு கருவிக்கும் எந்த வகையான அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி எதை எதனுடன் சேர்க்க வேண்டும் என்பது வரை அத்தனையும் நாமே  உருவாக்கலாம் எல்லாம் உருவாக்கி முடித்தபின் நாம் உருவாக்கிய சர்க்யூட் Diagram -ஐ JPG, PNG, GIF, or SVG கோப்புகளாக மாற்றலாம். இதைப்பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக எலக்ட்ரானிக்ஸ் துறையில்  இருப்பவர்களுக்கும் சர்க்யூட் போர்டு உருவாக்குபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.



 கிராபிக் 

Diagram வரைய உதவும் பயனுள்ள தளம்.


செயல் திட்டங்கள் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்படும் என்பதை படங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வருவது தான் முழுமையான திட்டமாக இருக்கும் அப்படி முழுமையான செயல் திட்டம் உருவாக்குவதற்கு Graphic Diagram எளிதாக வரைவதற்கு வசதியாக ஒரு தளம் உள்ளது.ஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்களை கொண்டு ஒரு கிராபிக் Diagram எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி :http://live.yworks.com/graphity
இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருப்பதில் நம்முடைய செயல் திட்டத்திற்கு எந்த வடிவம் சரியாக இருக்குமோ அந்த வடிவத்தை முதலில் தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பலவிதமான வடிவங்களில் நமக்கு எந்த வடிவம் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து வலது பக்கம் இருக்கும் இடத்தில் சேர்த்து நேர்த்தியான செயல்திட்டம் உருவாக்கலாம். எங்கு எப்படி இணைப்பு கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி அனைத்துவிதமான வடிவங்களையும் நாம் சொடுக்கி நமக்கு தகுந்தாற் போல் மாற்றி அமைக்கலாம். எல்லா வடிவங்களையும் சேர்த்து உருவாக்கிய பின் நம் செயல் திட்டத்தை PNG கோப்பாக மாற்றி சேமிக்கலாம் கண்டிப்பாக அவசரமாக செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், செயல்திட்டம் உருவாக்க மென்பொருள் இல்லை என்று எண்ணுபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


 முக்கிய தினங்களை 

            ஞாபகப்படுத்தும் 

                                 புதுமையான தளம்.


நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்  மறந்துவிட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்த நாள்  மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது.நம் பெற்றோர்கள் முதல் சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்த  நாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான் இதற்காக பல தளங்கள் இருந்தாலும் ஒரு தளம் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை நமக்கு ஞாபகப்படுத்து வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://live.ss-birthdayreminder.com
இத்தளத்திற்கு சென்று Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு  இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து நம்  நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய  தினங்களை நாம் இத்தளத்தில் பதிந்து வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் செல்லப்பெயர் அல்லது அவர்களின் பெயர் மற்றும் பிறந்த தினம் என அனைத்தையும் சேமித்து வைப்பதன் மூலம் குறிப்பிட்ட  தினத்திற்கு முந்தைய தினம் நமக்கு இமெயில் மூலம் ஞாபகப்படுத்தும்  நாளை உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லுங்கள் என்று நம்  இமெயிலில் செய்தி வரும். அதன் பின் அலைபேசியிலோ அல்லது  மெயில் மூலமாகவோ நாம் வாழ்த்து சொல்லலாம். அவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக  இருக்கும். நம் பிறந்த நாளை மறக்காமல் வைத்து வாழ்த்து சொன்னதால்  அவர்களின் மனதிலும் நீங்கள் இடம் பிடிக்கலாம்.மறதியான நமக்கு இது போன்ற தளங்களின் சேவை பயனுள்ளதாக இருக்கும்.



 இசையை 

படத்துடன் 

அள்ளிக்கொடுக்கும் தளம்.


இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும் சில வகை இசைகள் மனதை வருடும் சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும் அந்த வகையில் இன்று மனதிற்கு ஒய்வளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் அதே போல் தான் சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.ambient-mixer.com
இயற்கையில் இருந்து வரும் மெல்லிய இசை நம் மனதிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில்
இந்ததளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்கு தகுந்தபடி மாற்றி அமைக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதிற்கு ஒய்வளிக்கும். இந்தத்தளம் கண்டிப்பாக இயற்கையை நேசிக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும்.

தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி

 உங்கள் குழந்தைகளுக்கு


அழகான தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி

 வைக்க உதவும் பயனுள்ள தளம்.


இணைய உலகில் தமிழ் பெயர்களை தேட வேண்டும் என்றால் அதற்காக பல மணி நேரம் செலவு செய்தும் சரியான பெயரை தேர்வு செய்ய முடியாமல் இருக்கும் நமக்கு உதவ ஒரு தளம் ஆயிரக்கணக்கான அழகான தமிழ்பெயர்களை கொண்டுள்ளது.அழகான இனிமையான தமிழ் பெயர்களை நம் குழந்தைகளுக்கு சுட்டுவதற்கு உதவியாக ஆயிரக்கணக்கான தமிழ் பெயர்களை கொண்டு ஒரு தளம்  நட்சத்திரப்படி பெயர் வைக்க உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.peyar.in
பெயர் என்று இருக்கும் இந்ததளத்தில் அழகான தமிழ்பெயர்கள் அகர வரிசைப்படி கொடுத்துள்ளனர், எளிதாக பெயர் வைக்க உதவியாக எந்த எழுத்தில் நம் குழந்தையின் பெயர் இருக்க வேண்டும் என்று பார்த்து அந்த வரிசையில் சென்று எளிதாக தேடலாம், இத்துடன் நட்சத்திரப்படி நம் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பக்கத்திலும் 100 பெயர்கள் விதம் காட்டுகின்றனர். இப்படி நாம் பார்க்கும்  பெயர்களை எல்லாம் ” கோப்பு வடிவில் பெறுக “ என்பதை சொடுக்கி கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம். கண்டிப்பாக தமிழில் அழகான இனிமையான பெயர் தேடும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

 உடனடியாக


 பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?


என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட்டா  உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட்டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர் ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பலமணி நேரம் செலவு செய்தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.resumesimo.com
இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை  சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர் , முகவரி ,  கல்வித்தகுதி , இதரதகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.பல்வேறு வகையான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள்ள்லாம். எதையெல்லாம் மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது. எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனைவரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும்போது
பிரிண்ட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்கி நம் வாழ்க்கையில் புது திருப்பத்தை உருவாக்கும் இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.




                   உலகத்தின் 1402 டிவி 

          சேனல்களையும் ஒரே இடத்தில் 


நம் கணினி மூலம் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல
மொழிகளிலும் இருக்கும் 1402 டிவி சேனல்களையும் ஒரே தளத்தில்
இருந்து கண்டு ரசிக்கலாம்  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணையதளங்கள்
இருந்தாலும் சில தளங்கள் ஆன்லைன் மூலம் பார்க்க கட்டணம்
வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக
ஆன்லைன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் 1402  டிவி
சேனல்களையும் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.tvweb360.com/
இந்தத்தளத்திற்கு சென்று  எந்த நாட்டின்
டிவி சேனல் பார்க்க வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுக்க
வேண்டும் அடுத்து அந்த நாட்டில் எந்த மொழி சேனல் வேண்டுமோ
அதையும் தேர்ந்தெடுந்தால் குறிப்பிட்ட மொழி சேனல்கள் பல
நமக்கு கிடைக்கும் இதில் எந்த சேனல் வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து சொடுக்கினால் அந்த சேனலை நாம் இலவசமாக
பார்க்கலாம். செய்திகள் , வரலாறு , காமெடி, பொழுது போக்கு
சினிமா எனப் பல சேனல்களை நாம் இலவசமாக இங்கிருந்து
பார்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.




உலகின் முக்கிய செய்தி , திரைப்படம் மற்றும் 

பொழுதுபோக்கு சேனல்கள் அனைத்தும் ஒரே 

                               இடத்தில்.


உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் முதல் வெளிநாட்டு செய்தி சேனல்கள் வரை அனைவரும் செய்திகளை உடனடியாக தங்கள்செய்திகளை தெரிந்து கொள்வதில் சில முன்னனி நிறுவனங்கள் மட்டுமல்லாது திருவாளர் பொது ஜனமும் ஆவலாகவே உள்ளனர் , பல செய்தி தளங்களில் வரும் செய்திகளை காட்டிலும் உலகின் முக்கிய செய்தி சேனல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக பல செய்தி சேனல்களை பார்த்து வருவதுண்டு ஆனால் ஆன்லைன் மூலம் கடந்த நிமிடம் நடந்த செய்திகளை உடனுக்கூடன் எடுத்து சொல்ல உலகின் பல செய்தி சேனல்கள் உள்ளது இவை அனைத்தையும் நாம் ஒரே இடத்தில் இருந்து இலவசமாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://wwitv.com
இத்தளத்திற்கு சென்று நாம் உலகின் முக்கிய செய்தி சேனல்களின் செய்திகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு காட்டப்பட்டிருக்கும் இதில் எந்த செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாகசெய்தியின் முழுவிபரமும் அறிந்து கொள்ளலாம்.இணையத்தில் உலாவந்து கொண்டிருக்கும் நாம் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து உலகின் முன்னனி செய்தி சானல்களில் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்ளலாம், தொலைக்காட்சி மற்றும் செய்தித்துறை மற்றும் நம் அனைத்து நண்பர்களுக்கும்  இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


           உலகெங்கும் எடுக்கப்பட்ட அரிய 

    ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம்

 இலவசமாக பார்க்க உதவும் பயனுள்ள தளம்.


ஆவணப்படங்கள் என்பது எடுக்கப்படும் நபருக்கு உண்மையிலே பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் பல தரப்பட்ட ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.
பதிவு செய்ய வேண்டிய கருத்துகளை பெரிய அளவில் படம் எடுத்து தான் காட்ட வேண்டும் என்பதில்லை,பெரிய அளவில் நடிகர்கள் என்று யாரும்  வேண்டியதில்லை இங்கு கருத்தை பதிவு செய்ய வேண்டியது தான் முக்கியம் அந்த வகையில் உலகெங்கிலும் எடுக்கபப்ட்ட அரிய பல டாக்குமெண்டரி  பிலிம்-களை நாம் ஒரே இடத்தில் இருந்து பார்ப்பதற்குஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://documentary.net
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் துறைகளில் எந்தத்துறை சார்ந்த ஆவணப்படங்கள் பார்க்க வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் குறிப்பிட்ட அந்தத்துறையில் இதுவரை எடுக்கப்பட்ட அரிய ஆணவப்படங்களை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆவணப்படங்களும் அழுத்தமான சில கருத்தை பதிவு செய்வதாகவே இருக்கிறது.ஒவ்வொரு துறையிலும் சிறந்த ஆவணப்படங்கலை வரிசைப்படுத்தியுள்ளனர், புதிதாக ஆவணப்படங்கள் எடுக்க விரும்புபவர்களுக்கும், ஆவணப்படங்கள் மேல் விருப்பம் உள்ள அனைவருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.

10 பேருடன் CONFERENCE CALL




ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் 

குழும அழைப்பு ( free conference call ) செய்து MP3 

கோப்பாக சேமிக்கலாம்.


ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பேருடன் பேசும் வசதி கொண்ட அலைபேசிகள் தற்போது  இருந்தாலும் ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் Conference call செய்து பேசிய உரையாடலை MP3 கோப்பாக மாற்றி  சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் நாளும் புதிது புதிதாக சேவைகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் நேரடியாக பேசவும் அந்த உரையாடலை சேமித்து வைக்கவும் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://keeptherecord.com
இத்தளத்திற்கு சென்று Start now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் பெயரும் இமெயில் முகவரியும் கொடுத்து உள்நுழைய வேண்டும் அடுத்து வரும் திரையில் Room Code என்று ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதை உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களையும் இத்தளத்திற்கு வர செய்து Room code கொடுத்து பேச ஆரம்பிக்கலாம்.கணினி வசதி இல்லாதவர்கள் குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அங்கு Room code கொடுத்து Conference call -ல் இணையலாம். யார் Room உருவாக்குகிறார்களோ  அவர்கள் எப்போது வேண்டுமானாலும் Call Cut செய்து வெளியே வரலாம், Conference call -ல் நாம் எல்லாம் பேசி முடித்தபின் இமெயில் வழியாக அந்த உரையாடலை MP3 கோப்பில் தரவிரக்க இணைப்பும் கொடுக்கிறது  இத்தளம்.  மாணவர்கள்,ஆசிரியர்கள் என Conference call பேசும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.



               போட்டோஷாப் எந்த டூலை எப்படி 

         பயன்படுத்த வேண்டும் சொல்லித்தரும் 

                             பயனுள்ளதளம்.


புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர் போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம்  உள்ளது.புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்யும் நமக்கு போட்டோஷாப் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் இப்படி பயனுள்ளதாக இருக்கும் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூலையும் ( Photoshop Tool) எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://simplephotoshop.com/photoshop_tools/
இத்தளத்திற்கு சென்று  போட்டோஷாப்-ல் எந்த டூலைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கினால் போதும் அந்த டூலின் பயன் என்ன என்பது முதல் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான Short Cut key என்ன என்பது வரை அத்தனையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.போட்டோஷாப் மென்பொருளை கற்றுக்கொள்வது கடினம்
என்றும் சில மாதங்கள் வரை ஆகலாம் என்று நினைக்கும் அனைவரும் ஒவ்வொரு டூலையும் சொடுக்கி அதைப்பற்றி தெரிந்து கொண்டு போட்டோஷாப் பயன்படுத்தினாலே அனைவரும் போட்டோஷாப்-ல் திறமையுள்ளவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு போட்டோஷாப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



இன்ஜினியரிங் ( Engineering Books Download ) 

மாணவர்களுக்குத் தேவையான அனைத்து 

புத்தகங்களையும் இலவசமாக தறவிரக்க .


இன்ஜினியரிங் , சட்டம் , மற்றும் பிஸினஸ் தொடர்பான அனைத்து வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தையும் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bookboon.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது தொடர்பான அனைத்து புத்தகங்களும் காட்டப்படும் இதில் நமக்கு தேவையான புத்தகத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எந்த நாட்டில் , என்ன படிக்கிறோம்  என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை சொடுக்கி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.



ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை 


   வீடியோவுடன் காட்டும் பயனுள்ள தளம்


அரிய வனவிலங்குகளைப் பற்றிய அனைத்து வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோக்களையும் ஒரே இடத்தில் இருந்து காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் வனவிலங்குகள் தொடர்பான அனைத்து வீடியோக்கள், விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.itvwild.com
Itv Wild என்ற இத்தளத்திற்கு சென்று உலக அளவில் பிரபலமான வனவிலங்குகளின் வீடியோக்களையும் இதற்காக நடத்தும் போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.அரிய பல விலங்குகளின் வீடியோக்கள் இத்தளத்தில் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது, எந்த விலங்கைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து சொடுக்கினால் போதும். குறிப்பிட்ட விலங்கு சார்ந்த அனைத்து வீடியோக்களும் நமக்கு காட்டப்படும். வனவிலங்குகள் பற்றி தெரிந்துகொள்வதற்காக குவிஸ் போட்டியும் நடத்துகின்றனர், குழந்தைகளுக்கும் வனவிலங்கு பற்றி தகவல்களை சேகரிப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

டைப் செய்த வார்த்தைகளை படிக்க




          நீங்கள் டைப் செய்த வார்த்தைகளை படிக்க 

                                உதவும் வெப்சைட்


நம் பெயரை அல்லது நம் நிறுவனத்தின் பெயரை வெளிநாட்டினர் படித்தால் எப்படி இருக்கும் கூடவே நாம் பேசும்விதமும் அவர்கள் வார்த்தையை உச்சரிக்கும் விதமும் சற்றுவித்தியாசமாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகளை ஆண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் பெண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் அழகாக படித்துக் காட்டுகிறது.தட்டச்சு செய்த வார்த்தைகளை படிக்க நாளும் ஒரு இலவச மென்பொருளும் பல இணைய தளங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளம் நாம் தட்டச்சு செய்த வார்த்தையை அழகான தரமான ஆடியோவாக மாற்றி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.abc2mp3.com/convert.php
இத்தளத்திற்கு சென்று  Text to Convert என்பதில் நாம் எந்த வார்த்தையை ஒலி கோப்பாக மாற்ற வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுக்க வேண்டும் அதிகபட்சமாக 2000 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்யலாம். தட்டச்சு செய்து முடித்தபின் Email Address என்பதில் நம் இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும். இமெயில் மூலம் தான் நமக்கு ஆடியோ கோப்பு கிடைக்கும் அதனால் சரியான இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும். அடுத்து இருக்கும் Voice to Use என்பதில் ஆண் குரல் அல்லது பெண் குரல் யார் குரல் வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Speed என்பதில் வார்த்தைக்கான வேகம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து பின் Sucrity image இல் இருக்கும் வார்த்தையை தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். நாம் கொடுத்த வார்த்தைகள் ஒலி கோப்புகளாக மாற்றப்பட்டு நமக்கு இமெயில் அனுப்ப்பட்டுவிடும். கண்டிப்பாக இந்தத்தளம் எழுத்து வடிவ கோப்புகளை ஒலி கோப்புகளாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.