meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013



அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை 

நொடியில் 

உருவாக்கலாம்.


வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான  வடிவில் இருந்து எளிதாக  உருவாக்கி அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதள முகவரி : http://www.easyhi.com
இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு  Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிகலாம். வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள் , அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது, விரும்பிய படங்களையும்  அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.அனிமேசனுடன் வாழ்த்து சொல்ல விரும்பும் நபர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.இத்தளத்தைப்பற்றிய  ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக