வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி வைத்தும் இயக்கும் வகையில் இவ்வழி உள்ளது. முதலில் Start, All Programs, Microsoft Word வழியாக சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக “Blue background, white text.” என்று இருக்கும் . அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.
டெக்ஸ்ட் வரிகளில் எண்களைச் சேர்க்க: டாகுமெண்ட் ஒன்றில் குறிப்பிட்ட வரி ஒன்றில் உள்ள சொல்லைக் குறிப்பிட பாரா 1ல் 24 ஆவது வரியில் நான்காவது வார்த்தை என்றெல்லாம் சொல்ல வேண்டியதிருக்கும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு வரிக்கும் ஒரு எண்ணைக் கொடுத்துவிட்டால் அந்த எண்ணைக் குறித்து எளிதாகச் சொல்லிவிடலாம் அல்லவா? சரி எப்படி டெக்ஸ்ட்டில் எண்களை அமைப் பது? ஆவணத்தைத் தயாரிக்கும் போதே எண்களை வரிக்கு முன் அமைக்க முடியாது. ஒவ்வொரு வரிக்கு முன் எண்ணை அமைத் தால் ஏதாவது சொல்லை திருத்துகையில் எண் முன் பின்னே செல்ல வாய்ப்பு ஏற்படலாம். இதற்குப் பதிலாக வேர்ட் தொகுப்பில் தானாக வரிகளில் எண்களை அமைக்கவும் தேவையற்ற இடங்களில் நீக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எண்களை அமைக்க கீழ்க்கண்ட வாறு செயல்படவும்.முதலில் பைல் (File) மெனுவினைக் கிளிக் செய்திடுங்கள். பின் அதிலிருந்து பேஜ் செட் அப் (“Page Setup”) தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் லே அவுட் (“Layout”) என்னும் டேபைக் கிளிக் செய்திடவும். பின் ““Line numbers” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் தந்துள்ள விருப்பங்களில் (restart numbering after each page, start at a particular number, etc.) உங்கள் திட்டத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் டயலாக் பாக்ஸை மூடவும்.
வரிகளில் எண்கள் இருக்கும். ஆனால் நீங்கள் ஆவணத்தை எடிட் செய்கையில் சாதாரணமாக இந்த எண்கள் தெரியாது. ஆனால் அவை அங்குதான் இருக்கின்றன. எண்களைப் பார்க்க வேண்டுமென்றால் பிரிவியூ வைக்காணவும். எடிட்டிங் போது எண்களைப் பார்க்க வேண்டும் என்றால் வியூ (“View”) மெனுவினைக் கிளிக் செய்து பேஜ் லேஅவுட் (“Page Layout”) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வரிகளில் எண்களையும் காணலாம். ஆவணத்தையும் எடிட் செய்திடலாம்.சரி இந்த எண்களை நீக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக நீங்கள் சில பாராக்களில் மட்டும் எண்கள் இருப்பதனை விரும்ப மாட்டீர்கள். அவற்றை நீக்க என்ன செய்திட வேண்டும்? எண்களை நீக்க வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின் டெக்ஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் பாராகிராப் ( “Paragraph”) என்பதனைத் தேர்ந்து எடுக்கவும். வரும் பல டேப்கள் உள்ள டயலாக் பாக்ஸில் “Line and Page Breaks” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். அதில் “Suppress Line Numbers” என்ற கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்க வேண்டும். அதன்பின் ஓகே கிளிக் செய்திட

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக