டிஜிட்டல் புகைப்படம் எந்த கேமிராவில் அல்லதுசெல்போனில் எடுக்கப்பட்டது என அறிவது எப்படி?
நீங்கள் போட்டோஷாப்பில் பணிபுரிகின்றவர் என்றால், பலதரப்பட்ட
புகைப்படங்களை திறந்து பணிபுரிவீர்கள். ஆனால் அது எந்த கேமரா அல்லது செல்போனில் எடுக்கப்பட்டது என்பதை போட்டோஷாப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம். இக்கட்டுரைக்காக நான் வெவ்வேறு கேமரா & செல்போன்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோதித்துப்பார்த்தேன். போட்டோஷாப் சரியாகவே தகவல்களை சொன்னது.
மேலும் உங்களுக்கே தெரியாமல் உங்களை புகைப்படமெடுத்து அதை நீங்களே பார்க்க நேரிடும் போது இந்த புகைபடத்தை யார் எடுத்திருப்பார்கள் என்ற ஐயம் உங்களிடம் எழும்தானே?. போட்டோஷாப்பை பயன்படுத்தி அது எந்த கேமராவில்/செல்போனில் எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து உங்கள் வட்டாரத்தில் யார் அந்த கேமரா/செல்போன் பயன்படுத்துகின்றனர் என்பதை வைத்து நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
முதலில் புகைப்படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். பின்னர் File>File Info ஐ அழுத்தவும்
அதில் “Camera Data 1″ என்பதை தேர்வு செய்யவும். இப்போது வலது புறத்தில் புகைப்படம் எடுக்கப்பட்ட கேமரா/செல்போனின் Make மற்றும் மாடல் எண் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி & நேரம் போன்ற தகவல்களை காணலாம். பயன்படுத்தி பார்க்கவும்.
கீழேயுள்ள இரண்டு படத்தில் முதல் படம் என்னுடைய Panasonic டிஜிட்டல் கேமராவிலும் இரண்டாவது படமானது Nokiaசெல்போனில் எடுத்த படத்தை சோதித்தபோது கொடுத்த விபரங்களாகும்.
படம் 1 டிஜிட்டல் கேமரா:
படம் 2 நோக்கியா அலைபேசி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக