meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

திங்கள், ஜூலை 02, 2012


                       இணையத்திலேயே      (டவுண்லோட் செய்யாமல்) 

                    விரும்பிய புத்தகங்களை படிக்கலாம் 


புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌.
அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் காட்டும் த‌ள‌ங்க‌ளையும் நீங்க‌ள் அறீந்திருக்க‌லாம்.
‘ரீட் எனி புக்’ த‌ள‌ம் இந்த‌ இர‌ண்டையுமே செய்கிற‌து.
இந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌ புத்த‌க‌த்தை தேர்வ செய்து அந்த‌ புத்த‌க‌த்தை அப்ப‌டியே இபுக்காக‌ ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.
இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ வேண்டாம்.ஏன் ப‌டிக்க‌ப்போகும் புத்த‌க‌த்தை கூட‌ ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டாம்.புத்த‌க‌த்தை தேர்வு செய்த‌ பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த‌ புத்த‌க‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.அத‌ற்கான‌ ரீட‌ர் அதே ப‌க்க‌த்தில் தோன்றுகிற‌து.என்வே பிர‌வுச‌ரை விட்டு வெளியே செல்ல‌வும் தேவையயில்லை.
ப‌க்க‌ங்க‌ளை திருப்புவ‌து போல‌ ஒவ்வொரு ப‌க்க‌மாக‌ கிளிக்செய்து ப‌டித்துக்கொண்டே இருக்க‌லாம்.தேவை என்றால் ரீடரை மட்ட்டும் பெரிதாகி படிக்கவும் வசதி உள்ளது. மாஜிகல் ரிய‌லிச‌ மேதை மார்குவேசின் ஒரு நூற்றாண்டு த‌னிமையில் துவ‌ங்கி எல்லா பிரிவுக‌ளிலும் புத்த‌க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.
புத்த‌க‌ங்க‌ள் எதிர்பார்க்க‌ கூடிய‌து போல‌ தனித்த‌னி த‌லைப்புக‌ளின் கீழ் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ட்டிய‌லை கூட‌ பார்க்க‌ வேண்டாம் நமக்கு தேவையான‌ புத்த‌க‌த‌தை குறிப்பிட்டு தேட‌வும் முடியும்.அதே போல‌ ம‌ற்ற‌வ்ர்க‌ள் ப‌டிக்கும் புத்த‌க‌ங்க‌ளையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் ப‌டிப்ப‌தை ப‌டித்து பார்க்க‌லாம்.
ஒவ்வொரு புத்த‌க‌ம் ப‌ற்றீய‌ சுருக்க‌மான அறிமுக‌த்தோடு அவ‌ற்றின் வ‌கை குறிப்பிட‌ப்ப‌ட்டு அத்தியாய‌ம் அத்தியாமாக‌ ரிட‌ரில் புத‌த்க‌ம் விரிவ‌து புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்கு உண‌மையிலேயே ப‌ர‌வ‌ச‌ம‌ன‌ அனுப‌வ‌ம்.ந‌ல்ல‌ புத்த‌க‌ம் என்றால் ஒரே மூச்சில் கூட‌ வாசித்து விட‌லாம்.புதிய‌ புத்த‌க‌ம் என்றால் எப்ப‌டி இருக்கிற‌து என் சில‌ ப‌க்க‌ங்க‌ளை புர‌ட்டி பார்க்க‌லாம்.
புத்த‌க‌ங்க‌ளை ட‌வுண்லோடு செய்வ‌தும் அவ‌ற்றின் கோப்பு அள‌வும் சோத‌னையாக‌ அமைய‌லாம் என்னும் போது ஒரே ப‌க்க‌த்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தக‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம் என்ப‌து உண்மையிலேயே பாராட்ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் தான்.
புத்தக‌ பிரிய‌ர்க‌ளை இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌ம் க‌வ‌ரும்.தங்க‌ள் அபிமான‌ த‌ள‌மாக‌ இத‌னை குறித்து கொள்ள‌லாம்.
அப்ப‌டியே இந்த‌ த‌ள‌த்தில் இன்னும் இட‌ம் பெறாத‌ புத்தக‌த்தை சேர்க்க‌ சொல்லி ப‌ரிந்துரைக்க‌லாம்.
இலவச இணைய வாசிப்பிற்கான இந்த தளத்தை கொண்டாடலாம்.ந‌ம்முடைய‌ செம்மொழி த‌மிழுக்கும் இப்ப‌டி ஒரு இணைய‌த‌ள‌த்தை உருவாக்க‌லாமே.

                            ஓரு கிளிக்கில் பல தேடல்கள்

இந்த லிங்கில் சென்று நீங்கள் ஓரே தேடலில் பல பல தேடல் முடிவுகளை  

                                                                         பெறலாம்.


                                                           முகவரி:  http://www.wordonthewire.com  

சனி, ஜூன் 30, 2012

தமிழ் இணையமா? தமிழில் எப்படி எழுதுவது என நினைக்கிறீர்களா 
                                                                              இதோ

                        உங்களுக்கு தமிழில்   10,000 

                               இணைய தளங்கள்



நீங்க எப்படி தமிழ்ல எழுதுறீங்க? என்று இன்று இணையத்தில் தமிழை அதிசயமாக பார்க்கும் மக்களுக்கும், தமிழ் இணைய தளம் எல்லாம் கஷ்டம் என்போருக்கும், தமிழின் இணைய பக்கத்தொகை அறியவிரும்புபவர்களுக்கும், புதிய தமிழ் சேவைகள் அறிமுகப்படுத்த முனைவோருக்கான வரவேற்பாகவும் சுமார் பதினோராயிரம் தமிழ்த் தளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகள் மூலமாக நடத்தப்படும் தளங்களிலிருந்து சைனாவின் தமிழ் இணைய தளம் வரை கொஞ்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. ப்ளாக்கரில் மட்டும் 9.6K தளங்கள் உள்ளன, அடுத்து வேர்ட்பிரஸ் 0.8k இதர சேவைகள் பயன்படுத்துபவை 0.2k உள்ளன. விடுபட்ட தளங்கள் தொடர்ந்து பதியப்படும் 

தமிழ்த் தளங்கள்

விடுபட்ட தளங்களை நீங்களும் இங்கே கொடுக்கலாம்
கடந்தாண்டு சேகரிக்கப்பட்ட 6500 தளங்கள் மூலம் தயாரிக்கப்பட்டபுள்ளிவிபரம் போல இவ்வாண்டும் வெளிவரவுள்ளது. நீங்கள் விரும்பினால் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள் விரும்பாவிட்டாலும் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள்
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

இம்முறை சுமார் 5100 பதிவர்களின் http://www.blogger.com/profile/12133782203492631856யில் உள்ள 66k தளங்களையும் எல்லாம் எடுத்து google app script மூலம் மொழிவாரியாகப் பிரித்து எடுக்கப்பட்டதால், நீங்கள் சொந்த தளம் வைத்து [2011 sept அன்று]அதில் சிலர் பாலோயார்ஸ் இருந்தாலே உங்கள் தளம் கட்டாயம் இந்தப் பட்டியலில் இருக்கும். பட்டியலில் இல்லாத தளங்கலாகயிருந்தால், அண்மையில் தொடங்கப்பட்ட தளங்கள் தவறியிருக்கலாம் சுட்டிக் காட்டிக் கொடுங்கள். விடுபட்ட தளங்களையும் தெரிவிக்கலாம்.


தளங்களாகயில்லாமல் இணைய தமிழில் எழுதப்படும் டிவிட்டர், ஃபேஸ்புக், இதர போது சமூக தளங்கள் அள்ளமுடியாமல் இருப்பதால் இப்பட்டியலில் கொள்ளவில்லை. 

குறிப்பு: முழுக்க முழுக்க ஆங்கிலம் கொண்ட தளங்கள் இந்தப் பட்டியலில் தவிர்க்கப்பட்டுகிறது.
பொதுவில் வைக்கமுடியாத தளங்களும் தவிர்க்கப்படுகிறது[கண்டுபிடித்த வரை] 
இதை மேம்படுத்தி தமிழ் இணையதள பேரேடு[Tamil Directory] தயாரிக்க விழையோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விருப்பமுள்ள வலைப் பதிவர்கள் இங்கு சென்றும் தகவலைப் பகிரலாம் 
http://bloggersbiodata.blogspot.com/
 தமிழ் மூலம் இணயத்தில் உலவ ( எந்த மொழி யர்க இருந்தாலும்)


மொழிபெயர்ப்புக் கருவிகளும்[Translation] ஒலிபெயர்ப்புக் கருவிகளும்[Transliteration] தான் ஒரு மொழிக்கு இணையத்தில் கிடைக்கும் இரண்டாவது பெரிய அங்கீகாரம். 1991 அக்டோபரில் unicode குறிமுறையில் சேர்க்கப்பட்டதுதான் தமிழுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் என்ற போதும் மொழி/ஒலிபெயர்ப்புக் கருவிகள் தான் பயனர்கள் மத்தியில் அதனை பரவலாக்கியது. ஒலிபெயர்ப்புக் கருவிகள் என்று வந்தபிறகுதான் மொழி வளங்கள் இணைய சுரங்கத்தில் சரமாரியாக அடுக்கப்படுகிறது. ஓலைச்சுவடிகளில் எழுதி தொலைந்து போன முதல் இலக்கண நூலான அகத்தியம் முதல் அச்சுக் காகிதங்களில் எழுதி செல்லரித்துப் போன சென்ற நூற்றாண்டு புத்தகம் வரை ஏற்பட்ட நிலை இனி பேஸ்புக்குகளிலும் ஃப்ளிக்கரிலும் எழுதித்தள்ளும் தமிழுக்கு இல்லை. 'நேசமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!' என தமிழும் கணினிமயமாக்கப் பட்டு வருகிறது.

பிற்சேர்க்கை:
'ஒலிபெயர்ப்பு' எனப்படுவது Ammaa என்று தட்டச்சிட்டால் அம்மா என்று வருவது
'மொழிபெயர்ப்பு' எனப்படுவது Mother என்று தட்டச்சிட்டால் அம்மா என்று வருவது


இங்கு குறிப்பிட்டது போல சில மொழி பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு மென்பொருட்கள் இருந்தாலும் இணையத்தில் எளிதாக அவ்வசதியைத் தரும் சில கருவிகளும் உள்ளன். மொழியை எழுதப் பயன்படும்ஒலிபெயர்ப்புக் கருவிகள் முன்னெல்லாம் தனியான ஒருப் பக்கத்தில் இருக்கும் அங்கு சென்று தட்டச்சிட்டு பிரதியெடுத்து வந்தோம் ஆனால் சில கட்ஜெட்களும் கூகுளின் உட்பொதிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டினாலும் வேண்டியப் பக்கத்தில் ஒலிபெயர்ப்பு வசதியை கொண்டுவரலாம்.அதற்கு மேல் bookmarklet எனப்படும் ஸ்கிரிப்ட்டை பிரவுசரில் பதிக்கும் முறையும் உள்ளது. ஒருதளத்தை எப்படி புக்மார்க் செய்கிறோமோ அதுபோல ஸ்க்ரிப்ட்டை சேமிக்கும் முறை. கீழ் கண்ட சுட்டிகளை drag செய்து உங்கள் பிரவுசரில் விடலாம் அல்லது Favoritesல் சேமித்தும் கொள்ளலாம்.ஒருமுறை சேர்த்துக் கொண்டால் போதும் இனி தானாக எந்த ஒரு தளத்திலும் தமிழில் அடிக்கலாம். நெருப்பு நரி,குரோம்,சஃபாரி உலவிகளில் இந்த சுட்டி இழுத்து உங்கள் டூல் பாரில் விட்டால் போதும், IE வில் favoritesல் சேமிக்க வேண்டும். {படங்களுடன் விளக்கமாக பார்க்க http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html

இது கூகுளின் மொழியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆங்கில எழுத்தின் ஒலிக் குறிப்புப்படி தமிழ்படுத்தும் 

[அ Transliteration]
உபயம்: கூகிள் 

இது மைக்ரோசாப்டின் மொழியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது 
தமிழ் (Tamil)
உபயம் மைக்ரோசாப்ட் 

இது தமிழ் தட்டச்சுப் பலகை முறையை அடிப்படையாகக் கொண்ட பலவித தமிழ் bookmarkletகள் [சாக்லேட்கள் போல இனிப்பாக இருக்குல!] 
உபயம்: tavultesoft
குறிப்பு இவைகள் இணைய இணைப்பில் மட்டும் செயல்படக் கூடியவைகள் 

சரி இனி உலவியில் தமிழாக்க வசதியை பொருத்தியாகிவிட்டது கண்ணில் படும் தளங்களில் எல்லாம் தமிழில் திட்டிக் கொள்ளலாம் மன்னிக்க, தமிழில் தட்டிச் செல்லலாம்:) 

அடுத்ததாக மொழி பெயர்ப்பு, இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவு தமிழ் மொழிபெயர்ப்பில் நிரலாக்கம் வராமல் இருந்தது. ஆனால் கூகிள் தற்போது அதையும் அறிமுகப் படுத்தியுள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பெயர்க்கையில் போதிய நிலைத்தன்மை உள்ளது ஆனால் தமிழிருந்து மற்ற மொழிக்கு பெயர்க்கையில் கருத்து விரிசல்கள் காணப்படுகிறது. இருந்தாலும் அவை மேம்படுத்தப்பட்டுக் கொண்டு வருவதால் எதிர்காலத்தில் நிச்சயம் அதும் சீர் செய்யப்படும். இதன் துணைக் கருவிகள் பல மேன்படுத்தப்பட்டுக் கொண்டுவருகிறது. 

தமிழ்ப் பதிவர்கள் தங்கள் தளத்தை மாற்று மொழியில் மொழி பெயர்க்கும் வசதியை இணைக்க விரும்பினால் கீழ்க்கண்ட நிரல்களை தளத்தில் இணைக்கவும் 

--------------------------------

<div id="google_translate_element"></div><script>
function googleTranslateElementInit() {
new google.translate.TranslateElement({
pageLanguage: 'ta'
}, 'google_translate_element');
}
</script><script src="//translate.google.com/translate_a/element.js?cb=googleTranslateElementInit"></script>

--------------------------------

பொருத்தியப் பின் இப்படி இயங்கும்.அதன்மூலம் பல அந்நிய மொழியினர் எளிதில் பதிவை படிக்கமுடியும்
Powered by Translate


நீங்கள் படிக்கும் வேற்று மொழி தளங்களை தமிழ்ப்படுத்தி படிக்க விரும்பினால் அதற்கும் ஒரு bookmarklet உள்ளது. இதனை மேற்கூறிய வழிமுறையில் உங்கள் பிரவுசரில் இணைத்துக் கொள்ளவும்.
[அ Translation]
அல்லது கூகிள் வழங்கி உள்ள டூல்பாரை நிறுவியும் மொழி பெயர்க்கலாம்.
http://www.google.com/toolbar/ff/index.html#brand=GFRL

இங்கு டாக்குமெண்டுகளை கூட மொழி பெயர்க்கலாம் 
http://translate.google.com/?hl=en
தமிழிலிருந்து மாற்று மொழிகளுக்கு பெயர்க்கையில் ஆங்கிலம் தான் இடைமுகமாக பயன்பட்டுள்ளது. எனவே எளிய தமிழ் வாக்கியங்கள் சிறப்பாக மொழி பெயர்க்கலாம்.

               கோலம் வரைய தமிழில் செயலி



http://tamilpoint.blogspot.com/p/kolam.html

பாரதத்தின் எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். முக்கியமாக தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற கலாச்சாரமாகும். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் விருந்தாளியாகக் காணலாம். வாசல் கோலங்கள் இடுவதென்பது ஒரு கலையே அதுவும் பண்டிகைக் காலங்களில் நம்மூர் பெண்கள் பட்டையைக் கிளப்புவார்கள். ஓவியம் என்பது தனியொரு கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது. அம்மாதிரி கலை மரபு வழியே வந்ததாலோ என்னவோ திராவிடக் கட்டிடக் கலையில் தனி முத்திரை கொண்டுள்ளோம். 
http://tamilpoint.blogspot.com/p/kolam.html


இத்தகைய கோலங்கள் இணைய வெளிகளில் பரவலாக படங்கள் வடிவில் பகிரப்படுகிறது. கோலம் சம்மந்தமான மென்பொருட்கள் எதிர்காலத்தில் அதிகம் வரலாம். தற்போதைக்கு கோலம் வடிவமைக்கும் மென்பொருட்கள் அதிகமில்லை ஆனால் இதுவரை இணையத்திலிருந்து செயல்படும் ஒரே ஒரு செயலி இங்கேவுள்ளது. அந்தவரிசையில் கோலசுரபி என்ற ஒரு புதிய செயலி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்ப்புள்ளியின் மூன்றாமாண்டு பிறந்த நாளன்று அறிமுகமாகும் இச்செயலியின் மூலம் தான்தோன்றித்தனமாக பல கோலங்கள் உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளமுடியும். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவதறிது அதனால் ரசனையுள்ள கோலங்களை Screenshot மூலம் படங்களாகவும் சேமித்துக் கொள்ளலாம்.

கோலம் அறியாத "பேதை"களுக்கும் , கோலம் பழகும் "பெதும்பை"களுக்கும், கோலம் தேடும் "மங்கை"களுக்கும், கோலம் வரையும் "மடந்தை"களுக்கும், கோலமிட்டுக் கலக்கும் "அரிவை"களுக்கும் இச்செயலி மேலும் உதவும்.


 

வெள்ளி, ஜூன் 29, 2012

கம்யூட்டரருக்கு புதியவரா நீங்கள் 



1.கணினியில் மிகுதியாக காலி இடம் எவ்வளவு இருக்கிறது என எவ்வாறு தெரிந்து கொள்வது?
திரையில் தெரியும்  My computer எனும் உருவை (Icon) தெரிவு செய்து சொடுக்குக. உடன் அடைவுகளின் (drive) பட்டியல் திரையில் தோன்றும். அவற்றில் “சி:”’ என்ற அடைவை (drive) இடம் சுட்டியால் பிடித்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.பின்னர் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற கட்டளையைய தெரிவுசெய்து  சொடுக்குக. உடன் தோன்றும் Properties என்ற உரையாடல் பெட்டியில் கணினியின் நினைவகத்தில் எவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுதி எவ்வளவு இடம் காலியாக உள்ளது என காண்பிக்கும். மேலும் காலி இடம் தேவையெனில் Start=> All programme => Accessories => System tools => Disk cleanup=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் காலி இடம் அதிகபடுத்த தேவையான அடைவை(drive)  தெரிவுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன்  தேவையற்ற கோப்புகளை நீக்கம் செய்து ஏராளமான நிறைய காலியான நினைவக இடத்தை பெறுமுடியும்,.
2.சாளர காட்சியின் அளவு கணினி திரையின் அளவை விட பெரியதாக இருக்கும்போது முழுவதையும் சரியாக பார்ப்பதற்கு என்ன செய்வது.?         
விசைப்பலகையில் உள்ள விண்டோ என்ற விசையை பிடித்து கொண்டு D என்ற விசையை சேர்ந்தார் போன்று அழுத்துக. உடன் திறந்திருக்கும் அனைத்து சாளரங்களும் திரையின் அளவிற்கு ஏற்ப சுருக்கப்பட்டுவிடும். அல்லது சாளரத்திரையில் இடம்சுட்டியை  வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற கட்டளையைய தெரிவுசெய்து  சொடுக்குக. பிறகு தோன்றும் Properties என்ற உரையாடல் பெட்டியில் Setting  என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. பிறகு திரையின் அளவை தேவையானவாறு சரி செய்து கீழிருக்கும் Apply என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் Ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
3.Calculator போன்ற பயன்பாடுகள் திரையில் காணாமல் போய்விட்டன எவ்வாறு மீட்பது?
Start => setting => control panel=>  என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் control panel -ல் window components என்னும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் வாய்ப்புகளில் add/remove program என்ற வாய்ப்பை தெரிவு செய்து கொள்க. உடன் திரையில் பயன்பாட்டு மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் அவற்றில் Calculator போன்று தேவையானவற்றை தெரிவு செய்து Ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
4.பயன்பாட்டு மென்பொருளை நிறுவியிருந்தும் திரையில் அல்லது Start பட்டியலில் காணவில்லை என்ன செய்வது?
கணினித்திரையில்உள்ள My computer உருவை(icon) தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் திரையில்  ’C’ என்ற அடைவை (Drive)  தெரிவு செய்து இருமுறை சொடுக்குக. பின்னர் தோன்றிடும் program setting என்ற உள் மடிப்பகத்தில்(Folder) நாம் நிறுவிய பயன்பாட்டினுடைய  .exe  என்ற கோப்பு இருக்கிறதா என சரி பார்த்து கொண்டு அதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் தோன்றும் பட்டியில் create shortcut  என்ற கட்டளையை  தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் உருவை(Icon) பிடித்து இழுத்து வந்து Start என்ற பட்டியலில்/திரையில் விடவும்
5.ஒரு பயன்பாட்டு உருவை (icon)தெரிவுசெய்து சுட்டியினுடைய வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்கும்போதும் can’t open the file என்ற பிழைச்செய்தியை திரையில் காட்டுகிறதேயொழிய குறுப்பிட்ட பயன்பாடு திறக்க மறுக்கின்றது என்ன செய்வது?.
இவ்வாறான ஏதேனுமொருபயன்பாட்டினுடைய உருவை(Icon தெரிவு செய்துகொண்டு shift என்ற விசையை  அழுத்தி பிடத்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக,உடன் விரியும் சூழ்நிலை பட்டியில். open window from the menu that appears என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் உரையாடல் பெட்டியின் பட்டியலில் நாம் விரும்பும் பயன்பாட்டின் நிரல்தொடர் உள்ளதா என சரி பார்த்து கொள்க. இந்த கோப்பு எந்த பயன்பாட்டின் மீது திறக்க வேண்டும் என்று அதிலிருந்து தெரிவு செய்து கொள்க.
6.மின்னஞ்சலுடன் இணைப்பாக வரும் கோப்புகளுடன் நச்சு நிரலும் வைரஸம் இருந்தால் எவ்வாறு அவற்றை தவிர்ப்பது?
திரையின் மேலே கட்டளை பட்டையில் உள்ள tools என்ற கட்டளயை  தெரிவு செய்து சொடுக்கியவுடன் விரியும் tools என்ற கட்டளை பட்டியலில் option என்ற கட்டளையை  தெரிவு செய்து சொடுக்குக, உடன் தோன்றும் option என்ற உரையாடல் பெட்டியில் Security என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் திரையில் . Donot allow attachments to be saved or opened that could potentially be a virus என்றவாறான வாய்ப்பு தெரிவு செய்யபட்டிருக்கின்றதாவென சரிபார்க்கவும். பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
7.கணினியை ஆரம்பித்தவுடன் இணைய தளத்துடன் தொடர்பு கொள்ளவா என கேட்கும் உரையாடல் பெட்டி அடிக்கடி தோன்றி  தொல்லை கொடுக்கிறதே என்ன செய்வது?
. இது ஒரு வகையான நச்சு (virus) நிரல் தொடரால் ஏற்படுகிறது. உடன் Spy bot என்ற பயன்பாட்டு நிரல் தொடரை இயக்கி இந்த நச்சு (virus) நிரலை அறவே நீக்கி ஒழித்து விடுக.
8.இணையதளத்தை தொடர்பு கொள்ளும்போது No domain server was unavailable to valid password. You may not be able to enter to some network resources என்ற செய்தியுடன் உரையாடல் பெட்டி ஒன்று தோன்றுகிறதே தவிர இணைய இணைப்பு கிடைக்கவில்லையே என்ன செய்வது?
இதனை சரிசெய்ய. Start => setting => control panel =>  என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் control panel -ல் உள்ள network  என்பதை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர் அதில் நிறுவப்பட்ட உறுப்புகளில் உள்ள client on Microsoft network என்பதை தெரிவு செய்க. அதன்பின்னர் பண்பியல்பு (properties)  என்பதை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு (properties)என்ற உரையாடல் பெட்டியில் Log on to window NT  என்றவாறு தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிட்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
9.சில சமயங்களில் கணினியுடன் இணைந்த தொலைபேசி மணி ஒலித்த உடன் கணினி இயக்கம் தானாகவே நின்றுவிடுகிறதே. எவ்வாறு இதனை தடுப்பது?
இது BIOS -ல் ஒரு சில நிகழ்வுகள் ஏற்படுவதால் அதன் மறுமொழியாக (wake) செயல்படும்படி அமைக்கப்பட்ட செயலாகும். அதனால் BIOS என்ற அமைப்பிற்குள் சென்று power என்ற வாய்ப்பை தெரிவு செய்க. பின்னர் தோன்றிடும் திரையில் wake on ring என்ற வாய்ப்பு முடக்கப்பட்டுள்ளதா (disable) என சரிபார்த்து அதனை முடக்கம்( disable) செய்க. அன்பின்னர் இந்த அமைவை Saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் சேமித்து கொணடு exit என்ற கட்டளை மூலம் வெளியில் வந்து கணினியின் இயக்கத்தை  மீண்டும் ஆரம்பிக்கவும்.
10.Over clocking என்றால் என்ன?
கணினி வேகமாக இயங்குமாறு இயக்க அமைவை மாற்றி அமைப்பதையேOver clocking என்பர். இந்த வசதியானது கணினி தன்னுடைய தன்மையைவிட வேகமாக இயங்க வைக்கிறது. இதனை BIOS அமைப்பில் குறிப்பிட்ட உள்ளுறுப்புகளை வேகமாக செயல்படும்படி அமைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு வேகப்படுத்தும்போது குறிப்பிட்ட உறுப்புகளில் அதிக வெப்பம் உருவாகும் அதனை குறைப்பதற்கேற்றவாறு கணினியில் உள்ள மின்விசிறிகள் வேகமாக இயங்காது மேலும் குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போது மட்டுமே அவ்வுறுப்புகளின் வாழ்நாள் இருக்கும். அதனால்  கணினியின் உள்ளுறுப்புகளை அதிகமாக over clocking செய்ய வேண்டாம். அவ்வாறே செய்வதாயின்www.hyperformance.pl.com/overclocking-tag.htm என்ற இணைய தளத்திற்கு சென்று ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுக.

UEFI என்றால் என்ன

 படம்-1
 ஒரு கணினியின் தொடக்க இயக்கத்தை வன்தட்டின் மூலம் அல்லது குறுவட்டின் மூலம் ஆரம்பிப்பது பொதுவான நடைமுறையாகும் இதனை பயாஸ்  மூலமாக அல்லத ஃப்ளாஸ் மூலமாக செயற்படுத்தி வருகின்றோம்  இந்த செயல்  மலையேறபோகின்றது . இனி  UEFI என்ற அடிப்படையில் மட்டுமே மிகஎளிதாக பயாஸில்லாத கணினியின் தொடக்க இயக்கம் அமையபோகின்றது UEFI என்றால் United Extensible Firmware Interfaceஎன்ற சொற்களின் சுருக்கு பெயராகும்  தற்போதைய ஜிபி அளவிற்கு பதிலாக டெராபைட்டை ட்டிபி(TB) கையாளும் திறனுடையதாக இந்த யூஇஎஃப்ஐ இருக்கும்  மேலும் இது சிப்பியூ(CPU) எனும் மத்திய செயலக கட்டமைப்பை சாராமல் இயங்கும்  திறன் கொண்டது மேலும் கணினியின் தொடக்க (படம்-2) இயக்கத்தை எளிதாக்குகின்றது
படம்-2
  ஆனால் லினக்ஸ் போன்ற அனுமதி தேவையற்ற இயக்கமுறைமைகள் இந்த யூஇஎஃப்ஐ யில் இயங்கமுடியாது என்பதே கசப்பான உண்மையாகும்  ஆயினும் இதனையும் வெற்றிகொள்வதற்காக முயற்சி மேற்கொள்ளபட்டுவருகின்றது தற்போது  அனுமதிபெற்ற திறவுகோள்மூலமாகவே இந்த யூஇஎஃப்ஐ  அனுகமுடியும் என்ற நிலையுள்ளது ஏனெனில் மால்வேர் எனும் நச்சுநிரல்கள் கணினிக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக இந்த  அனுமதிபெற்ற திறவுகோள்மூலமாகவே இதனை அனுக முடியும் என அமைத்துள்ளனர் ஆனால் லினக்ஸ் இயக்கமுறைமை யானது நச்சு நிரலை எவ்வாறு தவிர்க்கமுடியும்  விண்டோ 8 இயக்கமுறைமையானது  இரட்டை தாழ்ப்பாள் முறையில் கணியின் தொடக்க இயக்கம் அமையுமாறு செய்யபட்ட வழியை பின்பற்றி ஒன்றில் விண்டோவும் மற்றொன்றில் GRUB loaderமூலம் லினக்ஸும் இயங்குமாறு செய்யமுடியும்
இந்த யூஇஎஃப்ஐ  கருத்தமைவானது விண்டோ 8 இயக்கமுறைமைக்கு மட்டுமே உரியது என்ற நிலையில் மிக அதிகபாதுகாப்புடன்  கணினியின் தொடக்க இயக்கத்தை அமைத்திட்டால் விண்டோ எக்ஸ்பி விண்டோ விஸ்டா விண்டோ 7 ஆகிய இதற்கு முந்தைய இயக்கமுறைமைகளும் மால்வேர் வகையில் அமைந்து விடும் அதுமட்டுமல்லாது இந்த இயக்கமுறைமைகளில் இயங்குகின்ற பயன்பாடுகளும் இதே மால் வகைகளில் வகைபடுத்தபடும் அதனை தொடர்ந்து இவையனைத்தையுமே விண்டோ 8 இன் இயக்கமுறைமையில் இயங்கும் தினுடையதாகவும் மேம்படுத்தபட்டு  டிஜிட்டல் கையெழுத்து அனுமதிபெற்றதாகவும் இருக்கவேண்டும் என்ற நிலை ஏற்படும்  இதனால் காலவிரையமும் பணவிரையமும் அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது  மேலும் பழைய நிலைக்கு மீளமைவுசெய்தல்(Restore) இழந்த கோப்பகளை மீட்டெடுத்தல் ( Recover) ஆகியவை இந்த புதிய நிலைமையில் செயல்படாது போய்விடும்
ஆண்ட்ராய்டு போன்ற இயக்கமுறைமையின்  மூலம் கையடக்க கருவிகளுக்கான வென்பொருளை தன்னுடைய கட்டுபாட்டிற்குள் கொணடுவர முயற்சி  செய்யும்  மைக்ரோசாப்டின் இந்த செயல் வெற்றி பெறாது என்பதே நடப்பு நிலைமையாகும்
ஒரு பொருள் சேவை வழங்குவதற்கு பல போட்டியாளர்கள் இருந்தால்தான்  மக்களுக்கு குறைந்த விலையும் தரமான பொருள் அல்லது சேவையும் கிடைக்கும்  சந்தையில் போட்டியற்ற  ஒற்றையான பொருள் அல்லது சேவையெனில் ஏகபோக  கட்டுபாட்டிற்கு மாறிவிட்டால்  மக்களுக்கு குறைந்த விலையும் தரமான பொருள் அல்லது சேவையும் கிடைக்காத நிலை ஏற்படும்
அதனால்  இந்த யூஇஎஃப்ஐ  இன் மீது உருவாக்கபடும் மைக்ரோசாப்டின் கட்டுபாடானது கணினிமென்பொருள் துறையில் தரமற்ற சேவையும் விலைஅதிகமானதாகவும்  ஆன நிலைக்கு தள்ளபட்டுவிடும் என எச்சரிக்கபடுகின்றது

                புதிய நீங்கள் விரும்பும் மொழியை 

                             கற்றுக்கொள்ள எளிய வழி


                                                      http://polyspeaks.com/


புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது. ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து. அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.
புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய சிறந்த வழியை தான் பாலிஸ்பீக்ஸ் தளம் உண்டாக்கி தந்துள்ளது.
 http://polyspeaks.com/
இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்பது போல பல்வேறு மொழி பேசுபவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிற‌து. பயனாளிகள் தாங்கள் கற்க விரும்பும் மொழி பேசுபவரோடு இணையத்தில் உரையாட துவங்கி விடலாம்.
 
உதாரனத்திற்கு ஜப்பானிய மொழி கற்று கொள்பவர்கள் இந்த தளம் மூலம் ஜப்பானியரோடு அரட்டை அடித்து அந்த மொழியில் உள்ள பேச்சு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள‌‌ முற்படலாம்.
இதே போலவே வேற்று மொழி பேசுபவர்களோடு வீடியோ வழியே உரையாடும் வசதியை வெர்ப்லிங் தளம் தருகிறது.
 
ஆனால் பாலிஸ்பீக்ஸ் வீடியோ வசதி இல்லாமல் சாட் செய்வது போலவே இணைய உரையாடலில் ஈடுபட வைக்கிறது.புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளும் நிலையில் பேசுவதை விட எழுத்து மூலம் உரையாடுவதே உகந்த‌தாக இருக்கும் என்று நினைத்து இந்த அரட்டை வசதியை தருவதாக பாலிஸ்பீகஸ் தளம் தெரிவிக்கிற‌து.
 
பேஸ்புக் கணக்கை கொண்டே இதில் உறுப்பினராகி வேற்று மொழி பேசுபவருடன் அரட்டையில் ஈடுபட்டு மொழியை வளர்த்து கொள்ளலாம்,நட்பையும் வளர்த்து கொள்ளலாம். ஒரு காலத்தில் சாட் என்று சொல்லப்படும் அரட்டை தளங்கள் இணையத்தில் கொடி கட்டி பறந்தன.அதன் பிறகு அரட்டை தளங்களின் செல்வாக்கு தேய்ந்து போய்விட்டன.
 
அதன் பிறகு சாட்ரவுலட் தளம் மீண்டும் அர‌ட்டை தளங்களுக்கு புதிய மவுசை தேடித்தந்தது. இந்த நிலையில் அரட்டையை மொழி கற்பது உள்ளிட்ட பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பாலிஸ்பீக்ஸ் போன்ற தளங்கள் ஏற்படுத்தி தருகின்ற‌ன.