meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

ஞாயிறு, மே 06, 2012


                 HTML 5 தோற்றமும் வளர்சியும்



இணையப் பக்கங்களை வடிவமைக்க உதவும் மொழி HTML.  Hyper Text Markup Language என்பதன் சுருக்கமே HTML ஆகும். HTML பயனர் இடைமுகப்பு (user interface/UI) உருவாக்கத்தில் தவிர்க்க இயலாத ஓர் தொழில்நுட்பமாக ஆகிவிட்டது.  மார்க்கப் மொழிகள் புரோகிராமிங் கட்டளைகளை செயல்படுத்துபவை அல்ல, மாறாக ஒரு ஆவணத்தின் கட்டமைப்பை (document structure) விவரிப்பவை.  

மார்க்கப் மொழிகள் புரோகிராமிங் மொழிகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை http://tamilcpu.blogspot.in/2012/02/xml.html என்ற பதிவில் பார்க்கவும். HTML டேகுககளால் வடிவமைக்கப் பட்ட இணைய பக்கத்தை (web page) உலாவிகள் (browsers) பயனருக்கு தோற்றுவிக்கின்றன.


Inline image 2

Tim Berners Lee

1989ல் HTML உருவாக்கத்திற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் திரு. டிம் பேர்னர்ஸ் லீ. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் (European Organization for Nuclear Research, CERN) பணிபுரிந்த இவரே இணைய வலையின் (WWW - World Wide Web) தந்தையாக அழைக்கப்படுகிறார்.  HTMLலின் முதல் பதிப்பு 1991ல் வெளிவந்தது.  HTMLன் பதிப்புகளை வெளியிட்டதில் IETFம் (Internet Engineering Task Force), W3Cயும் (World Wide Web consortium) முக்கியமானவை.  தற்போது HTML5 பதிப்பின் வளர்ச்சியை நிர்வகித்து வரும் அமைப்பு (WHATWG (Web Hypertext Application Technology Working Group) ஆகும். WHATWG அமைப்பை உருவாக்கியது ஒபேரா, மொசில்லா மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள். HTML5க்கு முன்னர் இணைய தகுதரங்களை (web standards) நிர்ணயிக்கும் W3C அமைப்பு XHTML2.0வை முன்னிலைப் படுத்தி வந்தது.  இதற்கு பிரவுசர் தயாரிப்பாளர்களிடமும், டெவலப்பர்களிடமும் பெருமளவு ஆதரவு கிடைக்காதலால் பின்னர் HTML5க்கு கவனம் மாற்றப் பட்டது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து முன்னனி பிரவுசர்களும் HTML5வை ஆதரிக்கும். குரோம் (Google Chrome), ஃபயர்பாக்ஸ் (Mozilla Firefox) , சஃபாரி (Apple Safari), Opera, IE9 ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  HTML5ன் எளிமையே அதன் வெற்றிக்கு வித்திட்டது.  ஒரேயொரு வரியில் ஒரு விடீயோவை இணைத்துக் கொள்ள முடியும். இணையதளத்தின் முகப்பு பக்கத்தை அலங்கரித்த ஃப்ளாஷின் (Adobe Flash) இடத்தை HTML5 கைபற்றி வருகிறது.  

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோன், ஐபேட் சாதனங்கள் ஃப்ளாஷை ஒருபோதும் ஆதரிக்காதது என பகிரங்கமாத் தெரிவித்தார்.  மாறாக HTML5 தான் இணைய பயன்பாடுகளின் எதிர்காலமென தீர்க்க தரிசனமாய் சொல்லி விட்டு சென்று விட்டார். இதை ஃப்ளாஷின் சொந்தக் காரணான அடோப் நிறுவனமே ஒப்புக் கொண்டு சரணடைந்ததென்றால் HTML5ன் வெற்றியைப் புரிந்து கொள்ளுங்கள்.  அடோப் தன்னுடைய மற்றொரு மென்பொருளான ட்ரீம்வீவரில் (Dreamweaver CS5.5) HTML5வை முன்னிலைப் படுத்தி வருகிறது.

அன்றாடம் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறும் ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் இணையப் பக்கங்கள் HTML5ல் உருவாக்கப் பட்டவையே.  இந்தத் தளங்களின் view page source பார்த்தீகளேயானால் என்ற முதல்வரி இருப்பதைக் காணலாம்.  இது HTML5 பதிப்பு பயன்படுத்தப் பட்டிருப்பதைக் குறிக்கிறது.

HTML5ன் அசுர வளர்ச்சிக்கான மற்றொரு முக்கியமான காரணம் மொபைல் இணைய இணைப்புகள்.  மொபைல் இணைய பக்கங்களை உருவாக்க HTML5 மிகச்சிறந்த தீர்வாகும். 
  
எடுத்துக்காட்டிற்கு www.facebook.com கணினிகளுக்கு ஏற்பதாகவும்m.facebook.com  மொபைலுக்குஏற்பதாகவும் வடிவமைக்கப் பட்டிருப்பதைக் காணுங்கள்.  மொபைல் இணைய பக்கங்களுக்கு மட்டும் என்றில்லாமல், மொபைல் மென்பொருள் உருவாக்கத்திலும் HTML5 சக்கை போடு போடுகிறது.  ஐபோனுக்கு அப்ஜெக்டிவ் சி, ஆண்ட்ராய்டுக்கு ஜாவா, விண்டோஸ் மொபைலுக்கு சி#.நெட் என வெவ்வேறு புரோகிராமிங் மொழியை பயன்படுத்துவதைக் காட்டிலும், இவ்வனைத்து மொபைல்களிலும் இயங்கும் HTML5, ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் CSS மூலம் மொபைல் மென்பொருட்களை உருவாக்க, மென்பொருள் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.தாமதிக்காமல் HTML5 கற்றுக் கொள்ளுங்கள்.  நீங்கள் படிக்கிறீர்களோ இல்லையோ, உங்கள் அன்றாட இணைய உலகில் HTML5 பின்னிப் பிணைந்திருப்பதை உணர்ந்திருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக