meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013



           உலகெங்கும் எடுக்கப்பட்ட அரிய 

    ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம்

 இலவசமாக பார்க்க உதவும் பயனுள்ள தளம்.


ஆவணப்படங்கள் என்பது எடுக்கப்படும் நபருக்கு உண்மையிலே பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் பல தரப்பட்ட ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.
பதிவு செய்ய வேண்டிய கருத்துகளை பெரிய அளவில் படம் எடுத்து தான் காட்ட வேண்டும் என்பதில்லை,பெரிய அளவில் நடிகர்கள் என்று யாரும்  வேண்டியதில்லை இங்கு கருத்தை பதிவு செய்ய வேண்டியது தான் முக்கியம் அந்த வகையில் உலகெங்கிலும் எடுக்கபப்ட்ட அரிய பல டாக்குமெண்டரி  பிலிம்-களை நாம் ஒரே இடத்தில் இருந்து பார்ப்பதற்குஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://documentary.net
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் துறைகளில் எந்தத்துறை சார்ந்த ஆவணப்படங்கள் பார்க்க வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் குறிப்பிட்ட அந்தத்துறையில் இதுவரை எடுக்கப்பட்ட அரிய ஆணவப்படங்களை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆவணப்படங்களும் அழுத்தமான சில கருத்தை பதிவு செய்வதாகவே இருக்கிறது.ஒவ்வொரு துறையிலும் சிறந்த ஆவணப்படங்கலை வரிசைப்படுத்தியுள்ளனர், புதிதாக ஆவணப்படங்கள் எடுக்க விரும்புபவர்களுக்கும், ஆவணப்படங்கள் மேல் விருப்பம் உள்ள அனைவருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக