meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

புதன், மே 02, 2012

ஆங்கிலத்தை வீடியோவுடன் சொல்லி 

                 தினம் தோறும் கொடுக்கும் தளம்


பள்ளி, கல்லூரி விடுமுறை காலம் தொடங்கிவிட்டது நம் குழந்தைகளும்
வெளிநாட்டினர் போல் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணம்
அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கும், இவர்கள் மட்டுமல்லாது
தனியார் அலுவலகங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தொடர்ச்சியாக
ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அவர்களுக்கு
தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது  இப்படி ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை
அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://funeasyenglish.com
ஆங்கிலத்தை சொல்லி கொடுக்க பல இணையதளங்கள் இருக்கிறதே
இத்தளத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும்
அனைவருக்கும் பதிலாக இத்தளம் ஆங்கிலத்தை வேடிக்கையாக
தினமும் வீடியோவுடன் சொல்லி நம்மை அசத்துகிறது. இந்த
வீடியோக்களை தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தாலே
போதும் சில வாரங்களில் நாமும் ஆங்கிலத்தை எந்தப்பிழையும்
எந்ததடையும் இல்லாமல் தொடர்ச்சியாக பேசலாம். ஒவ்வொரு
ஆங்கில வார்த்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில்
தொடங்கி ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட வீடியோகோப்புகளை
காட்டி நம் ஆங்கில அறிவை வளர்க்கிறது. ஆங்கிலம் கற்றுகொள்ள
விரும்பும் நபர்கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச விரும்பும்
அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக