meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, அக்டோபர் 12, 2013


கோரல் டிராவில் போட்டோஷாப்பைப் பயன்படுத்துவது எப்படி


கோரல் டிராவில் பேஜ் லேயவுட் செய்து கொண்டிருக்கும்போது, சில இடங்களில் படங்களைப் (இமேஜூகளைப்) பயன்படுத்த வேண்டிவரும். அப்படி இடையில் செருகும் படங்கள் தெளிவற்றதாக இருந்தால், Edit bitmap-ல் சென்று கோரல்டிராவுடனேயே வரும் கோரல் போட்டோ பெயின்ட்டைப் பயன்படுத்தித் தான் அதைச் சீராக்க முடியும். அது சற்று சிரமமாக இருக்கும். நாம் நினைத்தது போல் editing செய்ய முடியாது (போட்டோஷாப் சூழலிலேயே நாம் வளர்ந்ததால்). கோரல் போட்டோ பெயின்டிற்கு பதில் போட்டோஷாப்பைக் கோரல் டிரா பிட்மேப் எடிட்டராகப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? இது போன்ற ஒரு எளிமையான வழி இருக்காதா?
உங்களைப் போல நானும் பல வருடங்களாக இது போன்ற ஒரு ஒருங்கிணைப்புக்கு ஏங்கியிருக்கிறேன். கடைசியாக ஒரு வழி கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இந்தப் பதிவுடன் வரும் பதிவிறக்கச் சுட்டியை அழுத்தி தேவையான கோப்புகளைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள். பிறகு கீழுள்ள வழிமுறைகளில் கோரல்டிராவையும் போட்டோஷாப்பையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
  • ஜிப் கோப்பில் இருக்கும் கோப்புகளை தேவையான இடத்தில் Extract செய்து கொள்ளுங்கள்.
  • C:\Program Files\Corel\CorelDRAW Graphics Suite 13\Draw\GMS சென்று Photoshop.gms என்று பதிவிறக்கக் கோப்பில் இருக்கும் கோப்பை மட்டும் Copy Paste செய்யுங்கள்.
  • கோரல் டிராவை ஓப்பன் செய்யுங்கள். மேலே Tools>> Visual Basic>> VBA Editor தேர்வு செய்யுங்கள். (Alt + F11).
  • GlobalMacros (Photoshop.gms) என்ற பதத்தைத் தேடுங்கள். 

  • அதில் Right Click செய்து Import File ஆப்சனைத் தேர்ந்தெடுங்கள்.

ஜிப் கோப்பில் இருந்து Extractசெய்த Folderல் ExImPhotoshop என்ற Folderல் இருக்கும் ExImPhotoshop.bas மற்றும் ctc_boost.bas என்ற கோப்புகளைத் தனித்தனியே இம்போர்ட் செய்யுங்கள்.


  •  அந்த GlobalMacros (Photoshop.gms) Highlight ஆகியிருக்கும்போதே Tools Menu சென்று References என்ற தேர்வை செய்யுங்கள்.

  • அதைத் தொடர்ந்து வரும் பெட்டியில் Adobe Photoshop (your version) Object Library என்ற தேர்வை டிக் செய்யுங்கள்

  • OK கொடுங்கள்.
  • Save கொடுங்கள்.
  • Alt + Q கொடுங்கள்.
  •  
இப்போது கோரல் டிராவுக்குள் Tools>> Options>> customization>> Commands செல்லுங்கள். வலது புறத்தில் Files என்று காட்டும் சுட்டியைக் கீழிறக்கி Macros தேர்ந்தெடுங்கள்.
டிராப்டவுனில் ExImPhotoshop.editinphotoshop மற்றும் ExImPhotoshop.updateaftereditinphotoshop என்ற இரு தேர்வுகள் இருக்கும்.
ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து Appearance சென்று ஜிப் கோப்பில் இருக்கும் Iconகளை import செய்து கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக இழுத்து வெளியே போடுங்கள்.
இனி நீங்கள் கோரல்டிராவில் பிட்மேப் எடிட்டராக போட்டோஷாப்பைப் பயன்படுத்தலாம்.
கடைசியாக எனது ஸ்கிரீனில் இப்படி இருந்தது.

கட்சி கலர் கொடுப்பது எப்படி? | கோரல்டிரா

எல்லா பேஜ் லேயவுட் (Page Layout) வேலைகளுக்கும் பயன்படுவது கோரல் டிரா (Coreldraw). அப்படி கோரலில் அடிக்கடி செய்ய வேண்டிவரும் வேலைதான் கட்சித் துண்டறிக்கைகள் (Bit Notices).
கட்சித் துண்டறிக்கைகளைத் தட்டெழுதி வடிவமைக்கும்போது. அதில் வரும் ஆட்களின் பெயர்களுக்கும், கட்சிப் பெயர்களுக்கும் அவர்களது கட்சிக் கொடியின் வண்ணத்திலேயே பெயரிட வேண்டிவரும்.அதை எப்படிச் செய்வது என்பதை நிறுவுவது இந்தப் பதிவின் நோக்கம்.
  1. தேவையான பெயர்களை முதலில் தட்டெழுதிக்கொள்ளுங்கள் (Type your needed Texts).
  2. F11 அழுத்தி பவுண்டெயின் பில் பேலட்டை (Fountain fill Pallete) ஓப்பன் செய்யுங்கள்.
  3. டைப்பில் லீனியர் (Linear) தேர்ந்தெடுத்து கலர் பிளண்டில் (Colour Blend) கஸ்டம் (Custom) தேர்ந்தெடுத்து தேவையான வண்ணங்களைச் சேர்க்கவும்.
  4. வண்ணங்களைச் சேர்த்து திருப்தியாக முடித்தவுடன். பிரீசெட்டில் நீங்கள் தயார் செய்த கட்சி வண்ண செட்டிங்கை சேமித்துக் கொள்ளுங்கள்.
  5. இப்படி சேமித்துக் கொண்டால் அடுத்தடுத்து வரும் பெயர்களுக்கு மீண்டும் நீங்கள் வண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பெயரைத் தேர்ந்தெடுத்து, F11 தேர்ந்தெடுத்து, பிரீசெட்டில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் போதும்.

கோரல்ட்ரா பயன்படுத்துவது எப்படி


 



உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ?

தமிழில் நீங்கள் இனையதளங்களில் டைப் செய்யவேண்டும் என்றால் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈகலப்பை என்ற மென்பொருளின் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.



ஈகலப்பையை டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்:

சுட்டி


இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் கம்ப்யூட்டரின் வலதுபக்கம் டைம் பக்கத்தில் கீழ் காண்பதுபோல் ஒரு ஐக்கான் வந்து இருக்கும். அந்த ஐக்கானை கிளிக் செய்து இரண்டாவதாக உள்ள "அ" UNICODETAMIL என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு இனைய தளத்தில் நீங்கள் விரும்பும் இடத்தில் தமிழில் டைப் செய்யலாம்.



இதில் முதலாவதாக உள்ள "அ" TSCIIANJAL என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் MSword, Ms Excel போன்றவற்றில் தமிழில் டைப் செய்யலாம். இதில் டைப் செய்யும்போது இதன் Font Type ஐ TSCU_paranar என்ற டைப்புக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

அதாவது

கம்ப்யூட்டரில் டைப் செய்ய: "அ" TSCUANJAL
நெட்டில் டைப் செய்ய :: "அ" UNICODETAMIL



விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்


விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில்  தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள்.


இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத இங்கு குறிப்பிட்ட  NHM Writer  மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.







 Download NHM Writer
http://software.nhm.in/products/writer 

NHM Writer ஐ இன்ஸ்டால் செய்த பிறகு டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிளிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்....

 
  



மேலும் ஆன் லைனில் நீங்கள் தமிழில் டைப் செய்து அதனை காப்பி செய்து தேவையான இடங்களில் பேஸ்ட் செய்துகொள்ள கூகிள் வழங்கும் இந்த ஆன்லைன் Tamil Writer இணைய தளத்தை பயன்படுத்துங்கள்....


  


இண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய

இணையம் என்பது தற்போதைய நிலையில் அத்தியாவசியமான ஒன்றாகும், இந்த நிலையில் இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய  அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்
க: இணைய இணைப்பு


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொண்டு, அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் மென்பொருளின்  (CIntRep.exe) மீது வலதுகிளிக் செய்து Run as administrator என்பதை தேர்வு செய்யவும் தற்போது அப்ளிகேஷன் ஒப்பன் ஆகும். அதில் உங்களுடைய Problem தை தேர்வு செய்து GO பட்டனை அழுத்தவும். தற்போது சிஸ்ட்டம் ரீஸ்ட்டார்ட் ஆகும்.

தற்போது இணையத்தில் உலவுங்கள் இணையமானது சரியாக வேலை செய்யும், நெட்வொர்க் தொடர்பான எந்தஒரு சிக்கல்கள் அனைதும் தற்போது சரியாகிவிடும். இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்











டிஜிட்டல் புகைப்படம் எந்த கேமிராவில் அல்லதுசெல்போனில் எடுக்கப்பட்டது என அறிவது எப்படி?
நீங்கள் போட்டோஷாப்பில் பணிபுரிகின்றவர் என்றால், பலதரப்பட்ட 
புகைப்படங்களை திறந்து பணிபுரிவீர்கள். ஆனால் அது எந்த கேமரா அல்லது செல்போனில் எடுக்கப்பட்டது என்பதை போட்டோஷாப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம். இக்கட்டுரைக்காக நான் வெவ்வேறு கேமரா & செல்போன்களில் எடுக்கப்பட்ட புகைப்ப‌டங்களை சோதித்துப்பார்த்தேன். போட்டோஷாப் சரியாகவே தகவல்களை சொன்னது.
மேலும் உங்களுக்கே தெரியாமல் உங்களை புகைப்படமெடுத்து அதை நீங்களே பார்க்க நேரிடும் போது இந்த புகைபடத்தை யார் எடுத்திருப்பார்கள் என்ற ஐயம் உங்களிடம் எழும்தானே?. போட்டோஷாப்பை பயன்படுத்தி அது எந்த கேமராவில்/செல்போனில் எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து உங்கள் வட்டாரத்தில் யார் அந்த கேமரா/செல்போன் பயன்படுத்துகின்றனர் என்பதை வைத்து நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
முதலில் புகைப்படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். பின்னர் File>File Info ஐ அழுத்தவும்

அதில் “Camera Data 1″ என்பதை தேர்வு செய்யவும். இப்போது வலது புறத்தில் புகைப்படம் எடுக்கப்பட்ட கேமரா/செல்போனின் Make மற்றும் மாடல் எண் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி & நேரம் போன்ற தகவல்களை காணலாம். பயன்படுத்தி பார்க்கவும்.
கீழேயுள்ள இரண்டு படத்தில் முதல் படம் என்னுடைய Panasonic டிஜிட்டல் கேமராவிலும் இரண்டாவது படமானது Nokiaசெல்போனில் எடுத்த படத்தை சோதித்தபோது கொடுத்த விபரங்களாகும்.
படம் 1 டிஜிட்டல் கேமரா:
படம் 2 நோக்கியா அலைபேசி:

கம்யூட்டருக்கு புதியவரா நீங்கள்




1. www.downloadsquad.com : இந்த தளம் சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.


2. www.gmailtips.com : கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன. இதனை நடத்துபவர் இன்னொரு தளத்தையும் நடத்துகிறார். அதன் முகவரி www.jimsltips.com . இதில் இமெயில் தகவல்களுடன் மொபைல் குறித்த தகவல்கள் மற்றும் டிப்ஸ்கள் உள்ளன.


3. www.thegreenbutton.com : விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன்குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.



4. www.stopbadware.org : இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.

5. www.techcrunch.com : இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.


6. www.techdirt.com தொழில் நுட்ப உலகின் தில்லுமுல்லுகள் மற்றும் முக்கிய செய்திகள், ஆய்வு முடிவுகள் ஆகியவை குறித்து சுருக்கமான தகவல்களைத் தருகிறது.



சில வேடிக்கையான துணுக்கு செய்திகளும் உண்டு. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த செய்திகளையும் தகவல்களையும் அனுப்பலாம்.


7. www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.


8.www.ilounge.com இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன.


9. www.photonhead. com டிஜிட்டல் கேமரா வாங்கிவிட்டீர்களா? அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் உங்களைக் குழப்புகிறதா? உடனே இந்த தளத்திற்குச் செல்லுங்கள். இங்கு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. எனவே அப்படி எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.


10. www.crazymeds.org : மனநிலை குறையுடையவர்களுக்கான தளம் இது. இங்கு இவ்வகையில் மருந்து உட்கொள்பவர்கள், சிகிச்சை எடுப்பவர்கள் தங்களது அனுபவத்தினைத் தருகின்றனர். சும்மா தகவலுக்காக இதனைப் பார்க்கலாம்.


11.www.goaskalice.com அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.


12. www.quotedb.com சிலர் எப்போது பேசினாலும் இது அவர் சொன்னது இவர் சொன்னது என்று பிரபலங்கள் கூறியதைச் சொல்வார்கள். சிலர் பொதுமேடைகளில் பேசச் செல்கையிலும் சில ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துகையிலும் அவர்களுக்குச் சில கொட்டேஷன்கள் கட்டாயம் வேண்டியதிருக்கும். அவர்களுக்கான தளம் இது. 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற கொட்டேஷன்கள் உள்ளன.


13. www.thefreedictionary.com ஆன் லைனில் உள்ள அருமையான டிக்ஷனரி. ஒரு சொல்லுக்குப் பொதுவான பொருள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம், கம்ப்யூட்டர், நிதிச் சந்தை தொடர்பான பொருளும் தரப்படும். இவற்றுடன் ஒத்த பொருள் தரும் சொற்கள். எதிர்ப்பதங்கள், பழமொழிகள், வழக்குச் சொற்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. இவற்றுடன் பல உதிரி பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் நியூஸ் அலர்ட், வார்த்தை விளையாட்டு எனப் பிரிவுகளும் உள்ளன.


14. www.webmath.com ஒரு பெயிண்டர் ஒரு அறையை எட்டு மணி நேரத்திலும் இன்னொருவர் 10 மணி நேரத்திலும் வெள்ளை அடித்தால் இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் வெள்ளை அடிப்பார்கள்? என்ன – இதெல்லாம் ஸ்கூலில் முடித்து வந்தாச்சே ! இப்போ எதுக்கு என்கிறீர்களா? இதைப் போன்ற கணக்குகள் மற்றும் அல்ஜிப்ரா, கால்குலஸ் எனப் பல பாடப்பிரிவுகளுக்குத் தீர்வுகளை இந்த தளம் தருகிறது.


15. www.worldwidewords.org ஆங்கிலச் சொற்கள் குறித்து தெரிந்து கொள்ள அருமையான ஓர் தளம். ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு அதன் பல பரிமாணங்களை இந்த தளம் எடுத்துச் சொல்கிறது.


எடுத்துக் காட்டாக எப்போதாவது ஒரு முறை என்ற பொருளில் “blue moon” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மது அருந்துபவர்கள் பிடிபட்டால் இந்த சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இது மேலும் சில பொருளையும் தரும். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருவதையும் இந்த சொல் மூலமே குறிக்கலாம். இது போல பல விளக்கங்கள்; பல எடுத்துக் காட்டுகள். உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிந்து வைத்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சொற்கள் பயன்பாடு குறித்த இமெயில் செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்.


மேற்குறித்த தளங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில் சில. இது போல பயனுள்ள தளங்களை வாசகர்கள் காண நேர்ந்தால் அவை குறித்து எங்களுக்குத் தகவல் அனுப்பலாம்.

அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கி
டைக்கும்