இரத்த தானம் வேண்டுவொருக்கு உடனடியாக இரத்தம் கொடுக்க உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.friendstosupport.org
இத்தளத்திற்கு சென்று எந்த வகையான Blood Group தேவை என்பதையும் , இந்தியாவில் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் , எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உங்கள் மாவட்டத்தில் இரத்தம் கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு இரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம். 5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு இரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான். இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து கொள்ளலாம். எங்கோ கிராமத்தில் வாழும் ஒரு குழந்தைக்கு அரிய வகை இரத்தம் தேவைப்படும் அங்கும் இங்கும் ஓடி சென்று தேடி கிடைக்காமல் யாரிடம் தொடர்பு கொண்டால் கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கும் நம்மவர்களுக்கு இத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள் ஒருவரின் வாழ்வை நாம் காப்பாற்றியது போல் உணர்வு கண்டிப்பாக இருக்கும். இப்பதிவை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக