meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

ஞாயிறு, மே 06, 2012

                        PYTHON-- புரோக்கிராம் மொழி



பைத்தான் ஒரு அருமையான புரோகிராமிங் மொழி என்பதை படித்துத் தெரிந்து கொண்டதை விட அதை பயன்படுத்திப் பார்க்கையில் அது எவ்வளவு உண்மை என விளங்கியது.  பைத்தான் ஒரு ஓப்பன் சோர்ஸ் நிரல் மொழியாகும்.  எனவே உலகத் தரமிக்க இந்த மொழியை எந்தக் கட்டணமும் இன்றியே பயன்படுத்தலாம்.  வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்தில் கூட இலவசமாய்ப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  பைத்தான் எந்தஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கும் சொந்தமானதல்ல.  பைத்தான் மென்பொருள் நிறுவனம் (Python Software Foundation) இதன் உரிமத்தை நிர்வகித்து வருகிறது.

பைத்தான் மொழி கொண்டு பல்வேறு பயன்பாட்டுக்கான மென்பொருட்களை உருவாக்க முடியும்.  பைத்தானின் கட்டளைகள் மிக மிக எளிமையானவை.  பிறர் எழுதிய புரோகிராம்களையும் பார்த்தே விளங்கிக் கொள்ள முடியும்.  இது ஒரு (Object Oriented Programming) பொருள் நோக்கு நிரலாக்க மொழி. ஆகவே எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்களையும் சிறப்பாக கையாள இயலும்.  பைத்தானுடன் தன்னியல்பாகவே இணைந்து வரும் தொகுப்பு நிரல்கள் (standard libraries) ஒரு புரொகிராமரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது.  இதோடு மட்டுமல்லாமல் third party libraries என்றழைக்கப்படும் இதர புரோகிராம்களுக்கும் குறைவில்லை.  விண்டோஸ், லினக்ஸ், யுனிக்ஸ், மேக் os என அனைத்து இயக்கச் சூழல்களிலும் பைத்தான் திறம்பட இயங்கும்.  



சி, சி++, சி#, ஜாவா, பி.எச்.பி, பேர்ல் போன்ற அனைத்து நிரல் மொழிகளுடனும் ஒத்திசைவாக இயங்கும்.


மொபைல் போன்களில் கூட பைத்தான் இயங்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.   


பைத்தானில் எழுதப்பட்ட இணையதளங்கள், டெஸ்க்டாப் மென்பொருட்கள், விளையாட்டுகள், மொபைல் அப்ளிகேஷன்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.



குறிப்பாக அதிகவேகம் தேவைப்படும் கிராபிக்ஸ் மென்பொருட்களிலும் பைத்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பைத்தானை புரோகிராமிங் மொழியாக மட்டும் இல்லாமல், ஒரு மென்பொருளின் கட்டளைகளை இயக்கும் ஸ்கிரிப்டிங் மொழியாகவும் பயன்படுத்தப் படுகிறது.  Gimp, Blender, 3D Studio Max, Maya, Autocad போன்ற அனைத்து பிரபல கிராபிக்ஸ் மென்பொருட்களிலும் பைத்தான் கொண்டு ஸ்கிரிப்ட்கள் (மேக்ரோஸ் போல) எழுத முடியும். 




பைத்தானை அதிக அளவில் பயன்படுத்தும் நிறுவனங்களில் கூகிளை விட ஒரு சிறந்த எடுத்துகாட்டை தந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை. நம் கணினி பயன்பாட்டின் அங்கமாகிவிட்ட கூகிள் தேடுபொறி (Google Search engine), கூகிள் வரைபடங்கள் (Google Maps)கூகிள் குழுமம் (Google groups), வீடியோ பகிர்வு தளமான Youtube அனைத்தும் பைத்தான் மொழியில் உருவாக்கப் பட்டவையே.  நாசா (NASA), யாஹூ (Yahoo) போன்ற உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களிலும் பைத்தான் பயன்படுத்தப் படுகிறது.
                                     
விசுவல் பேசிக் போன்ற காலம் கடந்த புரொகிராமிங் மொழிகளை பாடத்திட்டதிலிருந்து நீக்கிவிட்டு, நவீன காலத்திற்கேற்ப திறமூல (open source) தீர்வான பைத்தான் மொழியை பாடத்திட்டதில் சேர்த்திட வேண்டும்.  கல்லூரி ப்ராஜெக்ட்களை பைத்தான் போன்ற மொழிகளில் செய்ய மாணவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.  கணினித் துறையில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் பைத்தான் படிக்கும் நிலை வரும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

இம்மொழியை சுவைக்க நினைக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக