ஓரே கம்யூட்டரில் அனைவருக்கம் தனித்தனி டெஸ்க்டாப் விண்டோ வைத்துக்கொள்ள
நமது வீட்டில் உள்ள கம்யூட்டரை அனைவரும் பயன்படுத்துவோம். அவரவர்களுக்கு ஒவ்வோரு கம்யூட்டர் வாங்கி தருவது கஷ்டமே.ஆனால் ஒரே கம்யூட்டரையே அவரவர் விருப்பபடி ஆளுக்குஒரு டெக்ஸ்டாப் விண்டோ வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.நாம் டெக்ஸ்டாப்பில் விருப்பமான ஷார்ட்கட்கள் வைத்திருப்போம். விருப்பமான படங்கள் வைத்திருப்போம்.(அட சாமி படங்கள்தாங்க..)குழந்தைகளுக்கு விருப்பமான படங்கள் வைக்க விரும்பும்.இந்த சாப்ட்வேரில் ஒரே கம்யூட்டரையே ஆறு பேர் விதவிதமான டெக்ஸ்டாப் கொண்டு உபயோகிக்கலாம். இந்த சாப்ட் வேர் மொத்தம் 7 எம்.பி.குள் தான் உள்ளது.இதை பதிவிறக்க இங்கு http://www.4shared.com/account/file/239369396/af3fa207/setup_cubedesktop.htmlசெய்யவும்.இதை பதிவிறக்கி உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட படம் வரும்.
இதில் உள்ள கியூப் படத்தை (ஆறாம எண்ணுக்கு பக்கத்தில்) கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஆறு விண்டோவினை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக்கொடுத்துவிடுங்கள்.அவர்கள் விரும்பிய படத்தை வைத்துக்கொள்ளட்டும். Ctrl + உடன் அவர்களுக்கு ஒதுக்கிய எண்ணை தட்டச்சு செய்ய அவரவர் விண்டோக்கள் ஓப்பன் ஆகும்.
அவரவர் விண்டோக்களில் அவர்களுக்கு தேவையான சாப்ட்வேர்கள் - ஷார்ட்கட்கள் வைத்துக்கொள்ளலாம். அதற்கு முன்பு சொன்னபடி கியூப் கிளிக் செய்து வரும் விண்டோவில் அதில் உள்ள Utilities கிளிக் செய்ய உங்களுக்கு Manage icons வரும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதில் விண்டொவில் உள்ள அனைத்தும் காண்பிக்கும். நீங்கள் எந்த டெக்ஸ்டாப் எண்ணுக்கு எந்த அப்ளிகேஷன் வேண்டுமோ அந்த கட்டத்தில் டிக் செய்து இறுதியாக அப்ளை செய்துவிடுங்கள். நீங்கள் தேர்வு செய்த விண்டோவில் தேர்வு செய்த அப்ளிகேஷன்கள் மட்டும் இருப்பதை காணலாம்.
வேண்டிய வடிவங்களிலும் தேர்வினை செய்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக