உலக அளவில் இணையம் மூலம் தமிழ்
வளர்க்கும் ” தமிழ் பாடநூல் ” பயனுள்ள தளம்.
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ? எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறிய பாரதியின் கனவுப்படி தமிழ் மொழியை வளர்க்க உலகமெங்கும் பலர் இன்றும் தங்களால் இயன்ற பணியினை செய்து வருகின்றனர், அந்த வகையில் தமிழ் மொழியை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கு வசதியாக தமிழ் பாடநூல் என்று ஒரு தளம் இயங்குகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தமிழ் மொழியைப்பற்றிய அறிமுகத்தில் இருந்து , தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள், அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும், காலம் மற்றும் வண்ணங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் தமிழை உலக மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ளும் பொருட்டு ஆங்கிலம் வழியாகவே முயற்சித்து இருப்பது மகிழ்சியான ஒன்று தான் இனி இத்தளம் செய்து வரும் சேவையைப்பற்றி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.unc.edu/~echeran/paadanool/unicode/
தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமா மூன்று பாடம் இலவசம் அப்புறம் காசு கொடுத்து படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் தளங்களுக்கு மத்தியில் தமிழை இலவசமாக வீட்டில் இருந்தபடியே முழுமையாக படிக்கலாம் என்று சொல்லி இத்தளம் அனைவரையும் அழைக்கிறது. தமிழின் அடிப்படையான இலக்கணம் முதல் தமிழின் வார்த்தைகள் எங்கெல்லாம் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு பாடமாக கொடுத்து நம் தமிழ் புலமையை வளர்க்கிறது. தமிழ் மொழியைப்பற்றிய முழுமையான ஆய்வு செய்து ஓவ்வொரு பகுதியாக உருவாக்கியுள்ளனர். மற்ற மொழியினரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகான ஆங்கிலத்தில் விளக்கம் கூறி இருப்பது மேலும் சிறப்பு. இளங்கோ சேரன் என்பவர் 2004 -ம் ஆண்டு உருவாக்கிய இத்தளம் இன்றும் தமிழின் சுவையை அள்ளிக்கொடுத்து கொண்டிருப்பது தான் இத்தளத்தின் சிறப்பு. தமிழ் மேல் காதல் கொண்ட அனைவருக்கும் தமிழ் வளர்க்க நினைப்பவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக