meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

அழகிய லேபிள் சில் நிமிடங்களில்


                                                                     அழகிய லேபிள் சில் நிமிடங்களில்


பலவிதமான சேவைகள் ஆன்லைன் மூலம் பல தளங்களில் கிடைக்கின்றது அந்த வகையில் இன்று அழகான லேபிள் நம் விருப்பபடி உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஏதாவது ஒரு தளத்தில் அல்லது யாரவது உருவாக்கி கொடுத்தலேபிளைத்தான் இதுவரை பயன்படுத்தி வருகிறோம் நம் விருப்பப்படி லேபிள் உருவாக்க முடியுமா என்று நினைப்பவர்களுக்கு உதவ ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://labeley.com/beer
இத்தளத்திற்கு சென்று நாம் நம் விருப்படி எந்த வண்ணத்தில் , எந்த வடிவத்தில் , என்னவெல்லாம் வேண்டும் என்று நினைத்தோமோ
அத்தனையும் ஒவ்வொன்றாக சில நிமிடங்களில் தேர்ந்தெடுத்து அழகான புதுமையான லேபிளை உருவாக்கலாம். முதலில் Pick a label shape என்பதில் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதையும் அடுத்ததாக இருக்கும் Main Graphics என்பதில் லேபிள் உள்ளே என்ன டிசைன் இருக்க வேண்டும் என்பதையும் அடுத்ததாக Banners and ribbons என்பதில் எந்த பேனர் பிடித்திருக்கிறதோ அதையும் தேர்ந்தெடுத்து அடுத்ததாக Text and Upload என்பதில் தேவையான டெக்ஸ்ட் தகவலை கொடுத்து அடுத்து இருக்கும் Save and Share என்பதை சொடுக்கி நம் கணினியில் சேமித்து வைக்கலாம், உருவாக்கிய லேபிளை நம் நண்பர்களிடம் எளிதாக பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். கண்டிப்பாக சிறுவகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் கம்யூட்டரில் இன்டர் நெட் வேகத்தை அதிகரிக்க


  உங்கள் கம்யூட்டரில் இன்டர் நெட் வேகத்தை அதிகரிக்க


இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

உங்கள் பயோடேடாவை சில நிமிடங்களில் நீங்களே உருவாக்குவது எப்பட


பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட்டா  உருவாக்க வே ண்டும் என்றால் பல பேரின் பயோடேட்டாக் களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிற தோ அதன்படி தான் பல பேர் பயோடேட்டா உரு வாக்குகின்றனர் ஆனால்மேலதிகாரி களை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக் கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பலமணி நேரம் செலவு செய் தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மே லதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் http://www.resumesimo.com.
இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை  சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்க லாம். நம் பெயர், முகவரி,  கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒவ் வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத் தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.பல்வேறு வகை யான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள் ள்லாம். எதையெல்லாம் மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்ப தற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக் கிறது. எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானா லும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனை வரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும்போது
பிரிண்ட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்கி நம் வாழ்க்கையில் புது திருப்பத்தை உரு வாக்கும் இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
  

சனி, பிப்ரவரி 11, 2012


பான் கார்டு பெற எளிய வழிகள் 

நிரந்தரக் கணக்கு எண் என்ற பத்து இலக்க எண்தான் PAN-
 (Permanent Account Number). இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வோர் இந் தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ- எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அவசியம்.
இந்த பான் கார்டை பெற தரகர்கள் மூலம் வாங்கினால், 200 முதல் 300 ரூபாய் வரை செலவு ஆகும். ஆனால், நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை நடுவங்களில் ஏதாவது ஒன்றில் நீங்களே விண் ணப்பித்தால், கட்டணம் 94 ரூபாய் மட்டுமே. இதுதவிர ஆன்லைன் மூலமும் (http://www.utiisl.co.in/) விண்ணப்பிக்கலாம்!
இதற்கு, உங்கள் புகைப்படத் துடன் கூடிய அடையாள ஆவ ணம் ஒன்றின் நகல் அதாவது, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை போன்றவற்றில் ஒன்று. அடுத்து, முகவரிக்கான ஆதாரமாக மின் கட்டண ரசீது, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் ஒன்றும், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஒன்றையும் இணைத்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்து விடும்.!
விண்ணப்பப் படிவத்தில் ஃபர்ஸ்ட் நேம் , மிடில் நேம், சர் நேம் என் கிற பகுதி இருக்கும். இதில் ஃபர்ஸ்ட் நேம் என்கிற இடத்தில் உங்கள் பெயரையும், சர் நேம் என்கிற இடத்தில் உங்கள் தந்தை யின் பெயரையும் எழுதவும். பொதுவா க தமிழர்கள் ‘மிடில் நேம்’ வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை என்பதா ல், அந்தக் கட்டத் தைக் காலியாக விட்டுவிடலாம்.
திருமணமான பெண்கள் விண் ணப்பத்தில் தந்தை பெயரை மட்டும் தான் குறிப்பிட வே ண்டும். ஏற்கெனவே பான் கார் டு வாங்கிய பெண்கள் திரும ணத்துக்குப் பிறகு முகவரியை மாற்றிக்கொள்வது அவசியம். 

சனி, பிப்ரவரி 04, 2012

ஓரு லிட்டர் எண்ணை ரூ ஓரு லட்சம்

ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்!

உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள அகர் மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள ஓர் அமைப்பு

ஒரு கிலோ சமையல் எண்ணெய் 150 ரூபாய்க்கு மேல்...’ என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்? ஒரு கிலோ அகர் எண்ணெய் ஒரு லட்சம் ரூபாய் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அது என்ன அகர் எண்ணெய்?

உலகிலேயே மிக விலை உயர்ந்தது அகர் மரம். சந்தன மரத்தைவிட சுமார் 10 மடங்கு சந்தை மதிப்பு கொண்டது. இன்றைய சந்தை விலை நிலவரப்படி 1 கிலோ அகர் மரத்தின் விலை தரத்தைப் பொறுத்து 50 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபா வரையும், 1 கிலோ அகர் எண்ணெயின் விலை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாக்கும் அதன் தரத்தைப் பொறுத்து விற்கப்படுகிறது. இந்த மரத்திலிருந்து 500 வகையான வாசனைத் திரவியங்கள், அகர் பத்திகள், விலையுயர்ந்த சோப்புகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும், மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

அகர் மரம் வளர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து, அகர் கன்றுகளைப் பயிரிட வைத்து, உரங்கள் மற்றும் தேவையான உதவிகளை பைசா செலவின்றி இலவசமாகச் செய்து வருகிறது, கர்நாடகாவைச் சேர்ந்த வனதுர்கி என்கிற அமைப்பு. தவிர, மரங்கள் வளர்ந்த பிறகு, அவற்றை நல்ல விலைக்கும் வாங்கி சந்தைப்படுத்துகிறார்கள்.

இந்த அமைப்பின் நிறுவனர் 32 வயதான தர்மேந்திராவிடம் பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரை, பரம்பரையாக விவசாயம்தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்குச் சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வேளாண்மை சார்ந்த புதிய உத்திகளையும், தொழில் நுட்பங்களையும் கற்று புது ரகச் செடிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி, ஒருமுறை இந்தோனேஷியாவிற்குச் சென்றபோது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். இதைப் பார்த்த எனக்கு, நம் நிலத்திலும் அகர் மரம் பயிரிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு, முதலில் குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து எங்கள் சொந்த எஸ்டேட்டில் பயிரிட்டோம். செலவில்லாமலேயே நல்ல வருமானம் கிடைத்தது. சந்தன மரங்களின் வேர்கள் ஒட்டுண்ணித் தன்மை கொண்டவை. இதனுடன், அகர் மரத்தை ஒப்பிட்டால் சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கக் கூடிய வருமானத்தை, அகர் மரம் வளர்க்க ஆரம்பித்த 8 லிருந்து 10 ஆண்டுகளுக்குள் கொடுக்க ஆரம்பித்துவிடும்.

நம் தென்னிந்தியாவில் அதிக விவசாயிகள் இருந்தாலும், அகர் மரம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அதனால், இது குறித்து நம் விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வந்ததால், வனதுர்கி அமைப்பை ஆரம்பித்து 30 பேர் கொண்ட எங்கள் அமைப்பினருடன் சேர்ந்து செயலில் இறங்கிவிட்டேன்.

அன்றிலிருந்து, இன்றுவரை இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அகர் மர வளர்ப்பைப் பற்றிக் கற்றுக்கொண்டும், குறைந்த விலையில் செடிகளை வாங்கிக்கொண்டும் சென்றுள்ளனர்.

ஒரு அகர்மரக் கன்றை 50 ரூபாக்குக் கொடுக்கிறோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிலேயே அதிக அகர் மரப் பண்ணைகள் வைத்திருப்பதும், தென்னிந்தியாவில் அகர் மர வளர்ப்பை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் எங்கள் வனதுர்கி அமைப்புதான். அகர் மரத்தின் பூர்வீகம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொடங்குகிறது. ஆனால், இம்மரத்தைப் பற்றி மக்கள் அதிகளவில் அறிந்திருக்கவில்லை. அகர் மரங்களின் வரலாறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இம்மரம் நம் நாட்டின் கலாச்சாரத்துடனும், இறை நம்பிக்கையுடனும் ஒன்று கலந்திருக்கின்றது. 

இம்மரத்தை விவசாயிகளுக்கு எங்கு விற்பது, எப்படி சந்தைப்படுத்துவது என்ற கவலை தேவையில்லை.ஏனென்றால், நாங்களே நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். அகர் மர வளர்ப்பிற்கு முக்கியமானது பொருத்தமான தட்பவெட்ப நிலைதான். பலதரப்பட்ட மண் வகைகளில் வளர்ந்தாலும் இயற்கை மண் வளம் மிக்க காட்டுப் பிரதேசங்களில்தான் நன்றாக வளரும். ஆண்டிற்கு 125 -750 சேன்டி மீட்டர் வரையிலான மழையளவுள்ளும், கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 1,500 மீட்டர்கள் உயரமுள்ளதுமான பிரதேசங்கள்தான் அகர் மர வளர்பிற்கு ஏற்றவை" என்று, அகர் மரம் குறித்த பல்வேறு தகவல்களை ஆர்வமாக நம்முடன் பகிர்ந்துகொண்டார் தர்மேந்திரா.

அகர் மரம் பயிரிட்டபின், அறுவடை வரையிலும் விவசாயிகளுக்கு எவ்விதச் செலவையும் கொடுப்பதில்லை. சிறப்பான கவனம் கொடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியமும், சிரமமும் ஏற்படுவதில்லை. இந்த மரங்களின் மெல்லிய இலைகள் உதிர்ந்து, அவைகளே மரங்களுக்கு இயற்கை உரமாகி விடுகின்றன. கர்நாடகாவில் மட்டும் 3,600 அகர் மரப் பண்ணைகள் உள்ளன. நம் தமிழக விவசாயிகள் அகர் மரத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அகர் மர வளர்ப்பைக் கற்றுக்கொடுக்கும் வனதுர்கி அமைப்பின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், விவசாயிகளையும் தன்னுடைய அமைப்பில் பங்குதாரர்களாக்கிக் கொண்டு, அவர்களின் விளைபொருட்களை வாங்கிக்கொள்ள முன்கூட்டியே ஒப்பந்த முறையும் போட்டுக்கொள்கிறது. இதற்காக 10 வருட அக்ரிமெண்ட் முறையும் உண்டு.

இந்தச் சங்கம்,விவசாயிகளுக்கு மருத்துவ இன்சூரன்சும் செய்துகொடுத்துள்ளது. அகர் மர வளர்ப்பு பற்றி மட்டுமல்லாமல், புதிய ரக விவசாய முறைகளையும், ஜீரோ பட்ஜெட் முறைகளையும் இலவசமாகக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். விவசாயத்திற்குத் தேவையான உரங்களை ஆர்கானிக் முறையில் இந்த அமைப்பினரே தயாரித்து இலவசமாகக் கொடுக்கின்றனர். இம்மரங்கள் மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், வாலோஸ் ஆகிய நாடுகளிலும் வளர்கின்றன.



சந்தன மரம் வளர்ப்பதற்கு வழங்குவது போலவே, அகர் மர வளர்ப்பிற்கும் மத்திய அரசு 75 சதவிகிதம் மானியத்தை ஆயுஷ் துறையின் மூலம் வழங்குகிறது. மேலும் மானியம் வழங்கும் வழிமுறைகள் பற்றி மற்ற துறைகளிலும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனதுர்கி அமைப்பு மலைவாழ் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மருத்துவச் செலவு மற்றும் படிப்புச் செலவுகளைப் பார்த்து வருகிறது. இவர்களுக்கு மேலும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.



"அகர் மரங்கள் தோற்றத்தில் சிறிய மரவகையைச் சேர்ந்தவை. விசேஷ கவனம் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. காப்பி, தேயிலை, பாக்கு, தென்னை முதலிய தோட்டங்களில் ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.



அகர் மரங்களுக்கு தேசிய அளவிலும், உலக அளவிலும் எப்போதும் அதிகத் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. மரங்களைச் சுத்தப்படுத்த ஆலையும் வைத்துள்ளோம். இம்மரத்தை வளர்ப்பதன் மூலம் விவசாயக் குடும்பங்கள் ஒளிமயமான, நம்பிக்கையான எதிர்காலத்தைப் பெற முடியும்" என்று கண்களில் நம்பிக்கையுடன் பேசி முடித்தார் தர்மேந்திரா.



தொடர்புக்கு: 94484 34561
அகர் மரம் வளர்ப்பு!!!
Agar Tree 

அகர் மரம்(Agar tree,Agarwood) என்பது புதிய வகை மரம் அல்ல,நமது நாட்டில் பல ஆண்டு காலமாக சித்த ,ஆயுர்வேத மருந்துகள் மற்றும் வாசனை பொருட்கள் தயாரிக்க உபயோகிக்க பட்டு வந்த மரம் தான்.ஆனால் தற்போது இந்த மரம் அழிந்து வரும் மர வகைகளில் வரிசையில் உள்ளது..இந்த மரத்தில் இருந்து தான் உலகிலேயே மிக அதிக மதிப்புடைய அகர் ஆயில் எடுக்க படுகிறது,ஒரு கிலோ ஆயில் இன் விலை அதிக பட்சம ஒரு லட்சம் வரைக்கும் விற்க படுகிறது.ஒரு கிலோ மர கட்டையின் விலை 30000 இல் இருந்து 60000 ஆயிரம் வரைக்கும் விற்க படுகிறது.

இதன் நன்மைகள்
-------------------------------
1 . மிகவும் வேகமாக வளரகுடியது.
2 . சந்தன மரம் போல அல்லாமல் 7 அவது வருடத்தில் இருந்தே அறுவடை செய்யலாம்.
3 . ஓரளவு வறட்சியை தாங்ககுடியது. ( ஆனால் மிக வறண்ட நிலங்களுக்கு அகர் உகந்தது அல்ல,வறண்ட நிலங்களுக்கு சந்தன மர சாகுபடி உகந்தது,சந்தன மர வளர்ப்பு கட்டுரையை பார்க்கவும்)

4 . உலக அளவில் அகர் மரங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

7 வருடம் நன்கு வளந்த ஒரு மரத்தில் முலம் 2 லட்சம் ருபாய் வரைக்கும் மிக எளிதாக பெறலாம்.3 மிட்டர் இடைவெளியில் ஏக்கருக்கு சுமார் 300 மர கன்றுகள் நடலாம்.பொதுவாக அகர் இந்தியாவில் அஸ்ஸாமில் அதிகமாக வளர்க்கபடுகிறது,தற்போது கர்நாடகாவில் அதிக விவாசாயிகள் அகர் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் சில தனியார் வேளாண்மை பண்ணைகள் , அகர் நாற்றுகள் மற்றும் தேவையான உரங்களை வழங்கி ,அவர்களே நல்ல விலைக்கு மரங்களை வெட்டி கொள்கிறார்கள்...

இது போன்ற தகவல்கள் நான் ஒரு விவசாய இதழிலும் சில விளம்பரங்களிலும் பார்த்தவை.உண்மையான தகவல் அறிய "அகர் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் " என்ற பதிப்பை படிக்கவும் .

மேலும் விவரங்கள் பெற தொடர்பு கொள்ளவும்: ஆனந்தபிரபு,ச 9886650235,anandhaprabhu@gmail.com