meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2012-04-08 | computer from village computer from village: 2012-04-08 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

வோர்ட் தொகுப்பின் நிறத்தை மாற்ற

வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி வைத்தும் இயக்கும் வகையில் இவ்வழி உள்ளது. முதலில் Start, All Programs, Microsoft Word வழியாக சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக “Blue background, white text.” என்று இருக்கும் . அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.


டெக்ஸ்ட் வரிகளில் எண்களைச் சேர்க்க: டாகுமெண்ட் ஒன்றில் குறிப்பிட்ட வரி ஒன்றில் உள்ள சொல்லைக் குறிப்பிட பாரா 1ல் 24 ஆவது வரியில் நான்காவது வார்த்தை என்றெல்லாம் சொல்ல வேண்டியதிருக்கும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு வரிக்கும் ஒரு எண்ணைக் கொடுத்துவிட்டால் அந்த எண்ணைக் குறித்து எளிதாகச் சொல்லிவிடலாம் அல்லவா? சரி எப்படி டெக்ஸ்ட்டில் எண்களை அமைப் பது? ஆவணத்தைத் தயாரிக்கும் போதே எண்களை வரிக்கு முன் அமைக்க முடியாது. ஒவ்வொரு வரிக்கு முன் எண்ணை அமைத் தால் ஏதாவது சொல்லை திருத்துகையில் எண் முன் பின்னே செல்ல வாய்ப்பு ஏற்படலாம். இதற்குப் பதிலாக வேர்ட் தொகுப்பில் தானாக வரிகளில் எண்களை அமைக்கவும் தேவையற்ற இடங்களில் நீக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எண்களை அமைக்க கீழ்க்கண்ட வாறு செயல்படவும்.முதலில் பைல் (File) மெனுவினைக் கிளிக் செய்திடுங்கள். பின் அதிலிருந்து பேஜ் செட் அப் (“Page Setup”) தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் லே அவுட் (“Layout”) என்னும் டேபைக் கிளிக் செய்திடவும். பின் ““Line numbers” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் தந்துள்ள விருப்பங்களில் (restart numbering after each page, start at a particular number, etc.) உங்கள் திட்டத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் டயலாக் பாக்ஸை மூடவும்.
வரிகளில் எண்கள் இருக்கும். ஆனால் நீங்கள் ஆவணத்தை எடிட் செய்கையில் சாதாரணமாக இந்த எண்கள் தெரியாது. ஆனால் அவை அங்குதான் இருக்கின்றன. எண்களைப் பார்க்க வேண்டுமென்றால் பிரிவியூ வைக்காணவும். எடிட்டிங் போது எண்களைப் பார்க்க வேண்டும் என்றால் வியூ (“View”) மெனுவினைக் கிளிக் செய்து பேஜ் லேஅவுட் (“Page Layout”) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வரிகளில் எண்களையும் காணலாம். ஆவணத்தையும் எடிட் செய்திடலாம்.சரி இந்த எண்களை நீக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக நீங்கள் சில பாராக்களில் மட்டும் எண்கள் இருப்பதனை விரும்ப மாட்டீர்கள். அவற்றை நீக்க என்ன செய்திட வேண்டும்? எண்களை நீக்க வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின் டெக்ஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் பாராகிராப் ( “Paragraph”) என்பதனைத் தேர்ந்து எடுக்கவும். வரும் பல டேப்கள் உள்ள டயலாக் பாக்ஸில் “Line and Page Breaks” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். அதில் “Suppress Line Numbers” என்ற கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்க வேண்டும். அதன்பின் ஓகே கிளிக் செய்திட

அலாரம்

சிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.

இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.

நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.

`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.

http://onlineclock.net/

விளையாட்டு



குச்சி மனிதர்களின் கிரிக்கெட்
கம்ப்யூட்டர் கிரிக்கெட் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களுக்கு..
T20, உலக கோப்பை, ஆஷிஷ் போன்ற பல்வேறு விதமான கிரிக்கெட்கள் உள்ளன.

இங்கு குச்சி மனிதர்களின் டென்னிஸ், பூட் பால், பேஸ் பால் போன்ற விளையாட்டுகளும் அடக்கம்.

பிளாஷ் விளையாட்டு விளையாட செல்லுகள் இங்கே

ஆன்லைன் வருமானம்


இணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன.
அதில் ஒன்றுதான் இது..

PaisaLive.com

இங்கு சென்று ஒரு கணக்கு (account) ஆரம்பித்து அந்த வெப்சைட் கொடுக்கும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டும். ஒவ்வொரு கிளிக்கும் .25 பைசா அல்லது 5 ரூபாய் 10 ரூபாய் என அந்த மெயில்இல் உள்ளதுபடி செய்தால் கிடைக்கும்.
ஒரு சோதனை முயற்சியாகவே இதை செய்துள்ளேன்.. இதுவரை 200 ரூபாய்கு மேல் எனது கணக்கில் இருப்பு வைக்கப்படுள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றும் பணவோலை எனக்கு கிடைத்ததும் இங்கு மீண்டும் உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்.

அதுவரை நீங்கள் விரும்பினால் இந்த லிங்க்ஐ கிளிக் செய்து உங்கள் கணக்கை துவங்குங்கள்..எனக்கும் உதவியாக இருக்கும்..

FM ரேடியோ ஆன்லைனில்

http://tamilradios.com/Suryan.html ஆன் லைனில் FM ரேடியோ கேட்டு மகிழுங்கள்

இருந்த இடத்திலிருந்து பணம் சம்பாதிக்க


இருந்த இடத்திலிருந்து பணம் சம்பாதிக்க


Blog
நீங்கள் நினைக்கும், கேட்கும், படிக்கும், பார்க்கும் அத்தனை விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தொடங்குங்கள் ஒரு ப்ளாக்கை. அதில் உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் சிந்தனை களையும் கொட்டுங்கள். ப்ளாக் ஆரம்பிப்பது மிகச் சுலபம். ஆங்கிலத்தில்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. தாராளமாக தமிழிலேயே ஆரம்பிக்கலாம். உங்கள் ப்ளாக்குக்கு வரவேற்பு இருக்கும்பட்சத்தில் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் கிடைக்கும். பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே வருமானம் எகிறும்.



You Tube

உங்களது திறமை களை வீடியோ படமாக எடுத்து அதை யூ.டியூப்-ல் பதிவு செய்து வெளியிடுங்கள். உங்களது வீடியோவைப் பார்க்க அதிகளவில் பார்வையாளர்கள் வரும்போது விளம்பரங்களும் தேடிவரும். இதற்கு யூ.டியூப்-க்குச் சென்று ஒரு அக்கவுன்ட் ஆரம்பியுங்கள். ஜி-மெயில் அக்கவுன்ட் தொடங்குவது போல இதுவும் சுலபமானதே. நீங்கள் எடுக்கும் வீடியோக்களை அதில் 'அப்லோட்’ செய்து, அதை நம் வெப்சைட்டிலோ அல்லது ப்ளாக்கிலோ சேர்க்க வேண்டும். இதற்கு விளம்பரங்கள் வர நீங்கள் விரும்பினால் adsense எனும் சைட்டுக்கு சென்று உங்களது யூ.டியூப் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் அவர்கள் தகுதியிருப்பின் விளம்பரங்கள் தருவார்கள். ஃபிளிக்ஸ்யா (flixya) மற்றும் மீடியாஃபிளிக்ஸ் (mediaflix) போன்ற இணையதளங் களில் மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

புகைப்படங்கள்

உங்களுக்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் என்றால் அதன் மூலமும் சம்பாதிக்கலாம். .ஃபோடோலியா, ட்ரீம்ஸ்டைம், ஸட்டர்ஸ்டாக் போன்ற புகைப்பட ஏஜென்ஸிகள் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு அதற்குத் தகுந்த தொகையைக் கொடுக்கின்றன.
மற்றவர்களுக்காகத் தேடுங்கள் (Researching for Other)
மற்றவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடிக் கொடுப்பது, டிசைன் செய்து கொடுப்பது என ஆன்லைனிலேயே வேலைகளைச் செய்து கொடுக்கலாம். வாரத்தில் கொஞ்ச நேரம் செலவழித்தால் போதும் இதற்கு. பல அமைப்புகள், நிறுவனங்களுக்கு இது போன்ற தகவல்களை ஆன்லைனிலிருந்து தேடிக் கொடுப்பவர்களுக்கு அதற்குத்தகுந்த தொகை கொடுக் கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் இதன் மூலம் எளிதாகச் சம்பாதிக்கலாம்.

இ-டியூசன்ஸ்

உங்களுக்கு கற்றுத் தரும் திறமை இருந்தால் இ-டியூசன் மூலம் நிறையவே சம்பாதிக்கலாம். கற்றுத் தருவதில் நீங்கள் எக்ஸ்பர்ட் என்றால் உடனே tutorvista, e-tutor, smartthinking, tutor.comபோன்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களது கற்பிக்கும் திறன் சிறப்பாக இருந்தால் இணையதளத்தில் வெப்பினார் (Webinar) மூலம் செமினார் எடுக்கலாம். மாணவர்கள் நீங்கள் நடத்தும் பாடத்தை வெப்பினார் மூலம் பார்க்க கட்டணம் கட்ட வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆசிரியர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க அரிய வாய்ப்பு.

அஸிஸ்டென்ட்

சிறு தொழில் செய்யும் நிறுவனங்களால் பலரை முழு நேர வேலையாட்களாக நியமித்து சம்பளம் தர முடியாது. அப்படிப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தரலாம். இதன் மூலம் கணிசமான பணம் பார்க்கலாம். வேலையில்லா பட்டதாரிகள் இந்த வாய்ப்பை அதிகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மறுவிற்பனை

உங்களது இணைய முகவரி யிலோ அல்லது உங்கள் இணைப்பிலிருக்கும் நண்பர்களின் இணையதளத்திலோ பொருட் களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம். அது உங்களின் சொந்தப் பொருளாக தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பிற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் விற்றுத் தந்து, கமிஷன் பெறலாம். நேரமும் தொடர்பும் உள்ள யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்.

SMSஸ் இலவசமாக அனுப்ப

 indyarocks.com


இலவச SMS சேவையை indyarocks.com வழங்குகிறது. இந்தியா முழுவதும் நீங்கள் SMS அனுப்பலாம். நீங்கள் இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பர்ஐ கொடுத்து கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் facebook போன்று இந்த இணையம் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு வீடியோ (youtube வீடியோ லிங்க் கூட )லிங்கிற்கு 0.05 பைசாவும், நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவிற்கு 0.05 பைசாவும் வழங்கப்படுகிறது. அதாவது அவர்கள் தங்கள் 'google adsense' வருமானத்தை வாடிகையளர்களுடன் ( members ) பகிர்த்துகொள்வதாக இத்தளம் தெரிவிக்கின்றது.

வாரம் தோறும் இத்தளத்தில் ஆரம்பிக்கப்படும் சிறந்த blog, photos, video விற்கு சன்மானம் வழங்கப்படுகின்றது.

சில பொருட்களுக்கு இலவச பிட்டிங் ( free bidding ) வழங்குகிறது. இத்தளத்தில் உள்ள விளையாட்டுகளை விளையாண்டு அதிக மதிப்பெண் (score) பெருபவருகளுக்கு சன்மானம் வழங்கப்படுகின்றது.