meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், ஜூலை 03, 2012

மேலும் ஓரு தேடல் எஞ்சின்

ஸ்பெர்ஸ் முற்றிலும் வேறு வகையை சார்ந்தது.இது பெருந்தேடியந்திரம்,அதாவது மெட்டா தேடியந்திரம்.அப்ப்டி என்றால் பல தேடியந்திரங்களில் தேடி அதனடிப்படையில் தேடல் முடிவுகளை தரும் தேடியந்திரம்.
ஒரு காலத்தில் இவ்வகை தேடியந்திரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு பின்னர் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன.
இப்போது ஸ்பெர்ஸ் இந்த பிரிவில் அறிமுகமாகியுள்ளது.
ஸ்பெர்ஸ் தனது சிறப்பாக சொலவது என்னவென்றால் ஒரே தேடலில் இணையத்தின் மிகச்சிறந்த முடிவுகளை கண்டுபிடித்து தருவதை தான்.அதாவது தேடியந்திர மும்மூர்த்திகளான கூகுல்,யாஹூ,பிங் ஆகிய மூன்று தேடியந்திரங்களிலும் தேடி அவற்றோடு தனது சொந்த தேடல் தொழில்நுட்ப‌த்தையும் கலந்து மிகசிறந்த இணைய முடிவுகளை தருவதாக சொல்கிற‌து.
ஒரே முடிவு ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் இருந்தால் அவை மீண்டும் மீண்டும் தோன்றாமல் ஒருங்கிணத்தும் தருகிறது.
எல்லா தேடியந்திரங்களில் தேடுவது போல தான் இதிலும் தேட வேண்டும்.முடிவுகளும் மற்ற தேடியந்திரங்கள் போலவே பட்டியலிடப்படுகின்றன.ஆனால் ஒவ்வொரு முடிவிலும் அது எந்த எந்த தேடியந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவல் இணைக்கப்பட்டுள்ளது.உதாரணத்திற்கு ஒரு முடிவு கூகுலில் மட்டும் இருப்பதாக குறிப்பிட்ப்படலாம்.இன்னொரு முடிவு கூகுல் ,பிங் ஆகிய இரண்டு தேடியந்திரங்களிலிம் இடம்பெற்றிருக்கலாம்.சில முடிவுகள் மூன்று தேடியந்திரங்களிலும் இருக்கலாம்.
ஆக‌ ஒரே தேடலில் மூன்று முன்னணி தேடியந்திரங்களிம் உள்ள முடிவுகளை பார்த்து விடலாம்.இதை தான் ஸ்பெர்ஸ் ஒரே தேடலில் இணையத்தின் சிறந்த‌ முடிவுகளை தருவதாக சொல்கிற‌து.ஒரே கல்லில் இர‌ன்டு மாங்காய் என்பது போல ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!இந்த அம்சமே இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தும் என்று ஸ்பெர்ஸ் நம்புகிற‌து.
ஒரே இடத்தில் மூன்று தேடியந்திர‌ங்களிலும் முடிவுகளை தேட உதவும் தேடியந்திரங்களில் இருந்து கொஞ்சம் மேம்பட்ட சேவையாகவே இது தோன்றுகிற‌து.
ஸ்பெர்ஸ் மேலும் சில கூடுதல் வசதிகளையும் தருகிறது.தேடல் பட்டியலிலேயே முடிவுகளின் முன்னோட்டத்தை பார்த்து கொள்ளலாம்.செய்திகள்,படங்கள்,வீடியோ,விக்கிபீடியா தகவல் என முடிவுகளை நமது தேவைக்கேற்ப வடிக்கட்டி கொள்ளலாம்.
அதோடு டிவிட்டரில் இப்போது பகிரப்படும் முடிவுகளை உடனடியாக தேடும் வசதியும் இருக்கிறது.
கூகுல் முடிவுகள் மட்டும் போதாது என நினைக்கும் போது இந்த தேடியந்திரத்தை பயன்ப‌டுத்தி பார்க்கலாம்.
பயன்படுத்தி பாருங்கள்.பார்த்து வியப்பு ஏற்படுகிறதா என்று சொல்லுங்கள்.
தேடியந்திர‌ முகவரி;http://www.sperse.com/

            கூகுலை போல்  புதிய தேடல் இயந்திரம் 


புதிய தேடியந்திரங்களிலேயே ஸ்மார்ட் ஆஸ் தேடியந்திரத்தை மிகவும் துணிச்சலானது என்று சொல்லலாம்.புத்திசாலி கழுதை என்னும் பொருள்படும் அதன் பெயர் மட்டும் அதற்கு காரணம் அல்ல.கூகுலுக்கு பதிலாக இணையவாசிகள் தன்னை பயன்படுத்துவார்கள் என்னும் அதன் நம்பிக்கையும் தான் காரணம்.
கூகுலுக்கு போட்டியாக முளைத்த எண்ணற்ற தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்ட நிலையில் புதிதாக முளைத்துள்ள இந்த ஸ்மார்ட்ஆஸ் கூகுலைவிட மேம்ப்பட்ட தேடியந்திரம் என்ற சொல்வதற்கில்லை.தேடல் உலகை பிரட்டிப்போடக்கூடிய புதிய தொழில்நுட்பம் இதன் வசம் இருப்பதாகவும் தெரியவில்லை.
ஆனால் கூகுலைப்போல விளம்பர நோக்கிலான முடிவுகள் இல்லாமல் தேடல் முடிவுகளை மட்டுமே இணைவாசிகளுக்கு முன்வைப்பதை ஸ்மார்ட் ஆஸ் தனது தனிச்சிறப்பாக கருதுகிறது.கூகுல் தனது பேராசையால் தேடல் முடிவுகளோடு விளம்பர நோக்கிலான முடிவுகளையும் திணித்து அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறும் ஸ்மார்ட் ஆஸ் பலரும் இந்த நிலையில் மாற்றம் தேவை என்று விரும்புவதாகவு தெரிவிக்கிறது.அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்தோடு ஸ்மார்ட் ஆஸ் உதயமாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுலுக்கு பழகியவர்கள் அதிலிருந்து விலகி வர இந்த வாதம் மட்டுமே போதுமா என்று தெரியவில்லை.
ஆனால் ஸ்மார்ட் ஆஸிடம் இந்த நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.தேடலுக்கு மட்டும் அல்ல இமெயில்க்கும் கூட இணையவாசிகள் தனது சேவையை பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு ஸ்மார்ட் ஆஸ் மெயில் சேவையையும் துவக்கியுள்ளது.பெயருக்கு பின் ‘ஸ்மார்ட் ஆஸ்’ என்று முடியும் இமெயில் சேவையை யார் விரும்பி பயன்படுத்துவார்கள் என்பதும் கேள்விக்குறி தான்?
ஆனால் ஒன்று இந்த தேடியந்திரம் சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்துக்கு அடையாளமாக ஜீவ்ஸ் பட்லர் இருந்தது போல இதற்கும் ஒரு புத்திசாலி கழுதை அடையாளமாக இருக்கிறது.அந்த கழுதை அவப்போது உதிர்க்கும் பொன்மொழிகள் பல விஷயங்களை கற்றுத்தரக்கூடும்.
அதோடு இணையவாசிகளுக்கு என்று போட்டியும் நடத்தப்பட்டு பரிசும் வழங்கப்படுகிறது.இணையவாசிகள் சமர்பிக்கும் வாசகம் கழுதையின் பொன்மொழியாக இடம்பெறும் வாய்ப்பும் இருக்கிறது.அது மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது நண்பர்களுக்கும் காதலர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்புவது போல் இந்த தேடியந்திரத்தில் இணையவாசிகள் தாங்கள் விரும்பும் வாழ்த்து செய்தியையும் இடம் பெற வைக்கலாம்.
புதிய அணுகுமுறையோடு இணையத்தில் தேடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் ஸ்மார்ட் ஆஸ் தன்னிடம் இணைய முகவரிகளை பதிவு செய்து கொள்ளவும் வேண்டுகோள் வைக்கிறது.
இந்த தேடியந்திரம் தகுதி வாய்ந்தது தானா என்று இணையவாசிகள் இதனை பயன்படுத்தி பார்க்கலாம்.
தேடியந்திர முகவரி;http://www.smartass.com/

          இணையத்தில் எதயும் மற்க்காமல் இருக்க



இணைய மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது உங்களது இணைய நினைவுகளை அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலோ பேட்ச்ஃலைப் இணையசேவையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
காரணம் இணைய தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது.அதாவது பேஸ்புக்,டிவிட்டர்,பிளிக்கர்,வலைப்பதிவு என இணையத்தில் பல இடங்களில் பல விதமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க இந்த சேவை வழி செய்கிறது.
இந்த சேவையின் அருமையை உணர அதனை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.ஒரு முறை இந்த சேவையை பயன்படுத்தி பார்த்தீர்கள் என்றால் இது போன்ற சேவை இல்லவே இல்லை என்று மனதார பாராட்டுவீர்கள்.இன்னும் சிலர் இது போன்ற சேவையை தான் எதிர்பார்த்திருந்தோம் என்று மகிழ்ச்சி அடைவார்கள்.
அந்த அளவுக்கு மிக அழகாக ஒருவரின் இணைய சுவடுகளை பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது.
இணைய சுவடுகள் என்றால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள்.
இப்போது பெரும்பாலானோருக்கு பேஸ்புக் பக்கம் இருக்கிறது.பலர் டிவிட்டரிலும் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.இன்னும் சிலர் பிளிக்கரில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.ஐபோன் வைத்திருப்பவர்கள் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் புகைப்பட நதியையே உருவாக்கி கொள்கின்றனர்.இன்னும் சிலர் வலைப்பதிவு வைத்திருக்கின்றனர்.
ஆக கருத்துக்களையோ அனுபவங்களையோ பதிவு செய்வதோ பகிர்ந்து கொள்வதோ இன்று மிகவும் சுலமாகியிருக்கிறது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவற்றையெல்லாம் தொகுக்கவோ நினைவில் கொள்ளவோ வழியில்லை.உதாரணத்திற்கு பேஸ்புக்கில் சில மாதங்களுக்கு முன் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டிருப்பீர்கள்,அது என்ன என்று இப்போது யோசித்து பார்த்தால் நினைவுக்கு வர மறுக்கும்.பேஸ்புக்கிலேயே பின்னோக்கி போய் தேடலாம் என்றாலும் அது அத்தனை சுலபமானது அல்ல.
ஆனால் பேட்ச்ஃலைப் சேவையை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் இப்படி தேடுவது கூகுலில் தேடுவதை விடவும் எளிதானது.
ஏன் என்றால் பேஸ்ட்ஃலைப் தளத்தில் உங்கள் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் தேதி வாரியாக பதிவாகியிருக்கும்.நீங்கள் தேட விரும்பும் நாளுக்கான பக்கத்தை கிளிக் செய்தால் அன்றைய பதிவுகள் முழுவதையுமே பார்க்க முடியும்.
பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள்,புகைப்படங்கள்,இணைப்புகள் என எல்லாவற்றையுமே பார்க்கலாம்.எதையுமே மறக்க வேண்டியதில்லை.இதே போலவே டிவிட்டரில் செயல்படுபவர்கள் தங்கள் குறும்பதிவுகள் அனைத்தையும் தேதிவாரியாக அணுகலாம்.
பிளிக்கர் புகைப்பட பகிர்வு சேவையில் பகிரப்படும் புகைப்படங்கள் ஐபோனில் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியாகும் புகைப்படங்கள், வலைப்பதிவுகள் என எல்லாவற்றையுமே இந்த பக்கத்தில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
பேட்ச்ஃலைப் தளத்தில் நுழைந்ததுமே தோன்றும் பக்கத்தில் இடது பக்கத்தில் நாட்காட்டி இடம்பெற்றிருக்கும்.அதில் மாதத்தையும் தேதியையும் தேர்வு செய்து கிளிக்கினால் அன்றைய தினத்துக்கான பதிவுகள் வலதுபுறத்தில் தோன்றும்.
பேஸ்புக்,டிவிட்டர்,வலைப்பதிவு என பல சேவைகளை பயன்படுத்துபவர்கள் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் அணுக முடியும்.
பேட்ச்ஃலைப்பில் முகவரி கணக்கை துவக்கிவிட்டு (அதுவும் மிகவும் சுலபம்)பேஸ்புக் ,டிவிட்டர்,பிளீக்கர் உள்ளிட்ட சேவைகளை அணுக அனுமதி அளித்து விட்டால் அதன் பிறகு தானாகவே உங்கள் பதிவுகள் இங்கே சேமிக்கப்பட்டு விடும்.
அதன் பிறகு உங்கள் இணைய நடவடிக்கையை திரும்பி பார்க்க விரும்பினால் எளிதாக அதை நிறைவேற்றி கொள்ளலாம்.ஏதாவது சந்தேகம் எழுந்தாலும் அதை தீர்த்து கொள்ளலாம்.
இப்படி ஒரே இடத்தில் அனைத்து இணைய பகிர்வுகளையும் தொகுத்து தருவதோடு இதிலேயே தனியே உள்ள குறிப்பேடு வசதியை பயன்படுத்தி மனதில் தோன்றும் எண்ணங்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://patchlife.com/

                          வரைபட விபரங்களை தேடிதரும் 

                                       இணைய தளம்




கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இல்லை என்றே பெரும்பாலான இணையவாசிகள் கருதக்கூடும்.அதே போல கூகுலை தவிர வேறு தேடியந்திரம் தேவையில்லை என்றும் இணையவாசிகளில் பலர் கருதக்கூடும்.
ஆனால் கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை தேடித்தர தனியே பிரத்யேக தேடியந்திரங்கள் தேவைப்படத்தான் செய்கின்றன.
அந்த வகையில் இணைய கடலில் மறைந்து கிடக்கும் தகவல்களை தேடித்தரும் புதிய தேடியந்திரமாக ஜான்ரன் அறிமுகமாகியுள்ளது.மறைந்து கிடக்கும் தகவல்கள் என்றால் புள்ளி விவரங்கள்,வரைபட விவரங்கள் போன்றவை.அதாவது தரவுகள்.(டேட்டா)
இந்த தகவல்கள் கட்டங்களுக்குள்ளும் கோடுகளுக்குள்ளும்,வரைபடங்களுக்கு மத்தியிலும் பிடிஎப் வடிவிலும் எக்செல் கோப்புகளாகவும் அடைப்பட்டு கிடக்கின்றன.
இணைய உலகில் தேடும் கூகுலின் தேடல் சிலந்திகள் இணைய பக்கங்களில் உள்ள செய்திகளையும்,தகவல்களையும் எளிதாக திரட்டிவிடுகின்றன.இந்த தகவல்களை பகுப்பாய்வதிலும்,இணையவாசிகள் சொல்லும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான தகவல்களை பட்டியலிடுவதிலும் கூகுல் குறை சொல்ல முடியாத திறமையை பெற்றிருக்கிறது.பிங் போன்ற பிற தேடியந்திரங்களுக்கும் இது பொருந்தும்.
இவை பெரும்பாலும் எச் டி எம் எல் வடிவில் இருப்பவை.இவற்றுக்கு மாறாக பல பக்கங்கள் பிடிஎப் வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம்.பெரும்பாலும் புள்ளி விவரங்கள் மற்றும் வரைபடங்களுடன் கூடிய கட்டுரைகள் இப்படி பிடிஎப் கோப்புகளாக அமைகின்றன. இன்னும் சில பக்கங்கள் எக்செல் வடிவில் இருக்கின்றன.
வார்த்தைகளையும் வரிகளையும் தேடி கண்டுபிடிக்க பழக்கப்பட்ட தேடியந்திர சிலந்திகள் இவற்றை கோட்டை விட்டுவிடுகின்றன.எனவே இந்த தகவல்கள் தேடலில் அகப்படுவதில்லை.
பொதுவாக இணையவாசிகளுக்கு செய்திகள்,கட்டுரை போன்றவையே தேவைப்படுவதால் வரைபடங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் போன்றவை விடுபடுவதை பொருட்படுத்துவதில்லை.ஆனால் ஆய்வு நோக்கில் தகவல்களை தேடுபவர்களுக்கு,கல்வியாளர்கள்,நிபுணர்கள் போன்றவர்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளவையாக இருக்கும்.
நிபுணர்கள் என்றில்லை சாமன்யர்களுக்கே கூட ஏதாவது ஒரு நேரத்தில் புள்ளிவிவரங்கள் தேவைப்படலாம்.
இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே ஜான்ரன் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.புள்ளிவிவரங்கள்,வரைபட தகவல்கள் உள்ளிட்ட தரவுகளுக்கான கூகுல் என்று தன்னை தானே வர்ணித்து கொள்ளும் இந்த தேடியந்திரம் அதை கச்சிதமாக நிறைவேற்றுகிறது.
எப்படி என்றால்,இந்த தளத்தில் எதை தேடினாலும் அந்த குறிச்சொல் தொடர்பான புள்ளிவிவர பக்கங்களை பட்டியலிட்டு காட்டுகிறது.அதாவது பிடிஎப் மற்றும் எக்செல் கோப்புகளாக உள்ள பக்கங்களை பட்டியலிடுகிறது.
கூகுலிலேயே கூட பிடிஎப் கோப்பு என்று தனியே குறிப்பிட்டு தேட முடியும் தான்.ஆனால் இது முழுமையானதல்ல.தவிர பிடிஎப் வடிவில் தகவல் இருப்பது உறுதியாக தெரிந்தால் மட்டுமே இது கைகொடுக்கும்.
ஜான்ரன் தரவுகள் எந்த வடிவில் இருந்தாலும் அவற்றை தேடி பட்டியலிட்டு விடுகிறது.அதற்கேற்ற வகையில் தரவுகளை உணரக்கூடிய தேடல் தொழில்நுட்பமும் அதன் வசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
வழக்கமான தேடியந்திரம் போல ஒரு பக்கத்தில் வார்த்தைகளையும் புகைப்படங்களையும் தேட முற்படாமல் இது புகைப்படங்களை தேடி அவற்றில் வரைபடங்களும் அட்டவணையும் இருக்கின்றனவா என அலசி ஆராய்ந்து அதனடப்படையில் முடிவுகளை பட்டியலிடுவதால் புள்ளிவிவரங்கள் அடங்கிய பிடிஎப் கோப்பு போன்றவற்றை முழுமையாக பட்டியலிடுகிறது.
இந்த தேடியந்திரத்தில் எந்த குறிசொல்லை டைப் செய்தாலும் அவை தொடர்பான பிடிஎப் பக்கங்களே வந்து நிற்கின்றன.
முதல் முறையாக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உதாரணமாக சில தேடல் பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த தேடல் பதங்களை கிளிக் செய்தால் அவை தொடர்பான புள்ளிவிவர பக்கங்கள் வந்து நிற்கின்றன.
உதாரணமாக இந்தியாவில் அந்நிய முதலீடு என்னும் பதத்தை கிளிக் செய்தால் முதலீடு தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய பிடிஎப் பக்கங்கள் தோன்றுகின்றன.
இதே போல ஆப்பிரிக்காவில் செல்போன் பயன்பாடு,சைக்கிள் விபத்துகள்,இங்கிலாந்தில் சாலை விபத்துகள்,பெட்ரோல் பயன்பாடு போன்ற பதங்களுக்கும் இத்தகைய முடிவுகளை பார்க்கலாம்.
முடிவுகளை பரிசிலிக்கும் போது அவற்றை கிளிக் செய்ய கூட வேண்டாம் இடது பக்கத்தில் உள்ள பிடிஎப் அடையாளத்தின் மீது மவுசை நகர்த்தினாலே அந்த பக்கத்தின் தோற்றம் தோன்றுகிறது.
தேடியந்திர முகவரி;http://www.zanran.com/q/

உங்கள் திறமையை வெளியிட 

ஓரு இணைய தளம்



நன்றாக பாடுவது,ஒவியம் வரைவது ,எழுதுவது, என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்.அந்த திறமையை வெளிப்படுத்த வழியில்லை என ஏங்குகிறிர்க
ளா?
கவலையே வேண்டாம் அதற்காக என்றே ஒரு இணைய தளம் இருக்கி
றது.
இந்த தளத்தில் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.உங்கள் திறமை ப்ற்றி உலகுக்கே சொல்லலாம். ஜுகியு என்பது அந்த தளத்தின் பெயர்.
வலைப்பின்னல் தளங்களின் அடிப்படையில் செயல்படும் தள‌ம் இது.
இந்த தளத்தில் உங்கள் படைப்புகளை சமர்பிக்கலாம்.அத‌ன் பிறகு அது ஏற்கப்பட்டு, சக உறுப்பினர்களால் பார்க்கப்பட்டு மதிப்பிடப்படும். நீங்களும் ம்ற்றவர்கள் படைப்புகளை பார்த்து மதிப்பிடலாம்.
————–
link.
www.zooqoo.com

திங்கள், ஜூலை 02, 2012


                 இணையத்தில் தமிழ் புத்தகங்கள் 

                                   படிக்கமுடியுமா?

ஆர்வத்தோடு கேட்கப்படும் இந்த கேள்விக்கு உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய சிலிக்கான ஷெல்ப்தளத்திற்கு நன்றி.(தமிழில் புத்தகங்கள் தொடர்பான அருமையான வலைப்பதிவு இது)
ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.
அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன.அரசியல்,இலக்கியம்,உடல் நலம்,இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.
அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா,, அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிற‌து.
நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில் துவக்கப்பட்ட இந்த தளம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த தளத்தை நடத்தி வரும் சிங்கபூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரைகையாளருமான ரமேஷ் சக்ரபாணி பாராட்டுக்ககுறியவர்.
இலவச இணைய நூலகமாக இதனை அவர் குறிப்பிடுகிறார்.
இணையதள முகவரி;http://www.openreadingroom.com/

           சுலபமாக  ஆங்கிலம் கற்க்க உரையாட 

                                           கற்று தரும் இணைய தளம்



என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.
முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.
இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள்.
கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?
மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.
மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.
கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.
பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.
கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.
இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன
இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.
இணையதள முகவரி;http://classbites.com/