meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

புதன், மே 02, 2012

                                போட்டோ மேஜிக்


பூக்களை கொண்டு அழகிய மாலைகள் தொடுப்பது அதில் கை தேர்ந்தவர்களால்தான் முடியும். ஆனால் பூங்கொத்தை(பொக்கே) யார் வேண்டுமானாலும் செய்யலாம்.அதைப்போல் போட்டோஷாப் மூலம் அழகிய டிசைன்கள் செய்யலாம். ஆனால் அனுபவம் வேண்டும். இந்த சாப்ட்வேர் நாமே பொக்கே செய்வது மாதிரி.இதில் கொடுத்துள்ள டூல்களை கொண்டு நிமிடத்தில் போட்டோஷாப்பில் செய்வதுபோன்று போட்டோக்களை நாமே ரெடி செய்துவிடலாம். 4 எம்.பி. கொள்ளவு உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க http://www.4shared.com/file/251546171/ad26298f/magicphotom.html செய்யவும்.இதை பதிவிறக்கம செய்து உங்கள் கணிணியில இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலப்புறம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட டூல்கள் இருக்கும்.
முதலில் நீங்கள் Back Drop கிளிக் செய்து பேக்கிரவுண்ட் படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் புகைப்படததை தேர்வு செய்ததும் அது வலது மூலையில் வந்து அமர்ந்து கொள்ளும். அதை கர்சரால் இழுத்து வந்து உங்களுக்கு தேவையான இடத்தில வைத்துக் கொள்ளவும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
புகைப்படங்கள் வைத்துவிட்டீர்களா...ரைட் இனி டூலில் உள்ள Mask கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த டூல் எதற்கு என்றால் படத்தை சுற்றி வேண்டிய டிசைனை நாம் போட்டுக் கொள்வதற்காக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் மாஸ்க் டிசைன் அனைத்துபடங்களிலும் போட்டுள்ளேன்.
அடுத்து கிளிப் ஆர்ட்..இதிலும் 20 புகைப்படங்கள் உள்ளது. அதில் எது தேவையோ அதை கிளிக் செய்து வேண்டிய இடத்தில் கர்சரால் இழுத்துவந்து விடவும்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
கிளிக் ஆர்ட் டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
அடுத்துள்ளது கார்ட்டூன்.இதில் விதவிதமான கார்ட்டூன் புகைப்படங்கள் உள்ளது. இதில் எந்த படம் தேவையோ அதைகிளிக் செய்து படத்தில கொண்டுவரலாம்.குழந்தை படங்களை இந்த கார்ட்டூன் படம் கொண்டு அசத்தலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்தது அவுட் லைன்.சிலர் வேடிக்கையாக சொல்வார்கள். உன்னை சுற்றி ஒளிவட்டம் இருக்குபார் என்று. இந்த டூல் மூலம் உண்மையான ஒளிவட்டத்தை நாம் கொண்டுவரலாம்.வேண்டிய புகைப்படத்தின் மீது கிளிக் செய்து ஒளி வட்டத்தை தேர்வு செய்ய புகைப்படத்தின் மீது ஒளிவட்டம் வந்துவிடும் .கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதைப்போல் அவர்கள் கற்பனை வாக்கியத்தையும் சேர்க்கலாம்.வேண்டிய டிசைனை தேர்வு செய்து கீழே உள்ள டெக்ஸ்டில் வாக்கியத்தை தட்டச்சு செய்து ஒ.கே. கொடுத்தால் வாக்கிய்ம் வந்துவிடும்.(தமிழினில் கூட வாக்கியம் அமைக்கலாம்)
அனைத்து வேலைகளும் முடிந்தது. கடைசியாக படத்திற்கு ப்ரேம். அமைக்கவேண்டும். வேண்டிய ப்ரேம் தேர்வு செய்து கிளிக் செய்தால் படத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அனைத்து வேலைகளும் செய்து முடித்தபின் இதை வேண்டிய இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.இதில் உள்ள எல்லா டூல்களையும் உபயோகித்து டிசைன் செய்த படம் கீழே:-

பயன்படுத்தி பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக