meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2013-06-23 | computer from village computer from village: 2013-06-23 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, ஜூன் 29, 2013

விண்டோஸ் 7 ற்கு கடவுச்சொல் மறந்து போனால் எப்படி மாற்றுவது


கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை,விண்டோஸ் இயங்குதளத்தின்  Admin  கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணணியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர்
கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7  DVD  தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் 7 Bootable DVD  மூலமாக குறிப்பிட்ட கணணியை தொடங்குங்கள்.  Install திரையில்   Repair your Computer  லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும்  Options  திரையில்  Command Prompt  ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும்  Command Prompt  திரையில் கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

copy c:windowssystem32sethc.exe c:

இப்பொழுது  Sticky Keys  கோப்பானது  C: இல் கொப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe  கோப்பை  Sticky Keys  இற்கு பதிலாக  Replace  செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

copy c:windowssystem32cmd.exe c:windowssystem32sethc.exe


Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை   Sticky keys  கோப்பை இயக்கும் பொழுது அதற்கு பதிலாக  Command Prompt  திறக்கும்.

இப்பொழுது கணணியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள்.   Login   திரை தோன்றும் பொழுது  Shift Key  ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல  Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக  Command prompt  திறக்கும்)

Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.(பயனர்பெயர்(xxx) மற்றும் கடவுச்சொல்லை( new password ) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)

net user xxx newpassword

அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி   Sticky Keys   கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து Command Prompt  சென்றுஇ கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.

c:sethc.exe c:windowssystem32sethc.exe.

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது கடவுச்சொல் மாற்றப்பட்டு விடும்.

                       தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு


தமிழுக்கும் எழுத்து  பேச்சு வந்தாச்சு
கண்தெரியாத பலரும்  Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. 
இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை.
இன்று  இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது .

 mileeeiisein என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

உங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்


இதற்கு தேவையானது இரண்டு சாப்ட்வேர்கள் (software)
1.VidCoder
2.My MP4Box (இந்த சாப்டுவேருக்கு .Net framework 3.5 தேவை )
.Net framework 3.5
Step1:  வீடியோ கோப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் (select the file)alt


 VidCoder  சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவவும்
பிறகு உங்களுடைய DVD யை உங்கள் கணினியில் செலுத்தவும் .
VidCoder சாப்ட்வேர் மூலம் VIDEO_TS என்ற போல்டரை (folder) உங்கள் DVD யில் இருந்து தேர்வு செய்யவும்.
Step2: DVD யில் இருந்து MP4 ஆக மாற்றுதல்
VidCoder ல்,  Ctrl + T அழுத்தவும் இல்லையேல்
File –> Enque Multiple Titles என்பதை menu வில் தேர்வு செய்யவும்
பிறகு DVD யில் அனைத்து titles களையும் தேர்வு செய்து queue சேர்க்கவும் .
உங்களுக்கு தானாகவே encoding ஐ தேர்வு செத்து இருக்கவும் அதுவே conversion செய்ய சிறந்ததாக இருக்கும்.
இல்லையேல் உங்களுக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாம்
பிறகு Encode என்ற button ஐ அழுத்தவும்.
உங்களின் கணினியின் திறனை பொருத்தும் வீடியோவின் நீளத்தைப் பொருத்தும்
நேரம் எடுத்துக் கொள்ளும்.
Step3: இணையத்திற்கு (ex: youtube) ஏற்றவாறு மாற்றுதல் :alt
MyMP4Box software மூலம் vidcoder software Mp4 ஆகா மாற்றிய கோப்புகளை தேர்வு செய்து நமக்கு தகுந்தாற்போல் எவ்வளவு நேரம் வேண்டுமோ அதை கட்டத்தினுள் கொடுத்தால். இந்த மென்பொருள் தானாகவே விடியோவை பகுதிகளாக பிரித்து கொடுத்துவிடும் .
இதன் பயன்பாடு என்னவெனில் நீங்கள் வீடியோவை youtube ல் ஏற்றும் பொழுது பதினைந்து (15 mins) நிமிடத்திற்கு மேல் இருக்கும் வீடியோவை எடுத்துக் கொள்ளாது . எனவே நீங்கள் இந்த மென்பொருள் மூலம் எளிதாக உங்கள் வேலையை முடித்துக் கொள்ள முடியும்

                  கணினியில் என்ன நடக்கிறது?

உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

What's Running is a product that gives you an inside look into your Windows 2000/XP/2003 system.

Explore processes, services, modules, IP-connections, drivers and much more through a simple to use application. Find out important information such as what modules are involved in a specific process.

Control your system by starting and stopping services and processes. Configure your startup programs easily.

சாதாரணமாக Task Manager காட்டாத பல செய்திகளை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் virus பின்னணியில் இயங்குகின்றதா? Registry மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை? IP தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல System தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

சுட்டி இதோ :

http://www.whatsrunning.net/whatsrunning/download.aspx

தொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி?

Start பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்தி்டவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for ? என்று கொடுக்கப்பட்டு்ள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.
1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.
2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.
3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.
4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.

இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.

Windows 7 ன் முதல் Service Pack வந்துவிட்டது

பெரும்பாலான கணினிகளில் ஆட்சி புரியும் Microsoft Windows தன்னுடைய அடுத்த மயில் கல்லாக 2009 ற்கு பிறகு தற்பொழுது Windows 7 ன் முதல் சர்வீஸ் பேக்கை வெளியிட்டுள்ளது. முதலில் சர்வீஸ் பேக் என்றால் என்னவென்று பார்ப்போம் .
alt

“Service Pack” = ஓரு மென்பொருள் உருவாக்கப்பட்ட பிறகு , அதில் வரும் பிழைகளை நீக்கவும் மற்றும் மென்பொருளை மேன்படுத்த வேண்டியவற்றை ஒன்று சேர்த்து தருவதுதான் சர்வீஸ் பேக். இதை கணினியில் (Computer) நிறுவும் பொழுது நம்முடைய கணினியில் முன்பே நிறுவிய மென்பொருளில் தானாகவே வேண்டிய மாற்றங்களை செய்து விடும். இதன் மூலம் மென்பொருளின் பாதுகாப்பையும் மேன்படுத்த முடியும்.

தற்பொழுது மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வீஸ் பேக்கில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றாலும் , அவர்கள் கூறியபடி Windows server 2008 R2 வின் செயல்திறனை மேன்படுத்தியுள்ளனர், இது Windows 7 server ஐ போன்றதாகும். இதில் வேறுபடக்கூடிய நினைவு திறனையும் (dynamic memory) மற்றும் Remote FX என்ற தொழில்நுட்பத்தையும் உட்புகுத்தியுள்ளார்கள். இதன் மூலம் பல கணினிகளை விர்ச்சுவல் (Virtual) முறையில் இணைக்க முடியும் மேலும் கிராபிக்ஸ் திறனையும் அதிகப் படுத்த முடியும்.

மேலும் இந்த சர்வீஸ் பேக்கில் சில பிழைகளை (bugs) சரி செய்தும் , பாதுகாப்பை மேன்படுத்தியும் இருக்கிறார்கள். மேலும் விவரங்கள் அறியவும் , இந்த சர்வீஸ் பேக்கை பெறவும் கீழுள்ள இணைய முகவரியை பயன்படுத்தவும்.

சுலபமாக தமிழ் மூலம் ஆங்கிலம் கற்கலாம்


                                                  ஆங்கிலம் கற்க்க எளிய வழி



நமது தாய்மொழியாம் தமிழ் உடன் தற்போது ஆங்கிலம் அறிந்திருப்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.ஆங்கிலம் தற்போது கற்று கொண்டு இருப்பவர்களுக்கு Word Hippo என்ற இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.wordhippo.com/



இந்த தளத்தில் உள்ள வசதிகள் சில
1.ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான பிற வார்த்தைகளை அறிய உதவுகிறது .

2.ஒரு ஆங்கில வார்த்தைக்கு எதிர்பத வார்த்தையை அறிய உதவுகிறது .

3.ஒரு ஆங்கில வார்த்தையை கொடுத்தால் அந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி இருக்கும் ஆங்கில வரியை தருகிறது.

4.முக்கியமாக ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒருமை(singular), பன்மை(plural),நிகழ்காலம்(present tense) மற்றும் எதிர்கால(past tense) ஆங்கில வார்த்தைகளை தருகிறது.

5.மேலும் ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு மாற்றம் செய்யவும் செய்கிறது.
http://www.wordhippo.com/