கட்சி கலர் கொடுப்பது எப்படி? | கோரல்டிரா
எல்லா பேஜ் லேயவுட் (Page Layout) வேலைகளுக்கும் பயன்படுவது கோரல் டிரா (Coreldraw). அப்படி கோரலில் அடிக்கடி செய்ய வேண்டிவரும் வேலைதான் கட்சித் துண்டறிக்கைகள் (Bit Notices).
கட்சித் துண்டறிக்கைகளைத் தட்டெழுதி வடிவமைக்கும்போது. அதில் வரும் ஆட்களின் பெயர்களுக்கும், கட்சிப் பெயர்களுக்கும் அவர்களது கட்சிக் கொடியின் வண்ணத்திலேயே பெயரிட வேண்டிவரும்.அதை எப்படிச் செய்வது என்பதை நிறுவுவது இந்தப் பதிவின் நோக்கம்.
- தேவையான பெயர்களை முதலில் தட்டெழுதிக்கொள்ளுங்கள் (Type your needed Texts).
- F11 அழுத்தி பவுண்டெயின் பில் பேலட்டை (Fountain fill Pallete) ஓப்பன் செய்யுங்கள்.
- டைப்பில் லீனியர் (Linear) தேர்ந்தெடுத்து கலர் பிளண்டில் (Colour Blend) கஸ்டம் (Custom) தேர்ந்தெடுத்து தேவையான வண்ணங்களைச் சேர்க்கவும்.
- வண்ணங்களைச் சேர்த்து திருப்தியாக முடித்தவுடன். பிரீசெட்டில் நீங்கள் தயார் செய்த கட்சி வண்ண செட்டிங்கை சேமித்துக் கொள்ளுங்கள்.
- இப்படி சேமித்துக் கொண்டால் அடுத்தடுத்து வரும் பெயர்களுக்கு மீண்டும் நீங்கள் வண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பெயரைத் தேர்ந்தெடுத்து, F11 தேர்ந்தெடுத்து, பிரீசெட்டில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக