meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> உங்கள் புதிய படைப்புகளை வெளியிட | computer from village computer from village: உங்கள் புதிய படைப்புகளை வெளியிட google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், நவம்பர் 08, 2011

உங்கள் புதிய படைப்புகளை வெளியிட


புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவும் இணையதளம்

சுய பதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் (www.pubslush.com)  இணையதளம் உதயமாகியுள்ளது.
புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தக த்தை (தாங்களே) வெளியிட்டு கொ ள்ள உதவுவது இதன் நோக்கம்.
அதாவது பதிப்பகங்களின் தயவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர் களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்வது. வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து கொள்ள வேண்டும். காரணம் அது தான் இந்த (www.pubslush.com) தளத்தின் சிறப்பம்சம்.
ஆம்,வாசகர்களே ஒன்றாக சேர்ந்து புத்தகம் வெளியாக வழி செய்ய இந்த(www.pubslush.com) தளம் வழி செய்கிறது.அந்த வகையில் பதிப்புலகிற்கான கிக் ஸ்டா ரட்டர் என்று இந்த தள த்தை வர்ணிக்கலாம்.
கிக் ஸ்டார்ட்டர் புதிய திட்டங்களுக்கான நிதியை இணைய வாசி களிடம் இருந்து திர ட்ட கைகொடுக்கிறதோ அதே போல இந்த தளம் எழுத்தாளர்கள் தாங்கள் வெளியிட விரும்பும் புத்தகத்தி ற்கான நிதியை அதனை படிக்க விரும்பும் வாசகர்களிடம் இ ருந்தே திரட்டி கொள்ள உதவு கிறது.
கிக்ஸ்டார்ட்டரில் நிதி கோருபவர் தனது திட்டத்தை விவரித்து அதனை ஆதரிக்க கேட்பது போல இ தில் எழுத்தாளர்கள் தாங்கள் எழு த உள்ள புத்தகம் பற்றி குறிப்பி ட்டு ஆதரவு கோர வேண்டும்.
ஆனால் ஒன்று கிக்ஸ்டார்ட்டரில் புதிய திட்டங்கள் பற்றி சற்றே விரிவாகவே குறிப்பிடலாம்.வீடியோ இணைப்புகளையும் சேர்த்து கொள்ளலாம்.தனி மினி இணையதளம் போல ஒவ்வொரு திட்ட த்துக்கும் ஒரு தனி பக்கமே ஒதுக்கப்படும்.
இதிலோ முழு கதையை எல்லாம் சொல்ல முடியாது.புத்தகத்தின்நோக்கத்தை குறிப்பிட்டு மாதி ரிக்கு பத்து பக்கங்களை சமர் பிக்கலாம். புத்தக சுருக்கத்துட ம் இந்த விவரங்கள் எழுத்தா ளரின் பக்கத்தில் இடம் பெறும் . வாசக்ர்கள் அதனி படித்து பா ர்க்கும் போது பிடித்துபோனால் முழு புத்தகம் எழுத தங்கள் ஆதர வை அளிக்கலாம். இப்படி போதுமான வாசக்ர்கள் ஒரு புத் தகத்திற் காக சேரும்போது அவர்கள் நிதி பங்களிப்போடு புத்தகம் வெளி யாகும்.
போதுமான வாசகர் சேரும் வரை நிதி அளிக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட பதிப்பகங்களின் முன் வெளியீட்டு திட்டம் போல தான் , ஆனால் இணையதன்மை கொண்டது.முன் வெளியீட்டு திட்டத்தி ல் வாசகர்கள் ஒரு புத்தக்த்தை முன் கூட் டியே வாங்க ஒப்பு கொள்கின்றனர். மற்ற படி அந்த புத்தக உரு வாக்கத்தில் அவர்க ளுக்கு எந்த பங்கும் கிடையாது.
இந்த தளத்திலோ வாசகர்கள் தான் புத்தகத்தையே உருவாக்குகி ன்றனர். அவர்களுக்கு பிடித்தால் தான் புத்தகம் வெளிவரும்.
அதோடு புதிய எழுத்தாளரை இனம் கண்டு ஆதரித்த திருப்தியை யும் பெறலாம்.அந்த வகையில் பார்த்தால் வாசகர்கள் தான் பதிப் பாசிரியர் போல!புத்தக சுருக்கத்தையும் மாதிரியையும் படித்து பா ர்த்து அதன் தரத்தை தீர்மானித்து ஆதரிக்கலாம்.
ஒரு புத்தக கருத்து பிடித்திருந் தால் தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்து ஆதரிக்க கோரலாம். இந்த வகையில் பார்த்தால் இது புத்தக உருவா க்கத்திற்கான சமூக வலைப் பின்னல் தளம் போல செயல் படுவதாக வைத்து கொள்ள லாம்.
வாசகர்கள் தங்களுக்கு பிடித்த மான பிரிவில் எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து பார்த்து எந்த எழுத்தாளரை ஆதரிக்கலாம் என முடிவு செய்து கொள்ளலாம்.
பதிப்பகம் முன்னிறுத்தும் எழுத்தாளரின் புத்தகத்தை படிப்பதை காட்டிலும் வாசகர்கள் தாங்களே புதிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவது வாசகர் கைகளில் பதிப்பதிகாரத்தை கொண்டு வந்த து  போல தானே!.
பின்னளில் பிரபல எழுத்தார்க ளாக கோலோச்சியவரக்ள் கூட ஆர ம்பத்தில் பதிப்பிக்கும் வாய்ப்பை பெற திண்டாடிய கதைகள் ஏராள ம். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வந்திருக்கிறது இந்த புது மை பதிப்பு தளம். பதிப்பக ஜன நா யகம் மலரட்டும்.வாகர்கள் எழுத்து லக மன்னர்களை உருவாக்கலாம் வாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக