meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஜூன் 29, 2012


கொசுக்களை மிக எளிதான வழியில் செலவு அதிகமில்லாமல் பிடித்து ஒழிக்கலாம்


இதனை ஒவ்வொரு வீட்டிலும் செய்யலாம் இதற்காக தண்ணீர், பிரவுன் சர்க்கரை ,யீஸ்ட்,பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று ஆகியமட்டுமே தேவையான பொருளாகும் இதற்கான படிமுறை பின்வருமாறு 1.பிளாஸ்டிக் பாட்டிலை பாதியாக வெட்டி இரண்டு அரைப்பகுதியாக மாற்றி வைத்திடுக 2.அடிப்பகுதியல் சிறிது வெண்ணீரால் நிரப்பி அதில் பிரவுன் சர்க்கரை யை கரைத்துகொண்டு அறைவெப்பநிலை அளவிற்கு குளிர்வித்து கொள்க 3.பின்னர் அந்த ஆறிய பிரவுன் சர்க்கரை கரைசலில் யீஸ்ட்டை சேர்த்திடுக உடன் இந்த கலவையில் கார்பன்-டை- ஆக்ஸைடு உருவாகும் இதுதான் கொசுக்களை கவரக்கூடியதாகும் 4.இந்த அடிப்பகுதி பிளாஸ்டிக் பாட்டிலை மேல்பகுதி தவிர்த்து கறுப்பு வண்ண தாளால் சுற்றி ஒட்டி கொள்க இதனை வீட்டின் ஏதேனுமொரு மூலையில் வைத்துவிடுக 5.ஓரிருவாரம் கழித்து பார்த்தால் அந்த பிளாஸ்டிக் பாட்டில் முழுவதும் இறந்துபோன கொசுவால் நிரம்பிஇருப்பதை காணலாம் 6.இவ்வாறு குறைந்த செலவில் நம்முடைய வீட்டில் கொசுவை பிடித்து ஒழித்திடுகஎச்சரிக்கை இந்த ஆலோசனை கொசுவர்த்தி சுருள் செய்யும் நிறுவனத்திற்கு வருமான இழப்பு ஏற்படும் என்பது உண்மை ஆனால் ஏழைஎளிய மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்பதே அதைவிட பேருண்மையாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக