meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

 ஆசியாவின் 


மிகப்பெரிய டிஜிட்டல் 

தமிழ் மொழி அகராதி


ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பு கொடுக்க பல தளங்கள் உள்ள நிலையில் தமிழ் வார்த்தைக்கு விரிவான விளக்கம் கொடுக்க தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அழகு கொஞ்சும் தமிழில் உள்ள வார்த்தைகளை பல நேரங்களில் நமக்கு விளக்கம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்போம். இணையதளங்களில் தேடினாலும் இதற்கான விளக்கம் பல நேரங்களில் தெரிவதில்லை ஆனால் இனி தமிழ் வார்தைக்கு உண்டான விளக்கத்தை எளிதாக புரியும் படி அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை அனைவரும் நொடியில் அறிந்து கொள்ளும் பொருட்டு  தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் டிக்ஸ்னரியில் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய  தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம் கூடவே நாம் கொடுக்கும் வார்த்தைக்கு இணையான
வார்த்தையையும் காட்டுகிறது. திருக்குறளில் கூட பல வார்த்தைகளுக்கு விளக்கதை தேடும் நமக்கு இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம் தான். தமிழ் பேராசியர்கள் மற்றும் தமிழ் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் இத்தளம் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும்.கதிர்வேலு என்பவரின் சீரான முயற்சியில் நாம் இதை பயன்படுத்துகிறோம் அவருக்கும் நம் வின்மணியின் நண்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக