meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், ஜூலை 03, 2012

மறந்து போன இணைய தளங்களை தேட



அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே!
பெரும்பாலான இணையவாசிகளுக்கு ஏற்படகூடிய அனுபவம் தான் இது.அதாவ‌து சில தினங்களுக்கு முன் தான் ஒரு இணையதளத்தை பார்த்திருப்போம்.அதன் பிறகு அந்த தளம் மீண்டும் நினைவுக்கு வரும் போது அதன் முகவரி மட்டும் கண்ணாமூச்சி காட்டும்.எவ்வள‌வே முயன்றாலும் அந்த தளத்தின் முகவ‌ரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும்.
இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே புக்மார்கிங் சேவை தளங்கள் இருக்கின்றன.எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடி தடுமாறாமல் இருக்க தளங்களை பார்க்கும் போதே புக்மார்கிங் தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான்.
அனால் புக்மார்கிங் செய்யப்பட்ட தளங்கள் என்பது பரணில் போடப்பட்ட பொருட்கள் போல ஆகிவிடுவதுண்டு.சேமித்து வைத்ததோடு பலரும் அவற்றை திரும்பிகூட பார்ப்பதில்லை.தாமதமான நிதி பயனற்றது என்பதை போல பராமரிக்கப்படாத புக்மார்கிங் தளங்களாலும் பயனில்லை.
இந்த சங்கடத்தை தவிர்க்கும் வகையில் புதியதொரு புக்மார்கிங் வசதி அறிமுகமாகியுள்ளது.உண்மையிலேயே புதுமையான புக்மார்கிங் சேவை தான் இது.காரணம் ரீகால் என்னும் அந்த வசதியில் புக்மார்கிங் செய்யாமலேயே புக்மார்கிங் வசதியை பயன்படுத்தலாம்.
அதாவது நாம் பார்க்கும் தளங்களை குறித்து வைக்காமலேயே அவை மீண்டும் தேவைப்படும் போது அழகாக தேடி எடுத்து விடலாம்.அதெப்படி புக்மார்கிங் செய்யாமலேயே தளங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் ரீகால் இணையவாசிகள் சார்பில் அவர்கள் விஜய‌ம் செய்யும் எல்லா இணைய பக்கங்களையும் குறித்து வைத்து கொண்டு கேட்கும் போது எடுத்து தந்துவிடும்.
கூகுலின் பிரபலமாப கூரோம் பிரவுசருக்கான விரிவாக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள ரீகாலை ஒருமுறை பொருத்தி கொண்டு விட்டால் அதன் பிறகு அது ஒரு விசுவாசமான உதவியாளரை போல நாம் செல்லும் எல்லா இணையதளங்களையும் குறித்து வைத்து கொள்ளும்.வெறும் முகவரியை மட்டும் அல்லாமல் இணையதளத்தில் உள்ள விஷயங்க‌ள் அனைத்தையும் சேமித்து கொள்கிற‌து.
ஒருவரது இணைய சுவடுகள் முழுவதையும் ரீகால் தனது சேமிப்பில் நிறுத்து வைத்து கொள்கிற‌து.
பின்னர் எப்போது தேவை என்றாலும் நாம் பார்த்த இணைய‌தளத்தை தேடி கண்டு பிடித்து தருகிறது.தேடியந்திரத்தில் தேடுவது போலவே நாம் பார்த்த தளம் தொடர்பாக நினைவில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை குறிச்சொல்லாக பயன்ப‌டுத்தி தேடிக்கொள்ள‌லாம்.
நல்ல வசதி தான் .ஆனால் குரோம் பிரவுசர் சார்ந்த சேவை என்பது தான் ஒரே குறை.
இணையதள முகவரி;http://www.recawl.com/




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக