meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012


படங்களில் உள்ள வாட்டர்மார்க்கினை நீக்க

படங்களை மெறுகேற்றவும், படங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கவும். அனைவரும் கையாளும் மென்பொருள் போட்டோசாப் ஆகும். இதில் அனைத்து போட்டோ தொடர்பான வேலைகளையும் விரைந்து செய்ய முடியும். இந்த மென்பொருளின் மூலம் ஒரு சில நேரங்களில் சிறிய வேலைகளை கூட செய்ய அதிக நேரம் ஆகும். உதாரணமாக டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கும் படங்களில் தேதி இருக்கும். இதனை படத்திலிருந்து நீக்க வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். இதுபோன்று உள்ள வாட்டர்மார்க்குகளையும், தேவையற்ற படங்களையும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது. அதுதான் Inpaint என்னும் மென்பொருள் ஆகும். அது தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளுக்கான லைசன்ஸ் கீயை இலவசமாக பெற http://www.loadstreet.de/front_content.php?idart=3512

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் ட்ரான்ஸ்லேட் செய்யப்பட்ட லைசன்ஸ் கீயை இலவசமாக பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய தகவல்களை உள்ளிட்டு Absenden என்னும் பொத்தானை அழுத்தவும். அரைமணி நேரத்திற்குள் கடவுச்சொல்லுக்கான சுட்டி உங்கள் மின்னஞ்சலை வந்து சேரும். 


மேலே உள்ள படம் போல் உங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் கிடைக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை அழுத்தி லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் In paint மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். 

Inpaint மென்பொருளை தரவிறக்க http://www.theinpaint.com/InpaintSetup3.exe



லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த படத்தை மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்து, குறிப்பிட்ட பகுதியினை மட்டும் தேர்வு செய்து அழிக்கவும். அந்த இடத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் முன் இருந்தபடியே அழகாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக