meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2012-04-01 | computer from village computer from village: 2012-04-01 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, ஏப்ரல் 07, 2012

your Project PRESENTATION


your Project PRESENTATION

பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , தொழிலதிபர்கள் என அனைவருக்கும் தங்கள் பாடங்களையும் தங்களுடைய பிராஜெக்ட் பற்றிய தகவல்களையும்  ஆன்லைன் மூலம் காட்சியளிப்பு (Presentation ) செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அரசியல் செய்திகள் , சினிமா , அரட்டை என்பதற்கு மத்தியில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமல்லாமல் நம் அறிவை பகிர்ந்து கொள்ளவும் நம் எண்ணங்களையும் காட்சியளிப்பு மூலம் புரிய வைப்பதற்கும் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://present.me
பவர் பாயிண்ட் காட்சியளிப்பு மூலம் தான் நாம் இதுவரை நம் பிராஜெக்ட் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வந்துள்ளோம் , ஆனால் இனி இத்தளம் மூலம் எளிதாக காட்சியளிப்பு செய்யலாம். இத்தளத்திற்கு சென்று Pricing என்ற மெனுவை சொடுக்கி Basic Account Free என்பதில் Sign up செய்யவும், 15 நிமிடத்திற்கு இலவசம்.  ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் காட்சியளிப்பு  காட்டாமல் ஒரே நேரத்தில் அனைவருக்கும் காட்சியளிப்பு காட்டலாம். ஆடியோ , வீடியோ என அனைத்தும் சேர்ந்தது  போல் காட்சியளிப்பு உருவாக்கலாம்.ஏற்கனவே நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பவர்பாயிண்ட் காட்சியளிப்பை கூட அப்லோட் செய்து பயன்படுத்தலாம்.  நாம் உருவாக்கிய காட்சியளிப்பை நம் வலைப்பூவிலும் காட்டலாம்.ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வீடியோ இமெயில்


                                     வீடியோ இமெயில்


வீடியோ இமெயில் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சில நேரங்களில் நாம் என்ன தான் இமெயில் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கேமிரா  மூலம் பேசி வீடியோ மெயிலாக உடனடியாக அனுப்பலாம்.
இணையதள முகவரி: http://mailvu.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கேமிரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை  சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை  பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில்  யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் இமெயில் முகவரி மற்றும் நம் இமெயில் முகவரி, பெயர் , வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text  என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம், இங்கு கொடுத்திருக்கும் Notify me when this message read என்ற செக் பாக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு இமெயில் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு  எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மீச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மெயிலாக தமிழ் மொழியிலே பேசி அனுப்புவோம்.
 

தேடலைப் பொருத்தவரை கூகிள் கொடுக்காத சேவை என்றும் ஏதுவும் இல்லை , இருந்தும் கூகிளில் பல சேவைகளைப்பற்றி மக்கள் இன்றும் தெரியாமல் இருந்து கொண்டு இருக்கின்றனர், வகை வாரியாக தேடுவதில் கூகிளை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.helioid.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  Search என்ற கட்டத்திற்குள் நாம் தேட வேண்டிய வார்த்தைகளை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு நாம் கொடுத்த வார்த்தைக்கு வகையான தளங்களை மட்டும் பிரித்து நமக்கு காட்டுகிறது. தேடல் முடிவுகளும் கூகிளை விட சிறப்பானதாகவே தெரிகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் கூகிளில் சென்று தேடி நமக்கு சரியான விடை கிடைக்காதபோது இதைப்பயன்படுத்தி பார்த்தால் உண்மை தெளிவாக புரியும். முகப்பு பக்கத்தில் லோகோவும் பொத்தான் படமும் தவிர பெரிதாக ஏதும் இல்லை , தேடல் முடிவுகளும் வேகமாகவும்  விவேகமாகவும் இருக்கிறது. இதேத் தேடலை கூகிளிலும் தேடலாம் எப்படி என்றால் நாம் தேட வேண்டிய வார்த்தைகளை “  “ ( அடைப்புக்குறி) கொடுத்து தேடினால் அதே வகையுள்ளதை காட்டும். ஆனால் கூகிள் காட்டும் தளங்களை விட இந்தத்தளம் சிறப்பாகவே தன் வேலையைச் செய்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் தேடலில் மாற்றம் விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலக பிரபலங்களை பற்றி அறிய


முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற  தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை தான். ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை  என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.yatedo.com
உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான். வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும்  தெரிந்து கொள்ளலாம். இத்தேடலில் இந்தியாவை காட்டிலும் வெளிநாட்டினர் விபரங்களே அதிகம் கிடைக்கிறது. முக்கியமான நபர்களின் விபரங்களை தெடும் நபர்களுக்கு இத்தேடுபொறி பயனுள்ளதாக இருக்கும்.

குழந்தைகளின் அறிவுதிறனை வளர்க்க


                                      குழந்தைகளின் அறிவுதிறனை வளர்க்க


குழந்தையின் அறிவு வளர்ச்சியை எப்படி வளர்க்கலாம் , படிப்பறிவு மட்டும் போதுமா ? , எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் திறமை , ஞாபக சக்தி , முடிவு எடுக்கும் திறமை என அனைத்தையும் நாம் சிறுவயதில் இருந்தே வளர்க்கலாம் நம் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு ஒரு தளம்  உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.schoolsparks.com
இத்தளத்திற்கு சென்று Free worksheets என்பதில் தொடங்கி  ASSESSMENT மற்றும் EARLY CHILDHOOD என்பது வரை ஒரு குழந்தையின் சிந்தனை வளர்ச்சியை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று  துல்லியமாக சொல்லி கொடுக்கின்றனர். பலவித எளிய பயிற்சிகள்
இத்தளத்தில் உள்ளது நம் குழந்தைக்கு சரியான பயிற்சி எது என்று பார்த்து அதை சொல்லிக்கொடுத்தால் போதும், பேப்பரில்  தாரணமாக ஒரு  குழந்தை கிறுக்குவதில் தொடங்கி அட்டை மற்றும் பொம்மைகளை சரியாக  சேர்ப்பது வரை அத்தனை பயிற்சியும் சொல்லி கொடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் நம் குழந்தை சிறப்பாக வரும் என்பதை நாம் இதன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.புத்திசாலி குழந்தைகளை  உலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பும் பெற்றோர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் ஓவியங்களை விற்பனை செய்ய


உங்கள் ஓவியங்களை உலகமறிய செய்யவும் விற்பனை செய்யவும்
காலத்தால் அழியாத ஒவியம் பலவற்றை இப்போது மக்கள்
உருவாக்கி வருகின்றனர். ஆனால் இப்படி வரையும் ஒவியத்தை
உலகறியச்செய்வது எப்படி மற்றும் இந்த ஒவியங்களை விற்பனை
செய்வது எப்படி என்ற கேள்வியும் கூடவே இருந்து வருகிறது
உங்களுக்கு உங்கள் ஒவியத்திறமைகளை வெளி உலகத்திற்க்கு
கொண்டு செல்லவும் இதன் மூலம் பணம் சம்பாதிக்க
உதவுவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.artflock.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு என்று ஒரு இலவச
கணக்கு உருவாக்கிக்கொள்ளவும். அதன் பின் நம்மிடம் இருக்கும்
ஒவியத்தை புகைப்படம் எடுத்து அதன் அளவு , ஒவியத்தின்
பொருள் மற்றும் பல விபரங்களை கொடுத்து இலவசமாக
பதிவேற்றலாம் நம் ஒவியம் பல பேருக்கு சென்றடைவதுடன்
சில பேர் புகைப்படத்துடன் அதன் விலையையும் நிர்ணயம்
செய்து வைக்கலாம் பிடித்தவர்கள் உடனடியாக ஆன்லைன்
மூலம் நம் புகைப்படங்களை வாங்கலாம். பல இணையதளங்கள்
நம் புகைப்படத்தை பதிவேற்ற காசு வசூலிக்கின்றனர் ஆனால்
இவர்கள் நாம் விற்கும் புகைப்படத்தில் சிறிய தொகையை
கமிஷனாக எடுக்கின்றனர் கண்டிப்பாக இந்த தளம் ஒவியத்
துறையில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ASCII படம் வரையலாம்



ASCII படம் வரையலாம்

ASCII ( American Standard Code for Information Interchange ) ஒவ்வொரு விசைக்கும் இணையான ஒவ்வொரு Character-ஐ வைத்து எளிதாக சில நிமிடங்களில் (Ascii art) படம் வரையலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது ASCII பயன்படுத்தி வரையப்படும் படங்களில் பலவித நன்மைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது எங்கு வேண்டுமானாலும் நாம் இந்த ASCII ஆர்ட் பயன்படுத்தலாம், Size மிகவும் குறைவாக இருக்கும்.ASCII ஆர்ட் வரைய நமக்கு உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.asciiflow.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம் இருக்கும் வடிவங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து  வரையத்தொடங்கலாம், ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து பலகையில் வரையும் அந்த டூல் பற்றி அறிந்து கொள்ளலாம். எல்லாம் எழுத்துக்களை கூட நாம் சேர்க்க விரும்பும் கோனத்தில் உருவாக்கலாம். எல்லாம்  வரைந்து முடித்த பின் Export என்பதை சொடுக்கி எளிதாக காப்பி செய்யலாம், Html கோப்பாக மாற்ற விருப்பம் உள்ளவர்கள் Export Html என்பதை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம். ASCII ஆர்ட் வரைய விரும்பும் அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்த்து சொல்லும் தேதிகளை நினைவூட்ட



   வாழ்த்து சொல்லும் தேதிகளை நினைவூட்ட

நம் பெற்றோர்கள் முதல் சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்த  நாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான் இதற்காக பல தளங்கள் இருந்தாலும் ஒரு தளம் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை நமக்கு ஞாபகப்படுத்து வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்  மறந்துவிட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்த நாள்  மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://live.ss-birthdayreminder.com
இத்தளத்திற்கு சென்று Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு  இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து நம்  நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய  தினங்களை நாம் இத்தளத்தில் பதிந்து வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் செல்லப்பெயர் அல்லது அவர்களின் பெயர் மற்றும் பிறந்த தினம் என அனைத்தையும் சேமித்து வைப்பதன் மூலம் குறிப்பிட்ட  தினத்திற்கு முந்தைய தினம் நமக்கு இமெயில் மூலம் ஞாபகப்படுத்தும்  நாளை உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லுங்கள் என்று நம்  இமெயிலில் செய்தி வரும். அதன் பின் அலைபேசியிலோ அல்லது  மெயில் மூலமாகவோ நாம் வாழ்த்து சொல்லலாம். அவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக  இருக்கும். நம் பிறந்த நாளை மறக்காமல் வைத்து வாழ்த்து சொன்னதால்  அவர்களின் மனதிலும் நீங்கள் இடம் பிடிக்கலாம்.மறதியான நமக்கு இது போன்ற தளங்களின் சேவை பயனுள்ளதாக இருக்கும்.

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

அனிமேசன் வாழ்த்துக்கள் உருவாக்க


                                                           அனிமேசன் வாழ்த்துக்கள் உருவாக்க


வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான  வடிவில் இருந்து எளிதாக  உருவாக்கி அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதள முகவரி : http://www.easyhi.com
இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்று  படம் 1-ல் காட்டியபடி Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிகலாம். வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள் , அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது, விரும்பிய படங்களையும்  அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.

அனிமேசன் படங்கள் எளிதாக உருவாக்க


                                                   

                                          அனிமேசன் படங்கள் எளிதாக உருவாக்க



ஆன்லைன் மூலம் ஸ்டிக் மேன் அனிமேசன் உருவாக்க விரும்புபர்களுக்கு உதவியாக பயிற்சி எடுத்து பழகுவதற்கு ஒரு தளம் உள்ளது இத்தளம் மூலம் நாம் எளிதாக படம் வரைந்து அனிமேசன் செய்து பார்க்கலாம்.
பிளாஷ் அனிமேசன் படித்துக்கொண்டிருப்பவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு படமாக வரைந்து அனிமேசன் செய்து பார்த்து எப்படி இருக்க வேண்டும் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உடனடியாக எப்படி எல்லாம் அனிமேசன் செய்தால் நன்றாக இருக்கும் என்று  காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.drawastickman.com/index.htm
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் White board-ல் நாம் அனிமேசன் செய்ய விரும்பும் படத்தை வரைய வேண்டும். வரைந்து முடித்த பின் அங்கு இருக்கும் Done என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் வரைந்த படத்தின் ஸ்டிக் மேன் அனிமேசன் பார்க்கலாம்.அடிப்படையில் இது செயல்படுவது Background அனிமேசன் தான் என்றாலும் நாம் White board-ல் வரைந்த புகைப்படத்தை அப்படியே ஒரு படமாக சேர்த்து நமக்கு நாம் வரைந்த படம் அனிமேசன் ஆவது போல் இருக்கிறது. ஆரம்ப நிலையில் அனிமேசன் கற்க விரும்புபவர்களுக்கு இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

ஆங்கில திரைபடங்களை ஓரே இடத்தில்கான


        ஆங்கில திரைபடங்களை ஓரே இடத்தில்கான



ஆங்கில திரைப்படங்களில்  கணிதத்தை மையமாக வைத்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஒரே இடத்தில் காட்ட நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு
திரைப்படங்கள் பல வகையான பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு நமக்கு காட்ட பல இணையதளங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட துறை சார்ந்த திரைப்படங்களை தேடுவதென்பது இன்று வரை சிரமமாக உள்ளது என்று எண்ணும் அனைவருக்கும் கணிதத் திரைப்படங்களை வகைப்படுத்தி காட்ட ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி :http://www.math.harvard.edu/~knill/mathmovies/index.html
இத்தளத்திற்கு சென்று கணிதத்தை முன்னிருத்தி வெளிவந்த பல வகையான ஆங்கிலத் திரைப்படங்களில் இருந்து குறிப்பிட்ட திரைப்படத்தில் கணிதத்தை சொல்லும் காட்சிகள் அனைத்தையும் ஒரே சொடுக்கில் எளிதாக தறவிரக்கி பார்க்கலாம். இரண்டு வகையான ஃபார்மெட்டில்[ SWF, M4V ] இருந்து நமக்கு எந்த வகையான ஃபார்மெட் வேண்டுமோ அதை சொடுக்கி தரவிரக்கலாம். உதாரணமாக கணித்தை பற்றிய ஆங்கிலப்படங்களில் அதுவும் குறிப்பாக கணிதத்தை பற்றிய காட்சிகளை மட்டும் தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

அழகிய லேபிள் சில் நிமிடங்களில்


                                                                     அழகிய லேபிள் சில் நிமிடங்களில்


பலவிதமான சேவைகள் ஆன்லைன் மூலம் பல தளங்களில் கிடைக்கின்றது அந்த வகையில் இன்று அழகான லேபிள் நம் விருப்பபடி உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஏதாவது ஒரு தளத்தில் அல்லது யாரவது உருவாக்கி கொடுத்தலேபிளைத்தான் இதுவரை பயன்படுத்தி வருகிறோம் நம் விருப்பப்படி லேபிள் உருவாக்க முடியுமா என்று நினைப்பவர்களுக்கு உதவ ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://labeley.com/beer
இத்தளத்திற்கு சென்று நாம் நம் விருப்படி எந்த வண்ணத்தில் , எந்த வடிவத்தில் , என்னவெல்லாம் வேண்டும் என்று நினைத்தோமோ
அத்தனையும் ஒவ்வொன்றாக சில நிமிடங்களில் தேர்ந்தெடுத்து அழகான புதுமையான லேபிளை உருவாக்கலாம். முதலில் Pick a label shape என்பதில் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதையும் அடுத்ததாக இருக்கும் Main Graphics என்பதில் லேபிள் உள்ளே என்ன டிசைன் இருக்க வேண்டும் என்பதையும் அடுத்ததாக Banners and ribbons என்பதில் எந்த பேனர் பிடித்திருக்கிறதோ அதையும் தேர்ந்தெடுத்து அடுத்ததாக Text and Upload என்பதில் தேவையான டெக்ஸ்ட் தகவலை கொடுத்து அடுத்து இருக்கும் Save and Share என்பதை சொடுக்கி நம் கணினியில் சேமித்து வைக்கலாம், உருவாக்கிய லேபிளை நம் நண்பர்களிடம் எளிதாக பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். கண்டிப்பாக சிறுவகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் கம்யூட்டரில் இன்டர் நெட் வேகத்தை அதிகரிக்க


  உங்கள் கம்யூட்டரில் இன்டர் நெட் வேகத்தை அதிகரிக்க


இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.