இலவசமாக வானெலி நிலையம் அமைக்க
எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து ருக்கிறிர்களா?பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிறதா?
இல்லை.மடை திறந்த வெள்ளம் போல பேசக்கூடிய ஆற்றல் இருக்கிறதா?உலகோடு பகிர்ந்து கொள்ள நல்ல விஷயங்கள் உள்ளனவா?
ஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆர்ம்பிக்க கூடாது?
ஆடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய சேவைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
இந்த வரிசையில் புதிதாக நேர்ந்திருக்கிறது ஸ்பிரிக்கர் .
உலகோடு பேசுங்கள் என அழைக்கும் இந்த இணையதளம் உங்களுக்கான இணைய வானொலியை நடத்தி கொள்ள வழி செய்கிறது.அதிலும் எப்படி, இதோ இந்த நிமிடத்தில் இருந்து உடனடியாக் உங்கள் வானொலி சேவையை துவக்கி விடலாம்.
ஆம் பேசுவதற்கோ பகிர்ந்து கொள்வதற்கோ விஷயம் இருக்கிறது என்றால் இந்த தளத்தில் உறுப்பினராக உடனேயே உங்களுக்கான வானொலியை துவக்கி விடலாம்.
ஆம் பேசுவதற்கோ பகிர்ந்து கொள்வதற்கோ விஷயம் இருக்கிறது என்றால் இந்த தளத்தில் உறுப்பினராக உடனேயே உங்களுக்கான வானொலியை துவக்கி விடலாம்.
நேரடி ஒலிபரப்பு என்பார்களே அதே போல நீங்கள் பேச பேச நிகழ்ச்சி உங்கள் வானொலியில் ஒலிபரப்பாகும்.இல்லை என்றால் அழகாக திட்டமிட்டு ஒரு நிகழ்ச்சியை தயார் செய்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.பதிவு செய்யவும் சிறப்பு சப்தங்களை சேர்க்கவும் வசதி உள்ளது.
நீங்கள் கேட்டு ரசித்த பாடல்கள்,நாட்டு நட்ப்புகல் மீதான விமர்சனம்,கிரிக்கெட் வர்னனை என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
வானொலி நடத்தும் அளவுக்கு குரல் வளம் எல்லாம் இல்லை என்று நீங்கள் நினைத்தால்,மற்றவர்கள் வானொலியை கேட்டு பாருங்கள்.
உங்களை போன்ற உறுப்பினர்கள் உருவாக்கி வைத்திருக்கும் விதவிதமான வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்கலாம்.நிறுவனங்களால் நடத்தப்படும் வணிக ரீதியிலான வானொலி நிகழ்ச்சிகளை விட இவை மாறுபட்டதாக இருக்கும்.
உறுப்பினர்களீன் நிழ்ச்சிகள் அவற்றின் வகைகளுக்கேற்ப தனிதனியே வகைப்டுத்தப்பட்டுள்ளன.நீங்கள் விரும்பும் பிரிவை தேர்வு செய்து கேட்கலாம்.
சொந்தமாக வானொலியை நடத்துபவர்கள் தங்களுக்கான நேயர்களை தேடி கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் இருக்கிறது.வானொலியை உருவாக்கிய பிறகு அதனை பேஸ்புக மற்றும் டிவிட்டர் வழியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல் நிகழ்ச்சியின் வகைகளை அதற்கேற்ற சொற்கள் மூலம் வகைப்படுத்தலாம்.
வனொலியை நடத்துபவர்களுக்கான தனி பக்கமும் தரப்படுகிரது.அதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரெலாம்.
இணையம் ஏற்படுத்தி தந்துள்ள எல்லையில்லா வாய்ப்பின் அடையாளமாக இணையவாசிகள் தங்களுக்கான வானொலி நிலையத்தை நடத்தி கொள்ள உதவுகிறது இந்த தளம்.
இணையதள முகவரி;http://www.spreaker.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக