கம்யூட்டரருக்கு புதியவரா நீங்கள்
1.கணினியில் மிகுதியாக காலி இடம் எவ்வளவு இருக்கிறது என எவ்வாறு தெரிந்து கொள்வது?
திரையில் தெரியும் My computer எனும் உருவை (Icon) தெரிவு செய்து சொடுக்குக. உடன் அடைவுகளின் (drive) பட்டியல் திரையில் தோன்றும். அவற்றில் “சி:”’ என்ற அடைவை (drive) இடம் சுட்டியால் பிடித்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.பின்னர் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற கட்டளையைய தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் Properties என்ற உரையாடல் பெட்டியில் கணினியின் நினைவகத்தில் எவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுதி எவ்வளவு இடம் காலியாக உள்ளது என காண்பிக்கும். மேலும் காலி இடம் தேவையெனில் Start=> All programme => Accessories => System tools => Disk cleanup=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் காலி இடம் அதிகபடுத்த தேவையான அடைவை(drive) தெரிவுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் தேவையற்ற கோப்புகளை நீக்கம் செய்து ஏராளமான நிறைய காலியான நினைவக இடத்தை பெறுமுடியும்,.
2.சாளர காட்சியின் அளவு கணினி திரையின் அளவை விட பெரியதாக இருக்கும்போது முழுவதையும் சரியாக பார்ப்பதற்கு என்ன செய்வது.?
விசைப்பலகையில் உள்ள விண்டோ என்ற விசையை பிடித்து கொண்டு D என்ற விசையை சேர்ந்தார் போன்று அழுத்துக. உடன் திறந்திருக்கும் அனைத்து சாளரங்களும் திரையின் அளவிற்கு ஏற்ப சுருக்கப்பட்டுவிடும். அல்லது சாளரத்திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற கட்டளையைய தெரிவுசெய்து சொடுக்குக. பிறகு தோன்றும் Properties என்ற உரையாடல் பெட்டியில் Setting என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. பிறகு திரையின் அளவை தேவையானவாறு சரி செய்து கீழிருக்கும் Apply என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
3.Calculator போன்ற பயன்பாடுகள் திரையில் காணாமல் போய்விட்டன எவ்வாறு மீட்பது?
Start => setting => control panel=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் control panel -ல் window components என்னும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் வாய்ப்புகளில் add/remove program என்ற வாய்ப்பை தெரிவு செய்து கொள்க. உடன் திரையில் பயன்பாட்டு மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் அவற்றில் Calculator போன்று தேவையானவற்றை தெரிவு செய்து Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
4.பயன்பாட்டு மென்பொருளை நிறுவியிருந்தும் திரையில் அல்லது Start பட்டியலில் காணவில்லை என்ன செய்வது?
கணினித்திரையில்உள்ள My computer உருவை(icon) தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் திரையில் ’C’ என்ற அடைவை (Drive) தெரிவு செய்து இருமுறை சொடுக்குக. பின்னர் தோன்றிடும் program setting என்ற உள் மடிப்பகத்தில்(Folder) நாம் நிறுவிய பயன்பாட்டினுடைய .exe என்ற கோப்பு இருக்கிறதா என சரி பார்த்து கொண்டு அதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் தோன்றும் பட்டியில் create shortcut என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் உருவை(Icon) பிடித்து இழுத்து வந்து Start என்ற பட்டியலில்/திரையில் விடவும்
5.ஒரு பயன்பாட்டு உருவை (icon)தெரிவுசெய்து சுட்டியினுடைய வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்கும்போதும் can’t open the file என்ற பிழைச்செய்தியை திரையில் காட்டுகிறதேயொழிய குறுப்பிட்ட பயன்பாடு திறக்க மறுக்கின்றது என்ன செய்வது?.
இவ்வாறான ஏதேனுமொருபயன்பாட்டினுடைய உருவை(Icon தெரிவு செய்துகொண்டு shift என்ற விசையை அழுத்தி பிடத்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக,உடன் விரியும் சூழ்நிலை பட்டியில். open window from the menu that appears என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் உரையாடல் பெட்டியின் பட்டியலில் நாம் விரும்பும் பயன்பாட்டின் நிரல்தொடர் உள்ளதா என சரி பார்த்து கொள்க. இந்த கோப்பு எந்த பயன்பாட்டின் மீது திறக்க வேண்டும் என்று அதிலிருந்து தெரிவு செய்து கொள்க.
6.மின்னஞ்சலுடன் இணைப்பாக வரும் கோப்புகளுடன் நச்சு நிரலும் வைரஸம் இருந்தால் எவ்வாறு அவற்றை தவிர்ப்பது?
திரையின் மேலே கட்டளை பட்டையில் உள்ள tools என்ற கட்டளயை தெரிவு செய்து சொடுக்கியவுடன் விரியும் tools என்ற கட்டளை பட்டியலில் option என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக, உடன் தோன்றும் option என்ற உரையாடல் பெட்டியில் Security என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் திரையில் . Donot allow attachments to be saved or opened that could potentially be a virus என்றவாறான வாய்ப்பு தெரிவு செய்யபட்டிருக்கின்றதாவென சரிபார்க்கவும். பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
7.கணினியை ஆரம்பித்தவுடன் இணைய தளத்துடன் தொடர்பு கொள்ளவா என கேட்கும் உரையாடல் பெட்டி அடிக்கடி தோன்றி தொல்லை கொடுக்கிறதே என்ன செய்வது?
. இது ஒரு வகையான நச்சு (virus) நிரல் தொடரால் ஏற்படுகிறது. உடன் Spy bot என்ற பயன்பாட்டு நிரல் தொடரை இயக்கி இந்த நச்சு (virus) நிரலை அறவே நீக்கி ஒழித்து விடுக.
8.இணையதளத்தை தொடர்பு கொள்ளும்போது No domain server was unavailable to valid password. You may not be able to enter to some network resources என்ற செய்தியுடன் உரையாடல் பெட்டி ஒன்று தோன்றுகிறதே தவிர இணைய இணைப்பு கிடைக்கவில்லையே என்ன செய்வது?
இதனை சரிசெய்ய. Start => setting => control panel => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றும் control panel -ல் உள்ள network என்பதை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர் அதில் நிறுவப்பட்ட உறுப்புகளில் உள்ள client on Microsoft network என்பதை தெரிவு செய்க. அதன்பின்னர் பண்பியல்பு (properties) என்பதை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு (properties)என்ற உரையாடல் பெட்டியில் Log on to window NT என்றவாறு தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிட்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
9.சில சமயங்களில் கணினியுடன் இணைந்த தொலைபேசி மணி ஒலித்த உடன் கணினி இயக்கம் தானாகவே நின்றுவிடுகிறதே. எவ்வாறு இதனை தடுப்பது?
இது BIOS -ல் ஒரு சில நிகழ்வுகள் ஏற்படுவதால் அதன் மறுமொழியாக (wake) செயல்படும்படி அமைக்கப்பட்ட செயலாகும். அதனால் BIOS என்ற அமைப்பிற்குள் சென்று power என்ற வாய்ப்பை தெரிவு செய்க. பின்னர் தோன்றிடும் திரையில் wake on ring என்ற வாய்ப்பு முடக்கப்பட்டுள்ளதா (disable) என சரிபார்த்து அதனை முடக்கம்( disable) செய்க. அன்பின்னர் இந்த அமைவை Saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் சேமித்து கொணடு exit என்ற கட்டளை மூலம் வெளியில் வந்து கணினியின் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்கவும்.
10.Over clocking என்றால் என்ன?
கணினி வேகமாக இயங்குமாறு இயக்க அமைவை மாற்றி அமைப்பதையேOver clocking என்பர். இந்த வசதியானது கணினி தன்னுடைய தன்மையைவிட வேகமாக இயங்க வைக்கிறது. இதனை BIOS அமைப்பில் குறிப்பிட்ட உள்ளுறுப்புகளை வேகமாக செயல்படும்படி அமைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு வேகப்படுத்தும்போது குறிப்பிட்ட உறுப்புகளில் அதிக வெப்பம் உருவாகும் அதனை குறைப்பதற்கேற்றவாறு கணினியில் உள்ள மின்விசிறிகள் வேகமாக இயங்காது மேலும் குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போது மட்டுமே அவ்வுறுப்புகளின் வாழ்நாள் இருக்கும். அதனால் கணினியின் உள்ளுறுப்புகளை அதிகமாக over clocking செய்ய வேண்டாம். அவ்வாறே செய்வதாயின்www.hyperformance.pl.com/overclocking-tag.htm என்ற இணைய தளத்திற்கு சென்று ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுக.
UEFI என்றால் என்ன
படம்-1
ஒரு கணினியின் தொடக்க இயக்கத்தை வன்தட்டின் மூலம் அல்லது குறுவட்டின் மூலம் ஆரம்பிப்பது பொதுவான நடைமுறையாகும் இதனை பயாஸ் மூலமாக அல்லத ஃப்ளாஸ் மூலமாக செயற்படுத்தி வருகின்றோம் இந்த செயல் மலையேறபோகின்றது . இனி UEFI என்ற அடிப்படையில் மட்டுமே மிகஎளிதாக பயாஸில்லாத கணினியின் தொடக்க இயக்கம் அமையபோகின்றது UEFI என்றால் United Extensible Firmware Interfaceஎன்ற சொற்களின் சுருக்கு பெயராகும் தற்போதைய ஜிபி அளவிற்கு பதிலாக டெராபைட்டை ட்டிபி(TB) கையாளும் திறனுடையதாக இந்த யூஇஎஃப்ஐ இருக்கும் மேலும் இது சிப்பியூ(CPU) எனும் மத்திய செயலக கட்டமைப்பை சாராமல் இயங்கும் திறன் கொண்டது மேலும் கணினியின் தொடக்க (படம்-2) இயக்கத்தை எளிதாக்குகின்றது
படம்-2
ஆனால் லினக்ஸ் போன்ற அனுமதி தேவையற்ற இயக்கமுறைமைகள் இந்த யூஇஎஃப்ஐ யில் இயங்கமுடியாது என்பதே கசப்பான உண்மையாகும் ஆயினும் இதனையும் வெற்றிகொள்வதற்காக முயற்சி மேற்கொள்ளபட்டுவருகின்றது தற்போது அனுமதிபெற்ற திறவுகோள்மூலமாகவே இந்த யூஇஎஃப்ஐ அனுகமுடியும் என்ற நிலையுள்ளது ஏனெனில் மால்வேர் எனும் நச்சுநிரல்கள் கணினிக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக இந்த அனுமதிபெற்ற திறவுகோள்மூலமாகவே இதனை அனுக முடியும் என அமைத்துள்ளனர் ஆனால் லினக்ஸ் இயக்கமுறைமை யானது நச்சு நிரலை எவ்வாறு தவிர்க்கமுடியும் விண்டோ 8 இயக்கமுறைமையானது இரட்டை தாழ்ப்பாள் முறையில் கணியின் தொடக்க இயக்கம் அமையுமாறு செய்யபட்ட வழியை பின்பற்றி ஒன்றில் விண்டோவும் மற்றொன்றில் GRUB loaderமூலம் லினக்ஸும் இயங்குமாறு செய்யமுடியும்
இந்த யூஇஎஃப்ஐ கருத்தமைவானது விண்டோ 8 இயக்கமுறைமைக்கு மட்டுமே உரியது என்ற நிலையில் மிக அதிகபாதுகாப்புடன் கணினியின் தொடக்க இயக்கத்தை அமைத்திட்டால் விண்டோ எக்ஸ்பி விண்டோ விஸ்டா விண்டோ 7 ஆகிய இதற்கு முந்தைய இயக்கமுறைமைகளும் மால்வேர் வகையில் அமைந்து விடும் அதுமட்டுமல்லாது இந்த இயக்கமுறைமைகளில் இயங்குகின்ற பயன்பாடுகளும் இதே மால் வகைகளில் வகைபடுத்தபடும் அதனை தொடர்ந்து இவையனைத்தையுமே விண்டோ 8 இன் இயக்கமுறைமையில் இயங்கும் தினுடையதாகவும் மேம்படுத்தபட்டு டிஜிட்டல் கையெழுத்து அனுமதிபெற்றதாகவும் இருக்கவேண்டும் என்ற நிலை ஏற்படும் இதனால் காலவிரையமும் பணவிரையமும் அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் பழைய நிலைக்கு மீளமைவுசெய்தல்(Restore) இழந்த கோப்பகளை மீட்டெடுத்தல் ( Recover) ஆகியவை இந்த புதிய நிலைமையில் செயல்படாது போய்விடும்
ஆண்ட்ராய்டு போன்ற இயக்கமுறைமையின் மூலம் கையடக்க கருவிகளுக்கான வென்பொருளை தன்னுடைய கட்டுபாட்டிற்குள் கொணடுவர முயற்சி செய்யும் மைக்ரோசாப்டின் இந்த செயல் வெற்றி பெறாது என்பதே நடப்பு நிலைமையாகும்
ஒரு பொருள் சேவை வழங்குவதற்கு பல போட்டியாளர்கள் இருந்தால்தான் மக்களுக்கு குறைந்த விலையும் தரமான பொருள் அல்லது சேவையும் கிடைக்கும் சந்தையில் போட்டியற்ற ஒற்றையான பொருள் அல்லது சேவையெனில் ஏகபோக கட்டுபாட்டிற்கு மாறிவிட்டால் மக்களுக்கு குறைந்த விலையும் தரமான பொருள் அல்லது சேவையும் கிடைக்காத நிலை ஏற்படும்
அதனால் இந்த யூஇஎஃப்ஐ இன் மீது உருவாக்கபடும் மைக்ரோசாப்டின் கட்டுபாடானது கணினிமென்பொருள் துறையில் தரமற்ற சேவையும் விலைஅதிகமானதாகவும் ஆன நிலைக்கு தள்ளபட்டுவிடும் என எச்சரிக்கபடுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக