இலக்கு உள்ள மனிதன் எதை நினைத்தாலும் அதை எளிதாக அடைவான் பலருக்கு இலக்கை நிர்ணயிப்பதில் உள்ள கடினத்தை களைவதற்காக உதவி செய்ய ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.101-smart-goals.com
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளவும் அடுத்து நாம் எளிதாக இலக்குகளை உருவாக்க ஆரம்பிக்கலாம், நாளை என்ன செய்யப்போகிறீர்கள் என்பதில் தொடங்கி அடுத்த மாதத்திற்குள் நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்று தெளிவாக பட்டியலிட்டு காட்டுகிறது. ஒவ்வொரு இலக்கையும் வகைவாரியாக தேதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு இலக்குக்கும் நாம் செய்த முயற்சி என்ன தற்போது வரை என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று அத்தனையும் குறித்து வைக்கலாம், இலக்கை அடையும் வரை உங்களை விடாமல் துரத்தும் இந்தத்தளம் வாழ்க்கையில் நாம் எளிதாக வெற்றி பெற உதவும்.ஆன்லைன் மூலம் இலக்குகளை வடிவமைக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக