விரும்பிய இசையை நாமே உருவாக்கலாம்
சிறிய ஒலியை கூட இசையாக மாற்றும் திறமை நம்மிடம் இருக்கலாம் ஆனால் இசையமைக்கத் தேவையான எந்த இசைக்கருவி (instrument )-ம் இல்லாமல் எப்படி இசையமைக்க முடியும் என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கும் இதற்கு பதிலாக ஒரு இணையதளம் நாம் பாடும் பாடலுக்கான இசையை நாமே உருவாக்கும் வண்ணம் ஒரு தளத்தை வடிவமைத்துள்ளது.
இணையதள முகவரி : http://www.ujam.com
இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். நாம் பாடினால் மட்டும் போதும் அதற்கான இசையை நம் விருப்பம் போல் தேர்ந்தெடுக்கலாம். எல்லா வகையான instrument -ம் நம் பாடலில் பயன்படுத்தலாம். ஒரு பாடலுக்கு என்னவெல்லம் தேவையோ அத்தனை வசதிகளையும் இத்தளம் நமக்கு செய்கிறது. ஒவ்வொரு இசையுடனும் உங்கள் பாடல் சேர்ந்து எப்படி இருக்கிறது என்பதை உடனுக்குடன் சோதித்துப்பார்த்துக்கொள்ளலாம். முழுமையாக இசையை உருவாக்கிய பின் அதை Mp3 கோப்பாகவும் சேமித்துக் கொள்லலாம். இசைப்பிரியர்களுக்கும் புதிய இசையை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக