meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, ஜூன் 29, 2013

Windows 7 ன் முதல் Service Pack வந்துவிட்டது

பெரும்பாலான கணினிகளில் ஆட்சி புரியும் Microsoft Windows தன்னுடைய அடுத்த மயில் கல்லாக 2009 ற்கு பிறகு தற்பொழுது Windows 7 ன் முதல் சர்வீஸ் பேக்கை வெளியிட்டுள்ளது. முதலில் சர்வீஸ் பேக் என்றால் என்னவென்று பார்ப்போம் .
alt

“Service Pack” = ஓரு மென்பொருள் உருவாக்கப்பட்ட பிறகு , அதில் வரும் பிழைகளை நீக்கவும் மற்றும் மென்பொருளை மேன்படுத்த வேண்டியவற்றை ஒன்று சேர்த்து தருவதுதான் சர்வீஸ் பேக். இதை கணினியில் (Computer) நிறுவும் பொழுது நம்முடைய கணினியில் முன்பே நிறுவிய மென்பொருளில் தானாகவே வேண்டிய மாற்றங்களை செய்து விடும். இதன் மூலம் மென்பொருளின் பாதுகாப்பையும் மேன்படுத்த முடியும்.

தற்பொழுது மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வீஸ் பேக்கில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றாலும் , அவர்கள் கூறியபடி Windows server 2008 R2 வின் செயல்திறனை மேன்படுத்தியுள்ளனர், இது Windows 7 server ஐ போன்றதாகும். இதில் வேறுபடக்கூடிய நினைவு திறனையும் (dynamic memory) மற்றும் Remote FX என்ற தொழில்நுட்பத்தையும் உட்புகுத்தியுள்ளார்கள். இதன் மூலம் பல கணினிகளை விர்ச்சுவல் (Virtual) முறையில் இணைக்க முடியும் மேலும் கிராபிக்ஸ் திறனையும் அதிகப் படுத்த முடியும்.

மேலும் இந்த சர்வீஸ் பேக்கில் சில பிழைகளை (bugs) சரி செய்தும் , பாதுகாப்பை மேன்படுத்தியும் இருக்கிறார்கள். மேலும் விவரங்கள் அறியவும் , இந்த சர்வீஸ் பேக்கை பெறவும் கீழுள்ள இணைய முகவரியை பயன்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக