meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> உங்களுக்கென்று இணையத்தில் இலவசமாக கடை உருவாக்கலாம். | computer from village computer from village: உங்களுக்கென்று இணையத்தில் இலவசமாக கடை உருவாக்கலாம். google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

உங்களுக்கென்று இணையத்தில் இலவசமாக கடை உருவாக்கலாம்.



 உங்களுக்கென்று இணையத்தில்

இலவசமாக கடை உருவாக்கலாம்.


ஆன்லைன் மூலம் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய
நமக்கென்று ஒரு கடை இலவசமாக உருவாக்கலாம் எப்படி
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நம்மிடம் இருக்கும் எந்த பொருட்களை வேண்டுமானாலும் உலகறியச்
செய்ய ஒரு முயற்சியாக ஒரு இனையதளம் உள்ளது. இந்தத்தளத்தில்
நம்மூர் மளிகை கடைகாரர் முதல் துனிக்கடை காரர் வரை அனைவரும்
தங்களுக்கென்று இலவசமாக ஆன்லைன் கடை ஒன்றை உருவாக்கி
தங்கள் பொருட்களின் மதிப்பை அனைவரும் அறியச்செய்யலாம்.
இணையதள முகவரி : http://www.bigcartel.com
யார் வேண்டுமானாலும் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இல்லாதவர்கள்
கூட எளிதாக தங்களுக்கென்று எளிதாக இந்தத்தளம் மூலம் கடை
உருவாக்கிக் கொள்ளலாம். பேபால் மூலம் பணம் பெற்றுக்கொண்டு
பொருட்களை அனுப்பலாம். எந்த கமிஷனும் எடுக்காமல் நேரடியாக
நமக்கும் பொருள் வாங்குபவருக்கும் பாலமாக இருக்கின்றனர்.
முதல் 5 பொருட்களை மட்டும் நாம் இலவசமாக பயன்படுத்திப்பார்த்து
பயனாளர்கள் கிடைத்தால் மேலும் அனைத்து பொருட்களையும்
கொண்டு ஆன்லைன் -ல் கடை வைக்கலாம் இதற்காக மாதம்
$10 டாலர் கட்டணம் வசூலிக்கின்றனர். எல்லா வகையான
பொருட்களையும் நாம் இந்தக்கடை மூலம் உலக மக்களுக்கு காட்டலாம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக