meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, பிப்ரவரி 04, 2012

அகர் மரம் வளர்ப்பு!!!
Agar Tree 

அகர் மரம்(Agar tree,Agarwood) என்பது புதிய வகை மரம் அல்ல,நமது நாட்டில் பல ஆண்டு காலமாக சித்த ,ஆயுர்வேத மருந்துகள் மற்றும் வாசனை பொருட்கள் தயாரிக்க உபயோகிக்க பட்டு வந்த மரம் தான்.ஆனால் தற்போது இந்த மரம் அழிந்து வரும் மர வகைகளில் வரிசையில் உள்ளது..இந்த மரத்தில் இருந்து தான் உலகிலேயே மிக அதிக மதிப்புடைய அகர் ஆயில் எடுக்க படுகிறது,ஒரு கிலோ ஆயில் இன் விலை அதிக பட்சம ஒரு லட்சம் வரைக்கும் விற்க படுகிறது.ஒரு கிலோ மர கட்டையின் விலை 30000 இல் இருந்து 60000 ஆயிரம் வரைக்கும் விற்க படுகிறது.

இதன் நன்மைகள்
-------------------------------
1 . மிகவும் வேகமாக வளரகுடியது.
2 . சந்தன மரம் போல அல்லாமல் 7 அவது வருடத்தில் இருந்தே அறுவடை செய்யலாம்.
3 . ஓரளவு வறட்சியை தாங்ககுடியது. ( ஆனால் மிக வறண்ட நிலங்களுக்கு அகர் உகந்தது அல்ல,வறண்ட நிலங்களுக்கு சந்தன மர சாகுபடி உகந்தது,சந்தன மர வளர்ப்பு கட்டுரையை பார்க்கவும்)

4 . உலக அளவில் அகர் மரங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

7 வருடம் நன்கு வளந்த ஒரு மரத்தில் முலம் 2 லட்சம் ருபாய் வரைக்கும் மிக எளிதாக பெறலாம்.3 மிட்டர் இடைவெளியில் ஏக்கருக்கு சுமார் 300 மர கன்றுகள் நடலாம்.பொதுவாக அகர் இந்தியாவில் அஸ்ஸாமில் அதிகமாக வளர்க்கபடுகிறது,தற்போது கர்நாடகாவில் அதிக விவாசாயிகள் அகர் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் சில தனியார் வேளாண்மை பண்ணைகள் , அகர் நாற்றுகள் மற்றும் தேவையான உரங்களை வழங்கி ,அவர்களே நல்ல விலைக்கு மரங்களை வெட்டி கொள்கிறார்கள்...

இது போன்ற தகவல்கள் நான் ஒரு விவசாய இதழிலும் சில விளம்பரங்களிலும் பார்த்தவை.உண்மையான தகவல் அறிய "அகர் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் " என்ற பதிப்பை படிக்கவும் .

மேலும் விவரங்கள் பெற தொடர்பு கொள்ளவும்: ஆனந்தபிரபு,ச 9886650235,anandhaprabhu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக