நீங்கள் டைப் செய்த வார்த்தைகளை படிக்க
உதவும் வெப்சைட்
நம் பெயரை அல்லது நம் நிறுவனத்தின் பெயரை வெளிநாட்டினர் படித்தால் எப்படி இருக்கும் கூடவே நாம் பேசும்விதமும் அவர்கள் வார்த்தையை உச்சரிக்கும் விதமும் சற்றுவித்தியாசமாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகளை ஆண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் பெண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் அழகாக படித்துக் காட்டுகிறது.தட்டச்சு செய்த வார்த்தைகளை படிக்க நாளும் ஒரு இலவச மென்பொருளும் பல இணைய தளங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளம் நாம் தட்டச்சு செய்த வார்த்தையை அழகான தரமான ஆடியோவாக மாற்றி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.abc2mp3.com/convert.php
இத்தளத்திற்கு சென்று Text to Convert என்பதில் நாம் எந்த வார்த்தையை ஒலி கோப்பாக மாற்ற வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுக்க வேண்டும் அதிகபட்சமாக 2000 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்யலாம். தட்டச்சு செய்து முடித்தபின் Email Address என்பதில் நம் இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும். இமெயில் மூலம் தான் நமக்கு ஆடியோ கோப்பு கிடைக்கும் அதனால் சரியான இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும். அடுத்து இருக்கும் Voice to Use என்பதில் ஆண் குரல் அல்லது பெண் குரல் யார் குரல் வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Speed என்பதில் வார்த்தைக்கான வேகம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து பின் Sucrity image இல் இருக்கும் வார்த்தையை தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். நாம் கொடுத்த வார்த்தைகள் ஒலி கோப்புகளாக மாற்றப்பட்டு நமக்கு இமெயில் அனுப்ப்பட்டுவிடும். கண்டிப்பாக இந்தத்தளம் எழுத்து வடிவ கோப்புகளை ஒலி கோப்புகளாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக