meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, ஜூன் 29, 2013

உங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்


இதற்கு தேவையானது இரண்டு சாப்ட்வேர்கள் (software)
1.VidCoder
2.My MP4Box (இந்த சாப்டுவேருக்கு .Net framework 3.5 தேவை )
.Net framework 3.5
Step1:  வீடியோ கோப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் (select the file)alt


 VidCoder  சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவவும்
பிறகு உங்களுடைய DVD யை உங்கள் கணினியில் செலுத்தவும் .
VidCoder சாப்ட்வேர் மூலம் VIDEO_TS என்ற போல்டரை (folder) உங்கள் DVD யில் இருந்து தேர்வு செய்யவும்.
Step2: DVD யில் இருந்து MP4 ஆக மாற்றுதல்
VidCoder ல்,  Ctrl + T அழுத்தவும் இல்லையேல்
File –> Enque Multiple Titles என்பதை menu வில் தேர்வு செய்யவும்
பிறகு DVD யில் அனைத்து titles களையும் தேர்வு செய்து queue சேர்க்கவும் .
உங்களுக்கு தானாகவே encoding ஐ தேர்வு செத்து இருக்கவும் அதுவே conversion செய்ய சிறந்ததாக இருக்கும்.
இல்லையேல் உங்களுக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாம்
பிறகு Encode என்ற button ஐ அழுத்தவும்.
உங்களின் கணினியின் திறனை பொருத்தும் வீடியோவின் நீளத்தைப் பொருத்தும்
நேரம் எடுத்துக் கொள்ளும்.
Step3: இணையத்திற்கு (ex: youtube) ஏற்றவாறு மாற்றுதல் :alt
MyMP4Box software மூலம் vidcoder software Mp4 ஆகா மாற்றிய கோப்புகளை தேர்வு செய்து நமக்கு தகுந்தாற்போல் எவ்வளவு நேரம் வேண்டுமோ அதை கட்டத்தினுள் கொடுத்தால். இந்த மென்பொருள் தானாகவே விடியோவை பகுதிகளாக பிரித்து கொடுத்துவிடும் .
இதன் பயன்பாடு என்னவெனில் நீங்கள் வீடியோவை youtube ல் ஏற்றும் பொழுது பதினைந்து (15 mins) நிமிடத்திற்கு மேல் இருக்கும் வீடியோவை எடுத்துக் கொள்ளாது . எனவே நீங்கள் இந்த மென்பொருள் மூலம் எளிதாக உங்கள் வேலையை முடித்துக் கொள்ள முடியும்

                  கணினியில் என்ன நடக்கிறது?

உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

What's Running is a product that gives you an inside look into your Windows 2000/XP/2003 system.

Explore processes, services, modules, IP-connections, drivers and much more through a simple to use application. Find out important information such as what modules are involved in a specific process.

Control your system by starting and stopping services and processes. Configure your startup programs easily.

சாதாரணமாக Task Manager காட்டாத பல செய்திகளை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் virus பின்னணியில் இயங்குகின்றதா? Registry மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை? IP தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல System தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

சுட்டி இதோ :

http://www.whatsrunning.net/whatsrunning/download.aspx

தொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி?

Start பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்தி்டவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for ? என்று கொடுக்கப்பட்டு்ள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.
1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.
2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.
3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.
4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.

இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.

Windows 7 ன் முதல் Service Pack வந்துவிட்டது

பெரும்பாலான கணினிகளில் ஆட்சி புரியும் Microsoft Windows தன்னுடைய அடுத்த மயில் கல்லாக 2009 ற்கு பிறகு தற்பொழுது Windows 7 ன் முதல் சர்வீஸ் பேக்கை வெளியிட்டுள்ளது. முதலில் சர்வீஸ் பேக் என்றால் என்னவென்று பார்ப்போம் .
alt

“Service Pack” = ஓரு மென்பொருள் உருவாக்கப்பட்ட பிறகு , அதில் வரும் பிழைகளை நீக்கவும் மற்றும் மென்பொருளை மேன்படுத்த வேண்டியவற்றை ஒன்று சேர்த்து தருவதுதான் சர்வீஸ் பேக். இதை கணினியில் (Computer) நிறுவும் பொழுது நம்முடைய கணினியில் முன்பே நிறுவிய மென்பொருளில் தானாகவே வேண்டிய மாற்றங்களை செய்து விடும். இதன் மூலம் மென்பொருளின் பாதுகாப்பையும் மேன்படுத்த முடியும்.

தற்பொழுது மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வீஸ் பேக்கில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றாலும் , அவர்கள் கூறியபடி Windows server 2008 R2 வின் செயல்திறனை மேன்படுத்தியுள்ளனர், இது Windows 7 server ஐ போன்றதாகும். இதில் வேறுபடக்கூடிய நினைவு திறனையும் (dynamic memory) மற்றும் Remote FX என்ற தொழில்நுட்பத்தையும் உட்புகுத்தியுள்ளார்கள். இதன் மூலம் பல கணினிகளை விர்ச்சுவல் (Virtual) முறையில் இணைக்க முடியும் மேலும் கிராபிக்ஸ் திறனையும் அதிகப் படுத்த முடியும்.

மேலும் இந்த சர்வீஸ் பேக்கில் சில பிழைகளை (bugs) சரி செய்தும் , பாதுகாப்பை மேன்படுத்தியும் இருக்கிறார்கள். மேலும் விவரங்கள் அறியவும் , இந்த சர்வீஸ் பேக்கை பெறவும் கீழுள்ள இணைய முகவரியை பயன்படுத்தவும்.

சுலபமாக தமிழ் மூலம் ஆங்கிலம் கற்கலாம்


                                                  ஆங்கிலம் கற்க்க எளிய வழி



நமது தாய்மொழியாம் தமிழ் உடன் தற்போது ஆங்கிலம் அறிந்திருப்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.ஆங்கிலம் தற்போது கற்று கொண்டு இருப்பவர்களுக்கு Word Hippo என்ற இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.wordhippo.com/



இந்த தளத்தில் உள்ள வசதிகள் சில
1.ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான பிற வார்த்தைகளை அறிய உதவுகிறது .

2.ஒரு ஆங்கில வார்த்தைக்கு எதிர்பத வார்த்தையை அறிய உதவுகிறது .

3.ஒரு ஆங்கில வார்த்தையை கொடுத்தால் அந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி இருக்கும் ஆங்கில வரியை தருகிறது.

4.முக்கியமாக ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒருமை(singular), பன்மை(plural),நிகழ்காலம்(present tense) மற்றும் எதிர்கால(past tense) ஆங்கில வார்த்தைகளை தருகிறது.

5.மேலும் ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு மாற்றம் செய்யவும் செய்கிறது.
http://www.wordhippo.com/

புதன், மே 01, 2013

எந்த பாடத்தில் சந்தேகம் இருந்தாலும் வீடீயோமூலம் பதில் கிடைக்கும்



எந்த பாடத்தில் சந்தேகம் இருந்தாலும் வீடீயோமூலம் பதில் கிடைக்கும்



http://sciencehack.com/




அறிவியல் வீடியோக்களை காண ஒரு தளம்


science
அறிவியல் விஷயங்களைக் தெரிந்து கொள்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகும். அறிவியலில் எந்த வகை பிரிவாக இருந்தாலும், அதனை நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதும் இயற்கையே. ஆனால், இந்த தகவல்கள் வெறும் வரிகளாக, விரிவுரைகளாக இருந்தால் நமக்கெல்லாம் சற்று சலிப்பாக இருக்கும். இதனை நீக்கி பல வகைகளில் அறிவியலின் அனைத்து பிரிவுகள் குறித்தும் கூறும் இணையதளம் ஒன்று என்ற http://sciencehack.com  முகவரியில் உள்ளது. 
இதன் சிறப்பம்சம் என்னவெனில், அனைத்து விஷயங்களும் வீடியோக் காட்சிகளாக விளக்கப்படுவது தான். இதன் பிரிவுகளை பட்டியலிட்டால் உங்களுக்கு நிச்சயம் ஆர்வம் ஏற்படும். 
அண்மைக்காலத்திய வீடியோக்கள், இயற்பியல், இரசாயனம், மனோதத்துவ வியல், உயிரியல், றோபோட்டிக்ஸ், கணிதம், கணிணி அறிவியல், இயற்கையின் சக்தி போன்றவை இதில் அடங்கும். 
உங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் தேடும் பிரிவைற் தேர்ந்தெடுத்து வீடியோக்களை ரசிக்கலாம். நீங்கள் தேடும் விஷயம் எந்த பிரிவில் இருக்கிறது? என்று தெரியவில்லையெனில், கவலைப்பட வேண்டாம்.
உதாரணமாக மேகம் குறித்து அறிய விரும்புகிறீர்களா?. அதற்கு வாய்ப்பு உள்ளது. 
இதில் ஒரு சர்ச் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் cloud என டைப் செய்து என்டர் தட்டினால், உடனே அது எந்த பிரிவில் எங்கு இருக்கிறது என்று காட்டப்படும். 
இதில் காணப்படும் வீடியோக்கள், சாதாரணமாக தயாரிக்கப் பட்டவை அல்ல. ஒவ்வொன்றும் ஒரு விஞ்ஞானியால் சரி பார்க்கப்பட்டு தகவல் துல்லியமாக இருக்கின்றனவா? எனச் சோதனை செய்யப்பட்டு

http://sciencehack.com/









சனி, ஏப்ரல் 13, 2013

உலகில் உள்ள அத்தனை பாடல்களும் அவைகளின் வகைக்கேற்ப பதிவுசெய்யபட்டு வைக்கபட்டுள்ளன ஒருநாட்டிற்குள்ளேயே பயனம் செய்யவும் அல்லது நாடுகளுக்கிடையே பயனம் செய்திடவும் அதற்கான குறைந்த செலவு எந்த விமானசேவை நிறுவனம்


உலகில் உள்ள அத்தனை பாடல்களும் அவைகளின் வகைக்கேற்ப பதிவுசெய்யபட்டு வைக்கபட்டுள்ளனஒருநாட்டிற்குள்ளேயே பயனம் செய்யவும் அல்லது நாடுகளுக்கிடையே பயனம் செய்திடவும் அதற்கான குறைந்த செலவு எந்த விமானசேவை நிறுவனம்



மிகவும் அதிக பயனுள்ளஇணையதளங்கள்


இணைய இணைப்பில் நாம் பயன்படுத்திகொள்வதற்காக இலட்சகணக்கான இணையதளங்கள் உள்ளன அவைகளில் ஒரு சில நம்முடைய நாகரிக வாழ்விற்கு மிகவும் அதிக பயனுள்ளவையாகவும் வேறுசில சாதாரணமாக நம்முடைய பொழுதினை போக்குவதற்காக மட்டுமென்றும் உள்ளன அவற்றுள் பின்வருபவை மிகச்சிறந்த நம்முடைய நாகரிக வாழ்விற்கு மிகவும் அதிக பயனுள்ளவையாக உள்ளன
 Grooveshark இதனுடைய இணையதளமுகவரிwww.grooveshark.com/ஆகும் இந்த தளத்தில் உலகில் உள்ள அத்தனை பாடல்களும் அவைகளின் வகைக்கேற்ப பதிவுசெய்யபட்டு வைக்கபட்டுள்ளன அவைகளுள் நாம் விரும்புவதை மட்டும் உடன் பதிவிறக்கம்செய்து அல்லது இதிலுள்ள Grooveshark Radio என்ற இணைய வானொலியின்மூலம் கேட்டுமகிழலாம் .நம்முடைய சொந்த பாடல்களையும் இதில் பதிவுசெய்து வைத்திடலாம்
1DayLater இதனுடைய இணையதளமுகவரி http://www.1daylater.com/ஆகும் அடடா குறிப்பிட்ட செலவிற்கான பட்டியல் வாங்குவதை மறந்து விட்டோமே என தவிப்பவர்கள் இந்த தளத்தின்மூலம் தேவைப்படும்போதெல்லாம் தேவையான பொருட்களின் பட்டியலை பெற்றுகொள்ளுமாறு வழிஏற்படு்ததபட்டுள்ளது
 Dropbox - இதனுடைய இணையதளமுகவரி http://www.1daylater.com/ஆகும் நம்முடைய ஆவணங்கள்.படங்கள் ,ஒலிஒளிபடங்களை ஆகியவற்றை சேகரித்து பாதுகாப்பாக வைத்திட நம்முடைய கணினியில் போதுமான காலி நினைவக இடம் இல்லையே என மறுக வேண்டாம் இந்த தளத்தில் கட்டணமெதுவுமில்லாமல் கோப்புகளை பாதுகாத்து வைத்திடவும் நம்முடைய நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அவைகளை பகிர்ந்து கொள்ளவும் நாம்விரும்பும் அளவிற்கு காலி நினைவகத்தை நமக்கு வழங்குகின்றனர் இதனை உலகமெலாம் உள்ள ஐம்பது மில்லியனிற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்ரனர்
 Showoff the Visualizer -இதனுடைய இணையதளமுகவரிhttp://www.showoff.com/apps/default.aspxஆகும் இதில் நம்முடைய வீட்டினை எப்படியெல்லாம் மாறுதல்செய்து அலங்கரிக்கலாம் என நமக்கு வழிகாட்டுகின்றது இதற்காக நம்முடைய வீட்டின் படத்தைமட்டும் இந்த தளத்தில் மேலேற்றினால் போதுமானதாகும்
 Dailylit இதனுடைய இணையதளமுகவரி http://www.dailylit.com/ஆகும் நாம் விரும்பி குறிப்பிட்டதொரு புத்தகத்தினை படிக்கவிருக்கின்றோம் ஆனால் நம்மால் அதற்காக நேரத்தை மட்டும் ஒதுக்கமுடியவில்லை என்றநிலையில் பரவாயில்லை எப்போது நமக்கு ஓய்வு கிடைக்கின்றதோ அப்போது மட்டும் நாம்விரும்பும் அளவைமட்டும் அப்புத்தக்ததை படிப்பதற்கு ஏற்ப பகுதிபகுதியாக பிரித்து இந்த தளம் நமக்கு வழங்குகின்றது
 Yaptaஇதனுடைய இணையதளமுகவரி http://www.yapta.com/ஆகும் இந்த தளமானது ஒருநாட்டிற்குள்ளேயே பயனம் செய்யவும் அல்லது நாடுகளுக்கிடையே பயனம் செய்திடவும் அதற்கான குறைந்த செலவு எந்த விமானசேவை நிறுவனம் வழங்குகின்றது என்ற தகவலையும் அதற்கான எச்சரிக்கை அறிவிப்பையும் நமக்கு அளிக்கின்றது அதனை தொடர்ந்து குறைந்த கட்டணசேவையில் பயனம் செய்ய பதிவுசெய்துகொள்ளவும் பயனம் செய்யஇயலவில்லையெனில் அந்த பயனத்தை இரத்துசெய்து நாம்செலுத்திய கட்டணத்தொகையை திரும்ப பெறவும் இந்த தளத்தில் வழிவகை செய்யபட்டுள்ளது
 Google Voice இதனுடைய இணையதளமுகவரிwww.google.com/voice/ஆகும் இணையத்தின் வாயிலாக Skype போன்று உலகில் ஒருவர் எங்கிருந்தாலும் அவரோடு மின்னஞ்சல் பெட்டிவழியாக உரைவழி மின்னஞ்சலிற்கு பதிலாக ஒலிவழியானமின்னஞ்சல் சேவையை இந்த தளம் வழங்குகின்றது இதன்மூலம் நம்முடைய தொலைபேசியில் நாம் அழைத்து பேசிடமுடியும்
Jolicloudஇதனுடைய இணையதளமுகவரி www.jolicloud.com/ஆகும் நமக்கு செந்தமாக தனியாள் கணினியோ மேஜைக்கணினியோ இல்லையே மற்றவர்களை போன்று நாம் எவ்வாறு அனைத்து வகை செயலையும் செய்வது என மருகி தவிப்பவர்களுக்கு இந்த தளம் உதவுகின்றது இதனை பயன்படுத்தி ஒரு மெய்நிகர் மேஜைக்கணினிபோன்று Gmail, Office Liveபோன்ற செயல்களையும் Dropbox, Skype, Google Voice, or VLC போன்ற தளங்களின் சேவையையும் நம்முடைய மேஜைகணினிமூலம் பெறுவதை போன்றே அந்த சேவைகள் அத்தனையும் பெறமுடியும் மேலும் இதிலுள்ளapp centerஎன்பதின்மூலம் மேலும் நமக்குத்தேவையான பயன்பாடுகளை செயல்படுத்திகொள்ளமுடியும்