மேலும் ஓரு தேடல் எஞ்சின்
ஸ்பெர்ஸ் முற்றிலும் வேறு வகையை சார்ந்தது.இது பெருந்தேடியந்திரம்,அதாவது மெட்டா தேடியந்திரம்.அப்ப்டி என்றால் பல தேடியந்திரங்களில் தேடி அதனடிப்படையில் தேடல் முடிவுகளை தரும் தேடியந்திரம்.
ஒரு காலத்தில் இவ்வகை தேடியந்திரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு பின்னர் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன.
இப்போது ஸ்பெர்ஸ் இந்த பிரிவில் அறிமுகமாகியுள்ளது.
ஸ்பெர்ஸ் தனது சிறப்பாக சொலவது என்னவென்றால் ஒரே தேடலில் இணையத்தின் மிகச்சிறந்த முடிவுகளை கண்டுபிடித்து தருவதை தான்.அதாவது தேடியந்திர மும்மூர்த்திகளான கூகுல்,யாஹூ,பிங் ஆகிய மூன்று தேடியந்திரங்களிலும் தேடி அவற்றோடு தனது சொந்த தேடல் தொழில்நுட்பத்தையும் கலந்து மிகசிறந்த இணைய முடிவுகளை தருவதாக சொல்கிறது.
ஒரே முடிவு ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் இருந்தால் அவை மீண்டும் மீண்டும் தோன்றாமல் ஒருங்கிணத்தும் தருகிறது.
எல்லா தேடியந்திரங்களில் தேடுவது போல தான் இதிலும் தேட வேண்டும்.முடிவுகளும் மற்ற தேடியந்திரங்கள் போலவே பட்டியலிடப்படுகின்றன.ஆனால் ஒவ்வொரு முடிவிலும் அது எந்த எந்த தேடியந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவல் இணைக்கப்பட்டுள்ளது.உதாரணத்திற்கு ஒரு முடிவு கூகுலில் மட்டும் இருப்பதாக குறிப்பிட்ப்படலாம்.இன்னொரு முடிவு கூகுல் ,பிங் ஆகிய இரண்டு தேடியந்திரங்களிலிம் இடம்பெற்றிருக்கலாம்.சில முடிவுகள் மூன்று தேடியந்திரங்களிலும் இருக்கலாம்.
ஆக ஒரே தேடலில் மூன்று முன்னணி தேடியந்திரங்களிம் உள்ள முடிவுகளை பார்த்து விடலாம்.இதை தான் ஸ்பெர்ஸ் ஒரே தேடலில் இணையத்தின் சிறந்த முடிவுகளை தருவதாக சொல்கிறது.ஒரே கல்லில் இரன்டு மாங்காய் என்பது போல ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!இந்த அம்சமே இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தும் என்று ஸ்பெர்ஸ் நம்புகிறது.
ஒரே இடத்தில் மூன்று தேடியந்திரங்களிலும் முடிவுகளை தேட உதவும் தேடியந்திரங்களில் இருந்து கொஞ்சம் மேம்பட்ட சேவையாகவே இது தோன்றுகிறது.
ஸ்பெர்ஸ் மேலும் சில கூடுதல் வசதிகளையும் தருகிறது.தேடல் பட்டியலிலேயே முடிவுகளின் முன்னோட்டத்தை பார்த்து கொள்ளலாம்.செய்திகள்,படங்கள்,வீடியோ,விக்கிபீடியா தகவல் என முடிவுகளை நமது தேவைக்கேற்ப வடிக்கட்டி கொள்ளலாம்.
அதோடு டிவிட்டரில் இப்போது பகிரப்படும் முடிவுகளை உடனடியாக தேடும் வசதியும் இருக்கிறது.
கூகுல் முடிவுகள் மட்டும் போதாது என நினைக்கும் போது இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.
பயன்படுத்தி பாருங்கள்.பார்த்து வியப்பு ஏற்படுகிறதா என்று சொல்லுங்கள்.
தேடியந்திர முகவரி;http://www.sperse.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக