meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013




 கிராபிக் 

Diagram வரைய உதவும் பயனுள்ள தளம்.


செயல் திட்டங்கள் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்படும் என்பதை படங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வருவது தான் முழுமையான திட்டமாக இருக்கும் அப்படி முழுமையான செயல் திட்டம் உருவாக்குவதற்கு Graphic Diagram எளிதாக வரைவதற்கு வசதியாக ஒரு தளம் உள்ளது.ஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்களை கொண்டு ஒரு கிராபிக் Diagram எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி :http://live.yworks.com/graphity
இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருப்பதில் நம்முடைய செயல் திட்டத்திற்கு எந்த வடிவம் சரியாக இருக்குமோ அந்த வடிவத்தை முதலில் தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பலவிதமான வடிவங்களில் நமக்கு எந்த வடிவம் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து வலது பக்கம் இருக்கும் இடத்தில் சேர்த்து நேர்த்தியான செயல்திட்டம் உருவாக்கலாம். எங்கு எப்படி இணைப்பு கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி அனைத்துவிதமான வடிவங்களையும் நாம் சொடுக்கி நமக்கு தகுந்தாற் போல் மாற்றி அமைக்கலாம். எல்லா வடிவங்களையும் சேர்த்து உருவாக்கிய பின் நம் செயல் திட்டத்தை PNG கோப்பாக மாற்றி சேமிக்கலாம் கண்டிப்பாக அவசரமாக செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், செயல்திட்டம் உருவாக்க மென்பொருள் இல்லை என்று எண்ணுபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக