meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், ஜூலை 03, 2012


விருப்பிய பாடலை கேட்க்க



பாடல்களை கேட்டு ரசிப்பது சுகமானது.பாடல்கள் பற்றி நண்பர்களோடு பேசி மகிழ்வது இன்னும் சுகமானது.இந்த இரண்டையும் சாத்தியம்மாக்குகிறது அவுட்லவுட் இணையதளம்.
இசை பிரியர்கள் எல்லோருக்குமே தங்களுக்கு பிடித்தமான பாடல்கள் பற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதும் பிடித்தமானதாக இருக்கும்.சில நேரங்களில் வானொலியிலோ செல்போனிலோ பாடல்களை கேட்டு கொண்டிருக்கும் போது நண்பர்கள் அருகே இருந்தால் அவர்களிடம் பாடலின் சிறப்புக்களை சொல்லி மகிழும் சூழல் அமையும்.
ஆனால் பல நேரங்களில் பாடல்களை கேட்கும் போது பக்கத்தில் நண்பர்கள் இருக்க வாய்ப்பில்லை.இன்னும் சில நேரங்களில் நண்பர்களுடன் மெய்மறந்து இசை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது,குறிப்பிட்ட பாடல்களை கேட்கும் வசதி இல்லாமல் போகலாம்.
இதற்கு மாறாக பாடல்களை நண்பர்களோடு சேர்ந்து கேட்டு ரசித்தபடி அவர்களோடு பாடல்களை விவாதிக்கும் வாய்ப்பை உண்டாக்கி தருகிறது அவுட்லவுட் இணைய தளம்.
அதாவது இணையத்தில் நாம் கேட்கும் அதே பாடலை நண்பர்களையும் கேட்கச்செய்ய்லாம்.அப்படியே அந்த பாடல்கள் பற்றிய கருத்துக்களை பரிமாரிக்கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் நண்பர்கள பாடலை கேட்டு ரசிக்க வசதியாக இந்த தளத்தில் உறுப்பினர்கள் தங்களுக்கான இணைய அறையை உருவாக்கி கொள்ளலாம்.அதன் பிறகு கைவசம் உள்ள பாடல்களை பதிவேற்றிவிட்டு நண்பகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களோடு சேர்ந்து பாடல்களை கேட்டு மகிழலாம்.பாடலின் பிடித்த விஷயங்கள் குறித்து கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த உரையாடலின் போது பாடல்களை புதிய கோணத்தில் ரசிப்பது சாத்தியமாகலாம்.நண்பர்கள் பரிந்துரைக்கும் புதிய பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.
முதல் முறையாக உறுப்பினராகிறவர்கள் புதிய அறையை அமைப்பதற்கு முன்பாக ஏறகனவே உருவாக்கப்பட்டுள்ள பொது அறையிலும் நுழைந்து பாடல்களை கேட்கலாம்.
இசை பிரியர்களுக்கு சுவாரஸ்யமான சேவை தான்.
டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பல உறுப்பினர்கள் அவப்போது தங்களுக்கு பிடித்தமான பாடல் பற்றி பதிவிடுவதுண்டு.சில நேரங்களில் இப்போது இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன் என்று டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதும் உண்டு.
இப்படி பாடல் பற்றிய தகவலை மட்டும் பகிர்ந்து கொள்வதை காட்டிலும் பாடல்களை சேர்ந்து கேட்டு அது பற்றி விவாதிக்க முடிவது சிறந்தது தானே.
இதை தவிர பாடல்களை பகிர்ந்து கொள்ள இன்னுமொரு இசைமயமான இணையதளம் இருக்கிறது.டியூன்பேர்டு என்னும் இந்த தளம் வழியே டிவிட்டர் மூலமே ஒருவர் தான் கேட்டுகொண்டிருக்கும் பாடல்களை சுலபமாக பகிர்ந்து கொள்ளலாம்.
டியூன்பேர்டு சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.டிவிட்டர் கணக்கு மூலமே இந்த தளத்தில் நுழைந்து பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
ஒருவர் தான் கேட்டு ரசிக்கும் பாடல்களை பகிர்ந்து கொள்வதோடு சக உறுப்பினர்கள் பகிர்வு மூலம் புதிய பாடல்களை தாங்களும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் பாடல்களில் சமீபத்தியவை முகப்பு பக்கத்தில் பட்டியலிப்படுவதோடு பிரபலமானவை பாடல் ஆல்பத்தின் புகைப்பத்துடன் அருகிலேயே பட்டியலிடப்படுகிறது.
ஒவ்வொரு உறுப்பினருக்குமான பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள மற்ற பாடல்களின் பாடயலையும் பார்க்கலாம்.
உறுப்பினர்கள் பாடல் பகிர்வை கேட்டு ரசிப்பதோடு தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.
இணையதள முகவரி;http://outloud.fm/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக