meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2013-09-01 | computer from village computer from village: 2013-09-01 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வியாழன், செப்டம்பர் 05, 2013


உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !


புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை
என்று பார்க்கச்சொல்வீர்கள்.
அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் வேகம் குறைந்ததாக ( Slow ) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சொப்ற்வெயார்களால் ( Automatic Running Programes ) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள்   Start  பட்டனை அழுத்தி search programs and files என்பதில் ரைப் செய்து



அதில்  msconfig  என்று டைப் செய்து என்ரர் (Enter)அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு (Wndow) ஓப்பன் ஆகும் 



அதில்  Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டுOK செய்துவிடலாம்.

அடுத்து  Start > Control Panel > Add or Remove Programs  சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை ( Software ) நீக்கிவிடலாம்.


அடுத்து  My Computer > C Drive  சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து   Properties    தேர்ந்தெடுத்து   Disk clean up  என்ற இடத்தை கிளிக் செய்து



கிளிக் செய்து வரும் விண்டோவில் அதில் உள்ள அனைத்தையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.


அடுத்து  Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter   என்ற பகுதிக்குச் சென்று  Defragment   என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.


2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல்    Error Display என்று அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.

இந்த பிரச்சனை தட்டை (  Error Display ) எப்படி போக வைப்பது.

Start > All Programs > Accessories > System Tools > System Resotre என்பதை கிளிக் செய்து

உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு (window) ஓப்பன் ஆகும்.



அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து   Next > Next  அழுத்தி  Finish  செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும்  (Restart ). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை தட்டு ( Error Display ) மறுபடியும் வராது.

இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்


இணைய உலாவியில் செலவிடும்                  நேரத்தை மிச்சப்படுத்தும் 20                                      குறுக்குவழிகள்


நாம் இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே செலவிடுகின்றோம்.  நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள  
 KeyBordShortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும்
வேலைகளுக்கான keyboard Shortcuts கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை மிகவும்  பயனுள்ளதாக  ஆக்கிக்கொள்ளலாம்இங்கு Internet Explorer, Firefox, google chrome, Opera, Safari ஆகிய இணைய உலவிகளுக்கான keyboard Shordcuts தரப்பட்டுள்ளன

Ctrl + N : புதிய விண்டோவை open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.

Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.

Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.

F5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.

Ctrl + F5 : வன்மையான
 Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache
எல்லாவற்றையும் நீக்கி விட்டு  அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத்
தரும்.

Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + E : இது உங்கள் cursor ஐ Browser இன் search bar க்கு நகர்த்தும்.

Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு  சொல்லைத் தேடுவதற்கு உதவும்.

Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும்  உதவும்.

Ctrl + C அல்லது Ctrl + V  Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும்  உதவும்.

Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு  உதவும்.

Ctrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.

Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில்
 இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl  ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும்
போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.

Ctrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம்
 பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும்
Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ
அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்

Ctrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்

Ctrl + Enter : http://www.
 , .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை  type
செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது  தானகவே போட்டுக்கொள்ளும்.  உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.

Shift + Enter : http://www. , .net என்பதை பூர்த்தி செய்வதற்கு

Ctrl + Shift + Enter : http://www. , .org என்பதை பூர்த்தி செய்வதற்கு

          பேஸ்புக் தளத்திற்கான குறுக்கு வழிகள்

                                         (Shortcut key )


பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணையத்தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. குறுக்கு வழிகள் (Shortcut key )  பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ (கீபோர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து,
அதனை இணைக்க வேண்டும்.

விண்டோஸ் இயக்கத்தில் பயர்பொக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift.
குரோம் மற்றும் இன்ரர்நெற் எக்ஸ்புளோரர் பிரவுசரில் Alt.
இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.

புதிய மெஜேஜ் பெற – M.
பேஸ்புக் சேர்ச் – ?
நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ் – 1.
உங்கள் புரோபைல் பேஜ் – 2.
நண்பர்களின் வேண்டுகோள்கள் – 3.
மெஜேஜ் மொத்தம் – 4.
நோட்டிபிகேஷன்ஸ் – 5.
உங்கள் அக்கவுண்ட் செற்றிங்ஸ் – 6.
உங்கள் பிரைவசி செற்றிங்ஸ் – 7.
பேஸ்புக் ஹோம் பக்கம் – 8.
பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் – 9.
பேஸ்புக் ஹெல்ப் சென்டர் – O.
இறுதியில் தரப்பட்டுள்ள கீகளை, மேலே குறிப்பிட்டது போல அந்த மாடிபையர் கீயுடன் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக பயர்பொக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரோபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.
Google Chrome
Alt+1 —> For Homepage
Alt+2 —> For Profile page
Alt+3 —> For Friendship Requests
Alt+4 —> For Messages
Alt+5 —> Notifications
Alt+6 —> For account Page
Alt+7 —> For Privacy Settings
Alt+8 —> For Facebook’s Page On Facebook
Alt+9 —> For Facebook Terms of use
Alt+0 —> For Facebook Help Center
Alt+? —> Enables Facebook Search
Alt+m —> Compose a New Message
 Internet Explorer and Mozilla Firefox 
Shift+Alt+1 —> For Homepage
Shift+Alt+2 —> For Profile page
Shift+Alt+3 —> For Friendship Requests
Shift+Alt+4 —> For Messages
Shift+Alt+5 —> Notifications
Shift+Alt+6 —> For account Page
Shift+Alt+7 —> For Privacy Settings
Shift+Alt+8 —> For Facebook’s Page On Facebook
Shift+Alt+9 —> For Facebook Terms of use
Shift+Alt+0 —> For Facebook Help Center
Shift+Alt+? —> Enables Facebook Search
12.Shift+Alt+m —> Compose a New Message

கணனியோடு தொடர்புடைய பாகங்களும் கணனி பாகங்களும்



கணனியோடு தொடர்புடைய பாகங்களும் கணனி பாகங்களும்




கணனியோடு தொடர்புடைய பாகங்களும் கணனி பாகங்களும்.








card reader
 VGA CABLE

processor



CD DRIVE

FAN



 FLOPPY DISK DRIVE


 HARD DRIVE
 RAM

 MEMORY CARD




 ROUTER


 VIDEO CARD
INTERNET CABLE 


 card reader



 MOUSE

MONITER


POWER SUPPLY



POWER SUPPLY


 MOTHERBOARD

 MOTHERBOARD


 Universal Serial Bus (USB)
 POWER CABLE
processor

processor
 SOUND CARD



 KEY BOARD



USB PORT





PRINTER


 SCANNER

கம்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?


கம்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது

கம்யூட்டர் என்றாலே ஆங்கிலத்திலேயே இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள்-கணித்திரையகத்தில் ஆங்கிலத்திற்கான முக்கியத்துவம், கணிப்பொறியின் ஆங்கில அச்சு முறைகள் மற்றும் கணிப்பொறியைப் பற்றி வெளிநாட்டுப் புது
செய்திகளும், அறிவிப்புகளுமே இப்படி ஒரு மாயையை மக்கள்
மனதில்
பதித்துள்ளன. ஆனால் இவையனைத்தும் ஒரு தவறான கருத்தாகும். கம்யூட்டரில் ஆங்கிலம் போல எந்த மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

   இன்றைய நிலையில் கம்யூட்டரில் தமிழ்ப் பயன்பாடு இரு நிலைகளில் பயன்படுகிறது. அவை அச்சுவேலை மற்றும் தகவல் தொடர்பு பணிகளே ஆகும். கம்யூட்டர் வாயிலாக அச்சு வேலைகளில் அச்சகம், விளம்பர நிறுவனங்கள், பதிப்பகங்கள், தட்டச்சு மையங்களில் பயன்படுகிறது. தகவல் தொடர்பில் மல்டிமீடியா, கடிதப்போக்குவரத்து, இணையம் ஈமெயில், செல்லுலர், பேஜர் என முக்கியப் பணிகளிலும் தமிழ் மொழி கம்யூட்டர் வாயிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பயன்படும் தமிழ்மொழி எப்படி கணிப்பொறியில் பொருந்துகிறது? செயல்படுகிறது? சிக்கல்கள், தீர்வுகள் ஆகியன பற்றி இப்போது பார்ப்போமா?

  கம்யூட்டரில் தமிழ்ப் பயன்பாடு அறிவதற்கு முன் கம்யூட்டர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் காண்போம். ஒரு கம்ட்டர் பூஜ்யம், ஒன்று ஆகிய எண்கள் அடங்கிய பைனரி எண்களைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறு எந்த மொழியோ புரியாது. இருப்பினும், ஒரு கணிப்பொறிரயை எந்தத் துறையிலும் பயன்படுத்த முடியுமா? என்று வியக்க வைக்கும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் கணிப்பொறி பயன்பட்டு வருவதை நாம் அறிவோம்.

   உதாரணத்திற்கு நாம் தினமும் படிக்கும் பத்திரிகையில் இருந்து விண்ணில் செலுத்தும் செயற்கைக் கோள் வரை கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும் சரி, அந்தத்துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது டேட்டாவை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும். கணிப்பொறியை ஒரு கணிப்பானாக (Calculator) நாம் பயன்படுத்தும் பொழுது எந்தத் சிக்கலும் ஏற்படாது. ஏனென்றால் அதற்குத் தேவையான தகவல்கள் எண்கள் தான். அதே கணிப்பொறியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் பேசும் ஒரு மொழியின் எழுத்துக்களைத்தான் பயன்படுத்திச் சேமிக்க வேண்டும் அல்லவா! அதனால் ஒரு கணிப்பொறி செயல்பாட்டுத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும். ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் "குறியீட்டு முறை" (Character Encoding) என்று அழைக்கிறோம்.

   நாம் இந்த குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பிறகு அதை நாம் அச்சிட்டோர் அல்லது கணிப்பொறி திரையிலோ பார்க்க விரும்பும் பொழுது அந்த எண்ணை எழுத்துக்களாக மாற்றித்தானே பார்க்கவேண்டும். இதற்காக கணிப்பொறியில் எழுத்துரு (Font) என்ற ஃபைல் பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்துரு ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன வடிவம் என்பதை குறிப்பிட்டு விடும்.

  ஆங்கில மொழிக்கு "ஆஸ்கி" ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் ஆன்ஸி என்ற குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறார்கள். தமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துரு தனியார் தயாரிப்பாளரும் ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் ஒரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் சேமித்த தகவல்களை மற்றொரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் மென் பொருளால் அறிய முடியாத நிலை நிலவியது.

   மேலும் புனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும்  நிறுவனங்களில்  புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.

   இந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது. தற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.

யூடியுப் விளம்பரங்களை தடை செய்ய


யூடியுப் விளம்பரங்களை தடை செய்ய

யூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா? கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்?குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது. அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்..

லிங்க்
https://chrome.google.com/webstore/detail/adblock-plus/cfhdojbkjhnklbpkdaibdccddilifddb?hl=en-US

புதன், செப்டம்பர் 04, 2013

1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!

 

அதிக செலவு பிடிக்கும் காரியங்களைக் குறிப்பிட-யானையைக் கட்டித் தீனி போட்டது போல என்பார்கள். அவற்றில் ஒன்றுதான், கார் வாங்குவது என புலம்புபவர்களும் இன்று உண்டு. பெட்ரோல் விலை உயரத் தொடங்கிய பிறகு பலருக்கு இந்த சோக நிலை.
ஆனால், எதிர்காலத்தில் இதில் மாற்றம் வரும் போலிருக்கிறது. ஒரே ஒரு லிட்டர் பெட்ரோலில், ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடிய காரை துபாயைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
Eco-Dubai 1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எடை குறைவான கார் தயாரிப்பில், மாணவர்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். அடுத்த 2 வாரங்களில் அதன் சோதனை ஓட்டம் தொடங்கி விடும் என்று துபாய் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சிக் குழு மாணவர் அஹமத் காமிஸ் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் இன்னும் நீண்ட காலத்துக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே, அவற்றைச் சிக்கனம் செய்யும் தொழில்நுட்பங்கள் அவசரத் தேவை என்கிறார் அவர்.
அதனால், இந்தக் கார்தான் ஐக்கிய அரபு குடியரசின் எதிர்காலம் என்றும் அஹமத் கூறினார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை மாதம் நடைபெறும் கண்காட்சியில் இந்தக் கார் இடம்பெறும் எனத் தெரிகிறது.
இந்தக் கார் வெளிவந்து, குறைந்த விலைக்கும் கிடைத்தால், பெட்ரோலுக்காக நாடுகள் இடையே நடக்கும் போரைத் தவிர்ப்பதுடன், பெட்ரோலை பக்கத்து வீட்டுக்கு காருடன் பகிர்ந்து கொள்ளவும் வழி ஏற்படலாம்
.