meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், நவம்பர் 08, 2011

Facebook ல் virus ஜாக்கிரதை!!!!!!!!!!!!!!!

படத்தில் காட்டப்பட்டது போன்று ஏதாவது இணைப்புக்கள்
வந்தால் தயவு செய்து click செய்யாதீர்கள் அது உங்களை J ஐ அழுத்த சொல்லும். பின்பு address barல் ctrl + V ஐ அழுத்த சொல்லும் பிறகு என்ன உங்களுடைய மானம் எல்லாருடைய profileலிலும் கப்பல் ஏறும் .
ஜில் படம் பார்க்க ஆசைப்ட்டு உங்களுடைய மானத்தை
இழக்காதீர்கள் நண்பர்களே!!!!!

இதை share செய்து உங்கள் நண்பர்களை காப்பாற்றுங்கள்.....


Read more: http://kingrobba.blogspot.com/2011/11/facebook-virus-11111.html#ixzz1dC0amiEz

கம்யூட்டர் குறிப்புக்கள்

கம்யூட்டர் குறிப்புகள்
ரன் விண்டோவில் இன்டர்நெட்: இன்டர்நெட் தளம் ஒன்றை ரன் விண்டோ விலிருந்து வாங்கலாம். அதிசயமாயிருக்கா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்காமல் ஸ்டார்ட் அழுத்தி வரும் ரன் பெட்டியில்தளப் பெயரை டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் பிரவுசர் திறக்கப்பட்டு அதில் அந்த முகவரி காட்டப்பட்டு முகவரிக்கான தளம் தேடப்பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக www.download.com என்ற தளம் வேண்டுமாயின் ரன் பெட்டியில் அப்படியே டைப் செய்திடவும். பின் என்டர் தட்ட இணைய தளம் உங்களுக்குக் கிடைக்கும்.
விடுபட்ட விண்டோஸ் போட்டோ காலரி: விண்டோஸ் விஸ்டா பதிப்பில், பயனாளர்கள் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப் பட்டதால், அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம்தேவையற்ற வகையில் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க,மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் போட்டோ காலரி (விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery)). இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர். இதனை http://download.live. com/photogallery என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் கைவசப்படுத்த: விண்டோஸ் 7 சிஸ்டம் எந்தவித பிரச்னையும் இன்றி இயங்க சிஸ்ட்ராக் டூல்ஸ் (Systerac Tools)என்னும் புரோகிராம் உதவுகிறது. சிஸ்ட்ராக் டூல்ஸ் 16 டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் இயக்கம், தோற்றம், மெமரி பயன்பாடு,சிஸ்டம் கிளீன், பைல் ஷ்ரெடிங் எனப் பல வசதிகளைத் தரும் டூல்ஸ்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த புரோகிராமின் முகப்பும் யூசர் இன்டர்பேஸும் அழகாகவும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. இதனை http:// systerac.com/seven/overview.htm என்ற முகவரியில் பெறலாம்.
விண்டோஸ் இயங்கிய நேரம்: கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்றபுரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். “Work”, “School”, “Fun”எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினைhttp://code.google.com /p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.


இணையத்தின் வேகத்தை அதிகரிக்க


இணையத்தின் வேகத்தை அதிரிக்க நிறைய வழிமுறைகள் நம் கணணியிலேயே இருக்கின்றது. இருந்தாலும் நாம் சில எளிய வழிமுறைகளை செய்வதன் மூலம் இணைய வேகத்தை அதிகரிக்கலாம்.
நீங்கள் பயன்படுத்தும் உலாவி பயர்பொக்ஸ் என்றால்,
1. முதலில் பயர்பொக்ஸை திறக்கவும். அதன் address bar இல் about:config என்று டைப் செய்து enter பட்டனை தட்டவும்.
2. network.http.pipelining என்றிருப்பதை double கிளிக் செய்து True என்று செட் பண்ணவும்.
3. network.http.pipelining.maxrequests என்றிருப்பதை double கிளிக் செய்து 4 என்றிருப்பதை 10 என்று மாற்றவும்.
4. இறுதியாக வலது கிளிக் செய்து create new –>integer தேர்ந்தெடுக்கவும். பின்பு “nglayout.initialpaint.delay” என்று டைப் செய்து அதன் மதிப்பு தொகுப்பு “0″ என்று செட் பண்ணவும். (இதுவே பெறும் தகவல்களை செயல்படுத்தும் முன் உலாவி காத்திருக்கும் நேர அளவு)
நீங்கள் பயன்படுத்தும் உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்றால்,
1. Start –> Run கிளிக் செய்து. regedit என்று டைப் செய்யவும்.
2. HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Internet Settings ஐ தேர்ந்தேடுக்கவும்.
3. Default value இல் இருந்து 10 என்று அதிகரிக்கவும்.

உங்கள் புதிய படைப்புகளை வெளியிட


புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவும் இணையதளம்

சுய பதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் (www.pubslush.com)  இணையதளம் உதயமாகியுள்ளது.
புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தக த்தை (தாங்களே) வெளியிட்டு கொ ள்ள உதவுவது இதன் நோக்கம்.
அதாவது பதிப்பகங்களின் தயவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர் களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்வது. வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து கொள்ள வேண்டும். காரணம் அது தான் இந்த (www.pubslush.com) தளத்தின் சிறப்பம்சம்.
ஆம்,வாசகர்களே ஒன்றாக சேர்ந்து புத்தகம் வெளியாக வழி செய்ய இந்த(www.pubslush.com) தளம் வழி செய்கிறது.அந்த வகையில் பதிப்புலகிற்கான கிக் ஸ்டா ரட்டர் என்று இந்த தள த்தை வர்ணிக்கலாம்.
கிக் ஸ்டார்ட்டர் புதிய திட்டங்களுக்கான நிதியை இணைய வாசி களிடம் இருந்து திர ட்ட கைகொடுக்கிறதோ அதே போல இந்த தளம் எழுத்தாளர்கள் தாங்கள் வெளியிட விரும்பும் புத்தகத்தி ற்கான நிதியை அதனை படிக்க விரும்பும் வாசகர்களிடம் இ ருந்தே திரட்டி கொள்ள உதவு கிறது.
கிக்ஸ்டார்ட்டரில் நிதி கோருபவர் தனது திட்டத்தை விவரித்து அதனை ஆதரிக்க கேட்பது போல இ தில் எழுத்தாளர்கள் தாங்கள் எழு த உள்ள புத்தகம் பற்றி குறிப்பி ட்டு ஆதரவு கோர வேண்டும்.
ஆனால் ஒன்று கிக்ஸ்டார்ட்டரில் புதிய திட்டங்கள் பற்றி சற்றே விரிவாகவே குறிப்பிடலாம்.வீடியோ இணைப்புகளையும் சேர்த்து கொள்ளலாம்.தனி மினி இணையதளம் போல ஒவ்வொரு திட்ட த்துக்கும் ஒரு தனி பக்கமே ஒதுக்கப்படும்.
இதிலோ முழு கதையை எல்லாம் சொல்ல முடியாது.புத்தகத்தின்நோக்கத்தை குறிப்பிட்டு மாதி ரிக்கு பத்து பக்கங்களை சமர் பிக்கலாம். புத்தக சுருக்கத்துட ம் இந்த விவரங்கள் எழுத்தா ளரின் பக்கத்தில் இடம் பெறும் . வாசக்ர்கள் அதனி படித்து பா ர்க்கும் போது பிடித்துபோனால் முழு புத்தகம் எழுத தங்கள் ஆதர வை அளிக்கலாம். இப்படி போதுமான வாசக்ர்கள் ஒரு புத் தகத்திற் காக சேரும்போது அவர்கள் நிதி பங்களிப்போடு புத்தகம் வெளி யாகும்.
போதுமான வாசகர் சேரும் வரை நிதி அளிக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட பதிப்பகங்களின் முன் வெளியீட்டு திட்டம் போல தான் , ஆனால் இணையதன்மை கொண்டது.முன் வெளியீட்டு திட்டத்தி ல் வாசகர்கள் ஒரு புத்தக்த்தை முன் கூட் டியே வாங்க ஒப்பு கொள்கின்றனர். மற்ற படி அந்த புத்தக உரு வாக்கத்தில் அவர்க ளுக்கு எந்த பங்கும் கிடையாது.
இந்த தளத்திலோ வாசகர்கள் தான் புத்தகத்தையே உருவாக்குகி ன்றனர். அவர்களுக்கு பிடித்தால் தான் புத்தகம் வெளிவரும்.
அதோடு புதிய எழுத்தாளரை இனம் கண்டு ஆதரித்த திருப்தியை யும் பெறலாம்.அந்த வகையில் பார்த்தால் வாசகர்கள் தான் பதிப் பாசிரியர் போல!புத்தக சுருக்கத்தையும் மாதிரியையும் படித்து பா ர்த்து அதன் தரத்தை தீர்மானித்து ஆதரிக்கலாம்.
ஒரு புத்தக கருத்து பிடித்திருந் தால் தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்து ஆதரிக்க கோரலாம். இந்த வகையில் பார்த்தால் இது புத்தக உருவா க்கத்திற்கான சமூக வலைப் பின்னல் தளம் போல செயல் படுவதாக வைத்து கொள்ள லாம்.
வாசகர்கள் தங்களுக்கு பிடித்த மான பிரிவில் எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து பார்த்து எந்த எழுத்தாளரை ஆதரிக்கலாம் என முடிவு செய்து கொள்ளலாம்.
பதிப்பகம் முன்னிறுத்தும் எழுத்தாளரின் புத்தகத்தை படிப்பதை காட்டிலும் வாசகர்கள் தாங்களே புதிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவது வாசகர் கைகளில் பதிப்பதிகாரத்தை கொண்டு வந்த து  போல தானே!.
பின்னளில் பிரபல எழுத்தாளர்க ளாக கோலோச்சியவரக்ள் கூட ஆர ம்பத்தில் பதிப்பிக்கும் வாய்ப்பை பெற திண்டாடிய கதைகள் ஏராள ம். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வந்திருக்கிறது இந்த புது மை பதிப்பு தளம். பதிப்பக ஜன நா யகம் மலரட்டும்.வாகர்கள் எழுத்து லக மன்னர்களை உருவாக்கலாம் வாருங்கள்!

நமது உடல் எவ்வாறு இயங்குகிறது


மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் அனிமேஷன்கள் தளம்

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமா னதாகிவிட்டது. இணையதளங்களின் எண்ணி க்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.  மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம்போல் செயல்பட்டு கொண்டிருக் கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிற து என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம்படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும்பயனுள்ளதாகவும், இலகுவாக புரிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இந்தmedtropolis.comதளம் ஆங்கிலம் ஸ்பானிஷ் போன் ற இரு மொழிகளில் காணப்ப டு கிறது. இந்த லிங்கில்கிளி க் செய்து வரும் விண்டோவி ல் முதலில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மொழியை தேர்வு செய்தவுட ன் அடுத்து நீங்கள் எந்த உடல் உறுப்பை பற்றி தெரிந்து கொ ள்ள வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப் பொழுது நீங் கள் தேர்வு செய்த உறுப்பின் அனிமேசனும் அந்த உறுப்பின் செயல் படும் விதமும் கொடுத்து இருப்பார்கள்.
இதில் நீங்கள் கர்சரை ஒவ்வொரு பகுதியாக நகர்த்தினால் அந்த பாகத் தின் பெயரும் அது என்ன வேலை யை மேற்கொள்கிறது என்ற விவரங் களும் உங்களுக்கு காட்டப்படும். 
இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக தேர்வு செய்து நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக அறி ந்து கொள்ளலாம். பெற்றோர்கள் உங் கள் பிள்ளைகளுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கியமான தமிழக இனையதள முகவரிகள்


இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி http://www.tneb.in/ 01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி http://www.elections.tn.gov.in/eroll 02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி http://www.rtiindia.org/forum/content/ 03. இந்திய அரசின் இணையதள  முகவரி http://india.gov.in/ 04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி http://www.tn.gov.in/ 05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி http://supremecourtofindia.nic.in/ 06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி http://www.tnpolice.gov.in/ 07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி http://www.hcmadras.tn.nic.in/ [...]

விண்வெளி அதிசயங்களை கண் முன் காண


விண்வெளி அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtube Space Lab (Youtubeன் புதிய வசதி) – வீடியோ

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிக ளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனை களை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளி யில் ஆராய்ச்சி கூடம் அமை த்து பல அறிய தகவல்க ளையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந் ததே. விண்ணில் நடப்பது என்ன கிரகங்கள் எப்படி இருக்கி ன்றன என்ன ஆச்சரியங்கள் நடக்கிறது இவை அனைத்தை யும் நம் கண் முன் னே நிறுத்தும் முயற்சியாக யூடி யுப் நிறுவனம் தற்பொழுது Space Lab என்ற புதிய வசதியை மக்க ளுக்கு வழ ங்கி உள்ளது.
இந்த தளத்தில் விண்வெளியின் நடக்கும் பல அதிசய செயல் களை வீடியோவாக வாசகர்களு க்கு வழங்கு கிறது யூடியுப் தளம். மற்றும் 18 வயதுக்கு உட்பட் டோருக்கு போட்டிகளை வைத்து இலவசமாக அமெரிக்கா வுக்கு செல்லும் வாய்ப்பையும் வழங்கு கிறது. 
நம் பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல என்னென்ன மாற்றங்கள் நிகழ் கிறது என அறிய கீழே உள்ள வீடியோ வை பாருங்கள்.
விண்வெளித்துறை பற்றி படிக்கும் மாண வர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசா தம். 
உங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையு ங்கள் பயனுள்ளதாக இருக்கும். 
இந்த தளத்திற்கு செல்ல – Youtube Space Lab