meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, ஜூன் 30, 2012

 தமிழ் மூலம் இணயத்தில் உலவ ( எந்த மொழி யர்க இருந்தாலும்)


மொழிபெயர்ப்புக் கருவிகளும்[Translation] ஒலிபெயர்ப்புக் கருவிகளும்[Transliteration] தான் ஒரு மொழிக்கு இணையத்தில் கிடைக்கும் இரண்டாவது பெரிய அங்கீகாரம். 1991 அக்டோபரில் unicode குறிமுறையில் சேர்க்கப்பட்டதுதான் தமிழுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் என்ற போதும் மொழி/ஒலிபெயர்ப்புக் கருவிகள் தான் பயனர்கள் மத்தியில் அதனை பரவலாக்கியது. ஒலிபெயர்ப்புக் கருவிகள் என்று வந்தபிறகுதான் மொழி வளங்கள் இணைய சுரங்கத்தில் சரமாரியாக அடுக்கப்படுகிறது. ஓலைச்சுவடிகளில் எழுதி தொலைந்து போன முதல் இலக்கண நூலான அகத்தியம் முதல் அச்சுக் காகிதங்களில் எழுதி செல்லரித்துப் போன சென்ற நூற்றாண்டு புத்தகம் வரை ஏற்பட்ட நிலை இனி பேஸ்புக்குகளிலும் ஃப்ளிக்கரிலும் எழுதித்தள்ளும் தமிழுக்கு இல்லை. 'நேசமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!' என தமிழும் கணினிமயமாக்கப் பட்டு வருகிறது.

பிற்சேர்க்கை:
'ஒலிபெயர்ப்பு' எனப்படுவது Ammaa என்று தட்டச்சிட்டால் அம்மா என்று வருவது
'மொழிபெயர்ப்பு' எனப்படுவது Mother என்று தட்டச்சிட்டால் அம்மா என்று வருவது


இங்கு குறிப்பிட்டது போல சில மொழி பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு மென்பொருட்கள் இருந்தாலும் இணையத்தில் எளிதாக அவ்வசதியைத் தரும் சில கருவிகளும் உள்ளன். மொழியை எழுதப் பயன்படும்ஒலிபெயர்ப்புக் கருவிகள் முன்னெல்லாம் தனியான ஒருப் பக்கத்தில் இருக்கும் அங்கு சென்று தட்டச்சிட்டு பிரதியெடுத்து வந்தோம் ஆனால் சில கட்ஜெட்களும் கூகுளின் உட்பொதிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டினாலும் வேண்டியப் பக்கத்தில் ஒலிபெயர்ப்பு வசதியை கொண்டுவரலாம்.அதற்கு மேல் bookmarklet எனப்படும் ஸ்கிரிப்ட்டை பிரவுசரில் பதிக்கும் முறையும் உள்ளது. ஒருதளத்தை எப்படி புக்மார்க் செய்கிறோமோ அதுபோல ஸ்க்ரிப்ட்டை சேமிக்கும் முறை. கீழ் கண்ட சுட்டிகளை drag செய்து உங்கள் பிரவுசரில் விடலாம் அல்லது Favoritesல் சேமித்தும் கொள்ளலாம்.ஒருமுறை சேர்த்துக் கொண்டால் போதும் இனி தானாக எந்த ஒரு தளத்திலும் தமிழில் அடிக்கலாம். நெருப்பு நரி,குரோம்,சஃபாரி உலவிகளில் இந்த சுட்டி இழுத்து உங்கள் டூல் பாரில் விட்டால் போதும், IE வில் favoritesல் சேமிக்க வேண்டும். {படங்களுடன் விளக்கமாக பார்க்க http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html

இது கூகுளின் மொழியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆங்கில எழுத்தின் ஒலிக் குறிப்புப்படி தமிழ்படுத்தும் 

[அ Transliteration]
உபயம்: கூகிள் 

இது மைக்ரோசாப்டின் மொழியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது 
தமிழ் (Tamil)
உபயம் மைக்ரோசாப்ட் 

இது தமிழ் தட்டச்சுப் பலகை முறையை அடிப்படையாகக் கொண்ட பலவித தமிழ் bookmarkletகள் [சாக்லேட்கள் போல இனிப்பாக இருக்குல!] 
உபயம்: tavultesoft
குறிப்பு இவைகள் இணைய இணைப்பில் மட்டும் செயல்படக் கூடியவைகள் 

சரி இனி உலவியில் தமிழாக்க வசதியை பொருத்தியாகிவிட்டது கண்ணில் படும் தளங்களில் எல்லாம் தமிழில் திட்டிக் கொள்ளலாம் மன்னிக்க, தமிழில் தட்டிச் செல்லலாம்:) 

அடுத்ததாக மொழி பெயர்ப்பு, இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவு தமிழ் மொழிபெயர்ப்பில் நிரலாக்கம் வராமல் இருந்தது. ஆனால் கூகிள் தற்போது அதையும் அறிமுகப் படுத்தியுள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பெயர்க்கையில் போதிய நிலைத்தன்மை உள்ளது ஆனால் தமிழிருந்து மற்ற மொழிக்கு பெயர்க்கையில் கருத்து விரிசல்கள் காணப்படுகிறது. இருந்தாலும் அவை மேம்படுத்தப்பட்டுக் கொண்டு வருவதால் எதிர்காலத்தில் நிச்சயம் அதும் சீர் செய்யப்படும். இதன் துணைக் கருவிகள் பல மேன்படுத்தப்பட்டுக் கொண்டுவருகிறது. 

தமிழ்ப் பதிவர்கள் தங்கள் தளத்தை மாற்று மொழியில் மொழி பெயர்க்கும் வசதியை இணைக்க விரும்பினால் கீழ்க்கண்ட நிரல்களை தளத்தில் இணைக்கவும் 

--------------------------------

<div id="google_translate_element"></div><script>
function googleTranslateElementInit() {
new google.translate.TranslateElement({
pageLanguage: 'ta'
}, 'google_translate_element');
}
</script><script src="//translate.google.com/translate_a/element.js?cb=googleTranslateElementInit"></script>

--------------------------------

பொருத்தியப் பின் இப்படி இயங்கும்.அதன்மூலம் பல அந்நிய மொழியினர் எளிதில் பதிவை படிக்கமுடியும்
Powered by Translate


நீங்கள் படிக்கும் வேற்று மொழி தளங்களை தமிழ்ப்படுத்தி படிக்க விரும்பினால் அதற்கும் ஒரு bookmarklet உள்ளது. இதனை மேற்கூறிய வழிமுறையில் உங்கள் பிரவுசரில் இணைத்துக் கொள்ளவும்.
[அ Translation]
அல்லது கூகிள் வழங்கி உள்ள டூல்பாரை நிறுவியும் மொழி பெயர்க்கலாம்.
http://www.google.com/toolbar/ff/index.html#brand=GFRL

இங்கு டாக்குமெண்டுகளை கூட மொழி பெயர்க்கலாம் 
http://translate.google.com/?hl=en
தமிழிலிருந்து மாற்று மொழிகளுக்கு பெயர்க்கையில் ஆங்கிலம் தான் இடைமுகமாக பயன்பட்டுள்ளது. எனவே எளிய தமிழ் வாக்கியங்கள் சிறப்பாக மொழி பெயர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக