meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

புதன், மே 02, 2012

 உங்கள் பைலில் விரும்பும் இடத்தில் ஓலி  

                              (இசை) அமைக்க



http://www.soungle.com


பிரசன்டேஷன் பைல் ஒன்று தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தில், நீங்கள் விரும்பும் ஒலி அல்லது ஓசை ஒன்றைத் தர விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்?

நான் ஒருமுறை சிறுவர்களுக்கான பிரசன்டேஷன் பைலில் கண்டாமணி சத்தம் (Gong) கொடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணி, குறிப்பிட்ட அந்த ஓசைக்கான பைல் எங்கு கிடைக்கும் என்று தேடினேன்.


இத்தகைய விருப்பங்களை நிறைவேற்றவே Soungle என்று ஒரு வெப்சைட் உள்ளது. காடு என்பதற்கான ஆங்கிலச் சொல்லானJungle மற்றும் ஒலி என்பதற்கான சொல் Sound என இரண்டையும் சேர்த்து இந்த பெயரைத் தந்திருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

இந்த தளம் சென்று நான் விரும்பும் ஒலிக்காக Gong என்று டைப் செய்தேன். அந்த தளத்தில் 27 வகையான கண்டாமணி சத்தம் கிடைத்தது.

பக்கத்திலிருந்த ஒரு சிறுவன் கிளாரினட் ஒலி எப்படி இருக்கும் என்று காட்டுமாறு கூறினான். சந்தேகத்துடனேயே Clarinet என டைப் செய்து என்டர் அழுத்த 12 வகையான கிளாரினட் ஒலி கிடைத்தது. ஒற்றை ஒலி முதல் பல சேர்ந்தது வரையிலான ஒலித் தொகுப்பு வரை தரப்பட்டது.

இதனை எப்படி நாம் பயன்படுத்துவது? உங்களுக்குப் பிடித்த ஒலியைத் தேடிக் கண்டறிந்தவுடன், அந்த சாம்பிள் ஒலி அருகே டவுண்லோட் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசரின் அடிப்படையில் சேவ் அல்லது சேவ் அஸ் கிடைக்கும். பின் இந்த பைலை நீங்கள் விரும்பும் இடத்தில் பயன்படுத்தலாம்.

ஒரே வாத்தியத்தின் பல்வேறு ஒலிகளை (Notes) சேர்த்துப் பெற்றுப் பயன்படுத்துவதும் நன்றாக இருந்தது. இதிலிருந்து ஓசைக்கான பைலை எடுத்துப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, ஒருமுறை இந்த தளம் சென்று பார்த்துவிடுங்கள். இதற்கான முகவரி    http://www.soungle.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக