செல்போனில் தமிழில் உடனடி செய்திகள்
'ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது ' என்பது பெரும் பான்மையாக செய்தி பற்றி வரை விலக்கணப்படுத்துகின்றது. இச்செய்தியை கையடக்க தொலைபேசியில் பெற பல வழிகள் உள்ளன. சில தொலைதொடர்பு வழங்குனர்கள் மாதம் அல்லது நாள் அடிப்படையில் கட்டணம் அறவிட்டு வழங்குகிறார்கள். அதுவும் குறித்த செய்தி நிறுவனத்தினை சார்ந்தது. அத்துடன் ஆங்கிலத்தில் அல்லது தமிழை தமிங்கிலத்தில் வழங்குகிறார்கள். உலக செய்திகளை தமிழிலேயே படிப்பது எவ்வாறு?
இதற்கு என Newshunt என்ற தொலைபேசிக்கான மென்பொருள் உண்டு. இந்தியாவை சேர்ந்த eternoinfotech நிறுவனமே இச்சேவையை வழங்குகிறது. இதற்கு உங்களிடம் JAVA இயங்கு தளம் கொண்ட கையடக்க தொலைபேசி மட்டுமே போதும். அத்துடன் இணைய இணைப்பும் அவசியம் (GPRS / EGPRS / WIFI). மெதுவானது என்றாலும் பரவாய் இல்லை.
வார இதழ்கள், சினிமா, மாவட்டங்கள் என பல தொகுதியாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.
வார இதழ்கள், சினிமா, மாவட்டங்கள் என பல தொகுதியாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இதன் சிறப்பு என்னவென்றால் உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் font நிறுவப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தலைப்பைச் சேருங்கள் |
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது. பாவனை கூட இலவசம் தான். அவர்கள் விளம்பரம் மூலம் சம்பாதிக்கிறார்கள் . உங்களுக்கு GPRS/ 3G/ Wifi / EGPRS கட்டணங்கள் மட்டுமே செலவு. அதுவும் சொற்ப சதங்களே.
மென்பொருளின் சிறப்புக்கள்:
More than 50 leading Indian + world wide News Papers
தரவிறக்க முறைகள்:
இந்தியர்கள்:
- எந்த இணைப்பில் இருந்தும் ' newshunt ' என்று 57333 க்கு அனுப்புங்கள்
- '08039193998' க்கு ஒரு மிஸ்டுகால் அடிங்க , உடனடியாக இணைப்பு SMS அனுப்பப்படும்
- ஏனைய முறைகளுக்கு http://newshunt.com/download செல்லுங்கள்
உலகத்தவர்கள்:
- Visit http://hunt.newshunt.com from your mobile browser நேரடி தரவிறக்கம்
- Getjarஇல் பெறhttp://www.getjar.com/mobile/30299/newshunt-for-google-nexus-one/ செல்லுங்கள் கணணி ஊடான தரவிறக்கம்
- ovi storeஇல் பெறhttp://store.ovi.com/content/27867# செல்லுங்கள் கணணி ஊடான தரவிறக்கம்
குறிப்பிட்ட மென்பொருளை தொலைபேசியில் பயன்படுத்தும் நிலையை நாம் இங்கு ஏற்படுத்தி உள்ளோம். தரவிறக்க முதல் பயன்படுத்தி பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக